Friday, September 11, 2015

குறிக்கோளுடன் சேர்ந்த எண்ணம்

குறிக்கோளுடன் சேர்ந்த எண்ணம்

ஆழ் மன சிந்தனைக்கு அதன் வெற்றிக்கு அடிப்படையாக அமைவது குறிக்கோளுடன் சேர்ந்த எண்ணமும் முக்கியத்துவம் பெறுகிறது, குறிக்கோளின் வலுவினை விளக்க கீழ்கண்ட எடுத்துக்காட்டு உதாரணமாக அமைகிறது, ஒரு தடவை அமெரிக்க ஜனதிபதி ஜான்கென்னடி ஒரு பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் சகசமான முறையில் உறையாடும் போது ஒரு மாணவனைப் பார்த்து புன்னகையுடன் – உன் எதிர்காலம் என்ன? – என்று கேட்டார் உடனே அவன் பளீரென்று இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும் இது தான் என் லட்சியம் என்றான், உடனே ஜனதிபதியும் நன்று என்று வாழ்த்தி சென்றார், அந்த பள்ளி மாணவனின் லட்சியம் – குறிக்கோள் – எண்ணம் ஜனதிபதியாகவேண்டுமென்ற உயர்ந்தஆழ்மன சிந்தனை அவனை அமெரிக்க ஜனதிபதியாகவே ஆக்கியது, அது வேறுயாருமல்ல ….. அவன்தான் புகழ்பெற்ற பில்கிளிண்டன் எனவே தீர்ககமான தீர்மாணமே புகழின் உச்சிக்கும் தான் நினைத்த செயலுக்கு கால்கோளாக அமைகிறது,மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழியும் இதனையே விளக்கிறது.
 
எண்ணமே திண்ணமாகி அதுவே மனத்திரையில் ஆழமாக பதிந்து நம் எண்ண உணர்வுகளே – இந்தபிரபஞ்மென்ற வாயுமண்டலத்தில் எலக்ட்ரானிக் – அலைவரிசைகள் போல நம் மூளைியின் அலை வரிசைகளினால் தூண்டப்பட்டு அது வே செயலாக மாறுகிறது. ஒருவரின் எண்ணங்கள் முற்பிறவியில் தான் எதன்பால் மிகுந்த அன்பு செலுத்தி அதனையே சர்வ சதா காலமும் எண்ணிக்கொண்டவனின் எண்ணங்களே அடுத்த பிறவியில் அதுவாகவே பிறப்பான் என்பது மூததையர்கள் கண்ட உண்மை இதனையே விஜய் டிவி மகான்கள் என்ற நிகழ்ச்சியில் மான – மீன் கதையாக ஒரு ஆச்சாரியார் விளக்குவது ஒளிபரப்பட்டது, அதில் ஒரு மகா முனிவர் கடுமையாக தவங்கள் பெற்று காட்டில் தனியாக ஒரு ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வரும்போது அதிகாலையில் அருவியில் நீராட சென்றுள்ளார் அப்போது அவர் பார்வையில் அருவியின் அருகிலுள்ள சுனையில் நிறைமாத மான் ஒன்று நீர் அருந்திக் கொண்டிருந்தது இதனை ஒரு சிறுத்தை பார்த்து விட்டது அதனைக் கண்ட மான் உடனே உயிர் பதறி பாறையின் இடுக்குக்ள வழியாக தாவித்தாவி சென்றது, இதன் வேகத்திலும் பயத்திலும் தன் குட்டியை ஈன்றுவிட்டது பின்னும் ஓடும் போது தாய்மானை சிறுத்தை கடித்து உணவாக்கி விட்டது, இந்த நிகழ்வை கண்டு கொண்டிருந்த முனிவர் அனாதையாக உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் குட்டி மானை தானே எடுத்து வந்து ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வந்தார், தானே நேரிடையாக உணவழித்து அதனுடன் தன் வாழ்நாள் முழுவதும் அதனுடனயே கழித்து வந்தார், மான் வளர்ச்சி பெற்றது, முதிர்ச்சி பெற்ற முனிவரோ நமக்கு பின் இந்த மானின் கதி என்ன? என்பது பற்றி கவலையிலேயே தன் உயிர் பிரிந்தது, அன்னாரின் ஆழ்மனம் அந்த மான் மீதே இருந்ததால் அடுத்த பிறவியில் மானாகவே பிறந்தார் என கதையை சிந்தனையின் வழியே செயல் என்று கதையை முடித்தார், இது போன்று மீன் கதையை கூறுகையில் யோக ஆசனநிலை – தவ நிலை என்ற அடிப்படையில் ஒரு முனிவர் தன் ஆழ்மனதை உள்ளடக்கி நீருக்கு அடியில் தவம் செய்து கொண்டிருந்தார், அப்போது அவரின் எண்ண அலைகள் தனது ஞான உலகிலிருந்து பிரிந்து சுற்றுப்புறத்தின் பால் கவனம் ஈர்க்கப்பட்டது. அப்போது தனது உடலை சுற்றி ஒரு மீனின் சந்ததிகள் சுமார் ஆயிரக்கணக்கான மீன்கள் உணவை தேடுவதும், சந்தோசமாக அங்குமிங்கும் கூட்டமாக அலைவதைப் பார்த்து அந்த நிலை வாழ்க்கையின் பால் மனம் ஈர்க்கப்பட்டார். உடனே தான் செய்த தவத்தை விட்டுவிட்டு திருமணம் செய்யவேண்டுமென்ற எண்ணம் கொண்டு தான் பெற்ற தவ வலுமையால் இளமை உருவம் கொண்டு ஒரு மன்னனின் பெண்களான சுமார் 100 பேரை மனமுடித்து இல்லரத்தில் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து தான் எண்ணம் கொண்ட மீன் குஞ்சுகள் போல் சுமார் ஆயிரக்கணக்கான வம்சா வாரிசுகளை பெற்றார், எனவே இந்த தவ முனியின் எண்ணமும் சிந்தனையும் ஆழ்மன சிந்தனையின் செயலாகவே வெற்றி கண்டது. என்று விளக்கமளித்தார் ஆச்சாரியார்,
 
