தலைவராக விரும்புகிறீர்களா?
இந்த உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவிதமான மக்கள் தங்களைத் தாங்களே இயக்கிக் கொள்பவர்கள். இன்னொரு விதமான மக்கள் இருக்கிறார்கள் இவர்களை வேறு யாராவது தள்ளி விட்டுக்க்கொண்டே இருக்க வேண்டும். இவர்கள் எப்பொழுதும் அடிமைகளாகவும், வேலையாள் போலவும் தான் இருப்பார்கள். ஆனால் தங்களைத் தாங்களே இயக்கிக் கொள்ளும் மக்கள் எப்பொழுதும் தலைவர்களாக இருப்பார்கள்.
நீங்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையை கையாள வேண்டும் என்று விரும்பினால், அது வீடோ அல்லது அலுவலகமோ, அந்த சூழ்நிலைக்கு முழுமையாக பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய எல்லைகளைக் கடந்து அந்த சூழ்நிலைக்கான தீர்வுக்காக பணி புரியத்தயாராக இருக்க வேண்டும். இப்படித் தயாராகும் போது உங்களை வேறு யாரும் இயக்கத் தேவையில்லை. உங்களை நீங்களே இயக்கிக் கொள்வீர்கள். தேவையான சுதந்திரமும் உங்களுக்குக் கிடைக்கும். ஒரு தாலைவராக ஏற்றுக் கொள்ளபடுவீர்கள்.
எனக்கு அது வராது, என்னால் அது முடியாது, நான் இவ்வளவு தான் செய்யமுடியும் என்று எப்பொழுதும் தன்னைத் தானே குறுக்கிக் கொள்பவர்கள் என்றென்றும் அடிமைகளாகவும், மற்றவர்களால் விரட்டப்படும் நிலையில் தான் இருப்பார்கள். எனவே தலைவராக விரும்புகிறீர்களா? அல்லது அடிமையாகவே காலத்தை கழிக்க விரும்புகிறீர்களா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்
No comments:
Post a Comment