Tuesday, September 29, 2015

சிகரத்தை அடைவதற்க்கு சுலபமான‌ வழிகள்! ஆனந்தம்

சிகரத்தை அடைவதற்க்கு சுலபமான‌ வழிகள்! ஆனந்தம்      
வாகனம் ஓட்டுவது என்று தேர்ந்தெடுத்துவிட்டால் போக்குவரத்து நெரிசலை ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆரோக்கியம் குறித்து அக்கறை கொண்டிருந்தால், நாக்கு கேட்டதையெல்லாம் அதற்கு கொடுக்க முடியாது! வருமானம் என்றால் வருமான வரியும் உடன் வரும்.

வாழ்க்கையில் நீங்கள் எதைத்தேர்ந்தெடுத்தாலும் அதோடு ஒட்டிப்பிறந்த நன்மைகளோடும் தீமைகளும் தான் அதுவரும். முட்களற்ற ரோஜாவைத் தேடுவது எவ்வளவு மடத்தனம்! நானயத்தின் ஒரு பக்கத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அதன் மறுபக்கத்தையும் சேர்த்துதான் நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். பிரச்சனைகளற்ற ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்று கேட்க்காதீர்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை மகான்க‌ளால் கூட வாழமுடியாது! அப்படிப்பட்ட வாழ்க்கை எதுவும் கிடையாது!
 
கனவுகள் பெரிதாகும் போது பிரச்சனைகளும் பெரிதாகும். நீங்கள் நடக்க விரும்பும் போது ஒருசில பிரச்சனைகள் மட்டுமே இருக்கும். அதே நேரம் ஒரு ஓட்டப்பந்திய வீரனாக பந்தயங்களில் கலந்து கொள்ள நீங்கள் விரும்பினால், பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது வெளிப்படை. வெறுமனே வாழ்க்கையை ஓட்டினால் மட்டும் போதும் என்று நீங்கள் நினைத்தால், பிரச்சனைகள் குறைவு தான். ஆனால் உங்கள் முழுத்திறனையும் வெளிப்படும் விதத்தில் வாழ நினைத்தால், நீங்கள் பெரிய பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
 
செதுக்கப்பட நீங்கள் தயாராக இருந்தால் தான், துதிக்கப்படும் ஒரு சிலையின் நிலையை அடையும் தகுதியை உங்களால் பெற‌ முடியும். சிகரத்தை அடைவதற்க்கு சுலபமான‌ வழிகள் ஏதும் கிடையாது. சிகரத்தை அடைந்தவர்கள் அதை சுலபமாக சென்றடையவில்லை.
 
என்ன இருந்தாலும் வரலாற்றை படிப்பவனுக்கும், வரலாற்றைப் ப‌டைப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும்?

வெள்ளியின் கதை:     
பைபிள் வாசிப்புக் குழு ஒன்றில் இப்படி ஒரு வாசகத்தைப் படித்தனர்: "வெள்ளியை சுத்தப்படுத்தும் மாசு அகற்றும் நபர் போல அவர் அமர்ந்திருப்பார்." கடவுளின் குணம் மற்றும் இயல்பு குறித்து இங்கு கூற முற்படுவது என்ன?
      
அந்த வாரம் அக்குழுவில் இருந்த ஒரு பெண்மனி வெள்ளி உலோகக்கொல்ல‌ன் ஒருவன் வேலை செய்வதைப் பார்ர்கச் சென்றாள். அங்கே முதலில் கொல்லன் ஒரு துண்டு வெள்ளியை  எடுத்து தீயில் வைத்து அது சூடாவதற்காக காத்திருந்தான். "வெள்ளியை தீயின் நடுவில் வைக்கவேண்டும். ஏனெனில் அங்கே தான் சூடு அதிகமாக இருக்கும், அது அனைத்து மாசுகளையும் எரித்துவிடும்" என்று எடுத்துரைத்தான் கொல்லன். "முழுநேரமும் உலையின் முன்னாலேயே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது உண்மையா?" என்று அந்தப் பெண்மனி கேட்டாள். "உண்மைதான்! முழுநேரமும் உட்கார்ந்திருப்பது மட்டுமல்லாமல், வெள்ளியில் இருந்து கண்களை அகற்றவும் கூடாது" என்றும் தெரிவித்தான். "அதிகப்படியான் ஒரே ஒரு கணம் வெள்ளியை நெருப்பில் விட்டுவிட்டால் அது உருகி ஓடிவிடும்". உடனே அப்பெண்மனி "வெள்ளி முழுவதும் மாசு அகற்றப்பட்டுவிட்டது என்பது உனக்கு எப்படித் தெரியும்?" "ஓ! அது ரொம்ப சுலபம்...... என் உருவத்தை நான் அதில் பார்க்கும் போது!"

வாழ்க்கைப் பிரச்சனை உங்களை அதிகமாகத் தாக்குவதாக நீங்கள் உணர்ந்தால், கடவுள் உங்கள் மீது தான் வைத்த கண்னை எடுக்கவில்லை என்பதையும், அவரது பிம்பம் உங்களில் தெரியும் வரை அவர் தனது கண்களை அகற்ற மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு தீர்கதரிசி உறங்கிக்கொண்டிருக்கிறான். கடவுள் மனிதனாக மாறியதற்க்கு காரணம், மனிதன் மீண்டும் கடவுளாக ஆக வேண்டும் என்பதற்காகதான். வாழ்க்கை என்பது உங்களை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு உலை அல்ல. ஜொலிக்கும் வெள்ளியாக மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு உலை!

No comments:

Post a Comment