எனவே ஆழ்மனதின் சிந்தனைகள் குறிக்கோள்களாகவும்,குறிக்கோள்கள் சிந்தனை படலங்களாகவும் அதுவே காந்த அலைகளாகவும் மாறி உண்மை நிகழ்வுகளாகவே அமைய வழி செய்கிறது. எந்த காரியமும் என்னால் முடியும் அது நடந்தே தீரும் என நம்பிக்கை உண்டு என்று மீீண்டும் மீண்டும் கூறி ஆழ்மனதை திடப்படுத்தினால் அதுவே மந்திர சக்தியாக மாறி அற்புதமாக மாற்றிக் காட்டுகிறது, இந்த முன்னேற்ற பாதையில் பயணிக்க குறுக்கீடுகளாக மூன்று எதிரிகளை சந்திக்கலாம், அதில் ஒன்று உங்களது எதிர்மறையான சிந்தனைகள் – நன்மையையோ நோக்கி பயணிககையில் நன்மையான பயன்கள் எவ்வாறு உருவாகிறதோ அது போலவே உங்களின் எதிர்மறை ஆழ்மனச்சிந்தனையால் எதிர்மறை விளைவுகளையும் சந்திக்க முடியும், எனவே இதனை முறியடிப்பது உங்கள் சிந்தனையில்தான் உள்ளது. இதற்கு அடுத்தாற்போல் – அவ நம்பிக்கை – பொதுவாக மனிதர்கள் அவநம்பிக்கையில் – நம்பிக்கையுடையவர்களாகவும், நம்பிக்கையில் அவநம்பிக்கை யுடையவர்களாகவும் வாழ்கின்றனர், எனவே அவர்களின் தோல்விக்கு இதுவும் காரணமாகிறது. அடுத்து முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது – தன்பயம் – தன்பயம், மனிதன் உயர்ந்த குறிக்கோள் கொள்ளாமல் இருப்பதற்கும் பெரிய காரியங்கள் செய்யாமற் போவதற்கும் காரணம் அவன் உள்ளத்தில் புதைந்திருக்கும் அச்சமே. மற்றவர்களின் விமர்சனத்தால் நம் அச்ச உணர்வு மிகப்படுகிறது. இதுவே ஆழ்மன சிந்தனைக்கு தடைகல்லாகவும், உஙகள் மனக்கவலைக்கு ஆஸ்திவாரமாகவும் செயல்படுகிறது.

இநத தடைகள் எல்லாம் மீறி எதனையும் என்னால் சாதிக்க முடியும் இறைவன் கருணை மிக்கவன் நாம் விரும்பியதை நிச்சயம் குறைவற்று கொடுப்பார் எனக்கு இறைவன் தந்த வலிமை இருக்கிறது என்ற உங்கள் கருத்தை ஆழ்மனக் கட்டளையாக கொடுத்து கொண்டே மனச்சித்திரத்தை ஒடவிட்டு நீங்கள் வணங்கும் இறைவனிடம் உங்கள் கனவை நிறைவேற்ற விண்ணப்பம் செய்யுங்கள். இரவில் உறங்குவதற்கு முன், படுக்கையில் அமர்ந்தவாறே கண்களை மூடி கவனத்தை உங்கள் மூச்சில் குவியுங்கள் சில நொடிகளில் உங்கள் எணண அலைகள் அடங்கி கவனம் ஒரிடத்தில் குவியும் இதுவே தியான நிலைக்கு வந்துவிட்டிர்கள் இந்நிலையில் எவ்வளவுக் கெவ்வளவு உணர்ச்சியோடு நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையோடு கட்டளை கொடுக்கிறீர்களே அவ்வளவு விரைவில் உங்களுக்கு தேவையான அறிவு,திறமை,ஆற்றல், வசதி, வாய்ப்பு முதலீடு போன்ற அனைத்தும் உங்களை தேடி வரும்

No comments:

Post a Comment