Friday, May 10, 2013

உங்கள் சிந்தனைக்கு சில...


** உங்களின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப ஆசைகளின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.. உங்களின் நிலை மேம்படைந்தால் மட்டுமே ஆசைகளின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்..

** சிறிய தவறுதான்,
ஆனால்—
நீங்கள் மறைக்க முயன்றால்,
அது வளர்ந்து
விசுவரூபமெடுத்து விடும்..

** வீட்டுக்கு வெளியே
ஒரு வீடு—
நீங்கள்
வேலை பார்க்கிற இடம்.
அதை நேர்த்தியாய்
வைத்துக் கொள்ளுங்கள்.

** நல்ல அறிவுரை வழங்குவது,
அல்லது
சரியான பாதையில் குழந்தைகளை
செலுத்துவது—இவையே 
பெற்றோர்களால் முடியக் கூடியது.
ஆனால்,
தன் சிறப்பியல்பை ஒருவன்
உருவாக்கி கொள்வதென்னவோ
அவனுடைய சொந்தக்
கைகளில்தான் இருக்கிறது..

**தகுதியான ஒன்றை செய்வதற்கு
தகுதியான சூழ்நிலைகள் வரட்டும்
என்று காத்திருக்காதீர்கள்.
சதாரண சூழ்நிலைகளையே
தகுதியானதாக்கி கொள்ளுங்கள்.

**மகிழ்ச்சி உணர்வு
இளமையோடு வைத்திருக்கும்
உங்கள் முகத்தை மட்டுமல்ல,
இதயத்தையும்,
நல்ல சிரிப்பின் மூலம் நமக்கும்,
நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும்
நாம் சிறந்த நண்பராயிருக்க முடியும்.

No comments:

Post a Comment