உன்னால் முடியும்
புதிய உத்வேகத்தோடு புறப்படு
புதுமைகள் செய்யும் நோக்கோடு
விதைக்கிற விதைதான் முளைக்கும்
வீரியமும் கவனமும்
காரியத்தின் அனுகூலங்கள்
எண்ணி எண்ணி ஆனந்திப்பது சுலபம்
எது வந்தாலும் சாதிப்பது கடினம்
கற்பனைக்கோட்டை எல்லையின்றி விரியும்
காணி நிலம் நிஜமென்றால்
அடையும் கடினம் புரியும்
நிழல்களின் அடையாளத்தில்
நிஜங்களைத் தொலைக்காதே
வீணான கற்பனயில்
காலத்தை நகர்த்தாதே
நீ சாதிக்கப் பிறந்தவன்
மணமில்லா மலர் மணம் பரப்புமா
திறனில்லா செயல் மனம் கவருமா
உளியின் கூர்மை பாறையைப் பிளக்கும்
உள்ளத்தின் கூர்மை வெற்றியைக் குவிக்கும்
பத்தோடு பதினொன்றாய் வாழ்ந்தது போதும்
பதிவுகள் உன்னாலென்று வாழ்த்தட்டும் தேசம்
சரியான பார்வை சரியான தீர்வு
முறையான வாழ்வே முன்னேற்றத்தின் சுவடு
உன்னை அறி முதலில்
உயரும் வழி எதிரில்
மாற்றம் தானே நிரந்தரம்
தோல்வி எப்படி தினம் வரும்
தடுமாற்றம் தோல்வி தகரும்
நீ முயன்றால் எதுவும் முடியும்
புதிய உத்வேகத்தோடு புறப்படு
புதுமைகள் செய்யும் நோக்கோடு
விதைக்கிற விதைதான் முளைக்கும்
வீரியமும் கவனமும்
காரியத்தின் அனுகூலங்கள்
எண்ணி எண்ணி ஆனந்திப்பது சுலபம்
எது வந்தாலும் சாதிப்பது கடினம்
கற்பனைக்கோட்டை எல்லையின்றி விரியும்
காணி நிலம் நிஜமென்றால்
அடையும் கடினம் புரியும்
நிழல்களின் அடையாளத்தில்
நிஜங்களைத் தொலைக்காதே
வீணான கற்பனயில்
காலத்தை நகர்த்தாதே
நீ சாதிக்கப் பிறந்தவன்
மணமில்லா மலர் மணம் பரப்புமா
திறனில்லா செயல் மனம் கவருமா
உளியின் கூர்மை பாறையைப் பிளக்கும்
உள்ளத்தின் கூர்மை வெற்றியைக் குவிக்கும்
பத்தோடு பதினொன்றாய் வாழ்ந்தது போதும்
பதிவுகள் உன்னாலென்று வாழ்த்தட்டும் தேசம்
சரியான பார்வை சரியான தீர்வு
முறையான வாழ்வே முன்னேற்றத்தின் சுவடு
உன்னை அறி முதலில்
உயரும் வழி எதிரில்
மாற்றம் தானே நிரந்தரம்
தோல்வி எப்படி தினம் வரும்
தடுமாற்றம் தோல்வி தகரும்
நீ முயன்றால் எதுவும் முடியும்
No comments:
Post a Comment