Tuesday, September 29, 2015

ஒழுக்கம் என்றால் என்ன?

ஒழுக்கம் என்றால் என்ன?
 
ஒழுக்கத்தை உருவாக்கவேண்டும் என்கிற தவிப்பு தலைமை நிலையில் இருக்கும் பலருக்குஏற்படுகிறது. ஒழுக்கம் என்றால் என்ன என்கிற புரிதலை முதலில் ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.
 
 வேலை பார்க்கும் சூழ்நிலையில் ஒரு ஒழுங்குநிலையைக் கொண்டுவருவது தான் ஒழுக்கம் என்று பலரும் கருதுகிறார்கள்.
 
இதற்க்கு பெரிதாக முயற்ச்சிகள் எதுவும் தேவையில்லை. ஒழுக்கம் குறித்து ஒன்றும் பேசாமல் உரிய சூழ்நிலையை உருவாக்கினாலே நிலமை கட்டுக்குள் இருக்கும்.
 
இதில் சிலருக்கு வழிகாட்டுதல்கள் தேவைப்படக்கூடும். ஆனாலும் கூட ஒரு நிறுவணத்திலோ பணியிடத்திலோ இந்த்ச் சூழலை உருவக்குவது எளிதான விஷயம் தான்.
 
ஆனால் துரதிருஷ்ட வசமாக என்ன நடக்கிறது தெரியுமா? நீங்கள் விரும்பும் ஒன்றை யாரையாவது செய்ய வைப்பதற்க்காக நிர்பந்திப்பது என்று தான் பலரும் கருதிக்கொண்டிருக்கிறார்கள்.
 
எனவே ஒழுக்கம் என்றாலே யாரையாவது கட்டுப்படுத்துவது, கண்டிப்பது, தண்டிப்பது, தட்டிவைப்பது, என்றெல்லாம் தவறான புரிதல்கள் உலவுகின்றன. இதுவல்ல ஒழுக்கம்.
 
ஒருவர் புதியதாக ஒன்றை கற்றுக் கொள்வதற்காக திறந்த மனதுடன் இருப்பாரேயானால் அதன் பெயர் தான் ஒழுக்கம். கற்றுக் கொள்வதன் அம்சமே ஒழுக்கம் என்பது. எவெரெவர் எந்த நிலையில் இருந்தாலும் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் இயல்பு எப்போதும் அவசியம். இதற்க்கு என்ன தேவை என்றால் செய்கின்ற வேலைகளில் முழு ஈடுபாடும் அர்ப்பணிப்பும் தான்.
 
ஈடுபாடு இல்லாமலேயே வேலை செய்தால் செய்வதையே திரும்பத்திரும்ப செய்து கொண்டு இருப்பார்களே தவிர புதிதாக எதையும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.
 
புதிய சிந்தனைகள் யோசனைகள் எல்லாம் உருவாவது கற்றுக்கொள்வதற்கான திறந்த மனம் இருக்கின்ற போதுதான்.
 
ஒரே வேலையை ஒரே மாதிரி பலர் செய்து கொண்டிருப்பார்கள். அதில் ஏதாவது எளிய‌ ஒரு யோசனையை யாரவது சொன்னால் "அடேடே இத்தனை நாட்கள் இதை கவணிக்காமல் விட்டு விட்டோமே" என்று தோன்றும்.
 
உதாரணமாக தரையை தூய்மை செய்கிர வேலையை ஆண்டாண்டு காலமாய் செய்து வருகிறோம். அதி சின்னதாய் ஒரு புதுமையை ஒருவர் புகுத்திய பிறகு அதன் அடிப்படையே மாறிவிட்டது.
 
அதே நேரம் கற்றுக்கொள்ளும் மனநிலையை உடையவர்களிடம் தான் புதிதாக ஏதவாது யோசனைகள் தோன்றும். அந்த மாதிரியானவர்களை தொடர்ந்து நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
 
அதே நேரம் பலரையும் நீங்கள் அந்த மாதிரி ஊக்குவிக்கும் போது பலவிதமான யோசனைகள் வரும். அது நூறு எண்ணிக்கை கூட வரலாம். அதில் உருப்படியான இர‌ண்டு அற்புதமான பலன் தருவதைக் காணலாம்.
 
உங்கள் நிறுவணத்தில் இத்தகைய கற்றுக்கொள்ளல் நிகழ்கிறதா என்பதை கண்காணிக்க வேடியது அவசியம். அப்படி செய்யும் போது அது வளர்ச்சிக்குத் தானே என்றும் சந்தேகப்பட்டு அல்ல என்பதை நீங்கள் தெளிவு படுத்த வேண்டியது அவசியம்.
 
இத்தகைய திறந்த நிலை ஏற்பட்டால், ஒழுக்கம் என்பது எல்லோரும் விரும்பிக்கொண்டு வரும் விசயமாகும்.
 
மாறாக ஒருவர் மற்றவர் மீது ஒழுக்கத்தை திணிக்க முற்ப்பட்டால். அது சர்வாதிகாரத்தில் போய் முடியும்.

எனவே ஒரு குழுவிலோ ஒரு நிறுவணத்திலோ ஒழுக்கத்தை கொண்டு வர ஒரே வழி ஈடுபட்டைக் கொண்டு வரவேண்டியதுதான். ஈடுபாடு இல்லாத இடத்தில் ஒழுக்கத்தை கொண்டு வர முயற்ச்சித்தால் அதை உடைப்பதற்க்கு ஆயிரமாயிரம் வழிகளைக் க‌ண்டறிவார்கள். பணிச்சூழலில் ஈடுபாட்டைக் கொண்டு வாருங்கள், நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா ஒழுக்கங்களும் தாமாக வரும்.

No comments:

Post a Comment