Thursday, September 10, 2015

எதையோ தேடி எனது பயணம்!

எதையோ தேடி எனது பயணம்!

நாம் வாழுவதற்கு தயாராகி கொண்டு இருக்கிறோம், ஆனால் வாழ்வதில்லை. ஒவொரு நாளும் முழுமையாக வாழ முயற்சிகொள் ---- நானும் இதைதான் முயற்சி செய்கிறேன்

இற்றைக்கு சுமார் இருபந்தைந்து வருடங்களுக்கு முன்னராக ஆரம்பிந்த எனது பயணம் - எதையோ தேடி என்றவாறு தொடர்கிறது ...

வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்கள் பல, அவற்றுல் ஒரு சிலவையே பொக்கிஷங்களாகும் மற்றவை வடுக்கள் நிறைந்த அனுபவங்களாகவும், தோல்விச் சரித்திரங்களாகவுமே பதிவிக்கப்படுகின்றன.

“பொக்கிஷங்கள்” இனிமையானவை, ஒவ்வொரு மனிதனினதும் வாழ்க்கையில் ஏதோ ஒரு மூலையில் பொக்கிஷங்களும் பொதிந்துதான் கிடக்கின்றன என்பதுதான் நிசப்தமாகிப் போன உண்மை.

பொக்கிஷங்களுக்கான வடிவங்கள் பல, அவை நிச்சயமாக மனிதனுக்கு மனிதன் வேறுபாட்டையே காட்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட ரீதியிலானதொரு கருத்து.

“அப்படியானால் உனது பயணம் பொக்கிஷங்களைத் தேடியவாறா???
 என்று என்னிடம் கேட்கப்பட்டால், உண்மையில் அதற்கான பதில் என்னிடத்திலிருந்து “ஆம்” என்றவாறுதான் அமையும்.

என்னைப் பொறுத்தமட்டில் எந்தவொரு விடயம் ஒரு மனிதனது வாழ்க்கையில் அவனுக்கு மகிழ்ச்சியையும் பூரண  திருப்தியையும் கொடுக்குமோ, அதுவே அவனுடைய பொக்கிஷமாகும். 

ஆகவே மனிதனது வாழ்வியல் போராட்டங்கள் மற்றும் பயணங்கள் அனைத்துமே “பொக்கிஷங்களைத்” தேடியும் நோக்கியுமாகவே அமைந்து விடுகின்றன என்பதுதான் சத்தியமான உண்மை.

சோ பிரண்ட்ஸ்,  
பொக்கிஷத்தைத் தேடி நீங்களும் ஒரு பணயம் வைக்கலாமே???

முடியும் உன்னால் முடியும்

கருவிலேயே ஜெயித்தவன்(ள்) நீ

ஆம் .... உன்னுடன் வந்த லட்சக்கணக்கான உயிரணுக்களை பின்தள்ளி நீ மட்டுமே உன் தாயின் கருவறைக்கு  சென்றவன்(ள்) ஆதலால் கருவிலேயே ஜெயித்தவன்(ள்) நீ

தோல்விகளை கண்டு மனம் தளராதே தோல்விகளே உனது அனுபவம் அதுவே உனக்கு ஆசான் .

முயலும் ஜெயிக்கும் சமயத்தில் ஆமையும் ஜெயிக்கும் ஆனால் ... “முயலாமை” என்றுமே ஜெயித்தது இல்லை .

இன்று மாபெரும் வெற்றி பெற்றவர்கள் ஒவ்வொருவரும் பல தோல்விகளை சந்தித்தவர்களே

திட்டமிட்ட பின் செயல்பட தொடங்கு செயல்பட தொடங்கிய பின் திட்டமிடாதே  முடியும் உன்னால் முடியும்

முயன்றால் எதுவும் உன்னால் முடியும்


No comments:

Post a Comment