இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று..! அவன் சொன்னான்,
இடை விடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,.. சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன்.
ஆம்., அதிக விறகுகள் பெற வேண்டுமே என்றான் அவன்.
ஆனால்,
நீ, கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி என்று கேட்டான்!..
நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்..!
மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான்.
இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை,
மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்.
மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான்.
நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான்..
ஆனால்,
அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்..!
இப்போது தெரிந்தது அவனுக்கு நண்பனின் வெற்றி..
நீதி : ஓய்வையும் சாதனையாக்குவார்கள் அறிவாளிகள்..
No comments:
Post a Comment