Friday, May 17, 2013

இன்று ஒரு தத்துவம்


" கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே "

இந்த வாக்கியத்தை சற்றென்று பார்க்கும் போதுதோன்றுவது ... 

இது உன் கடமை என்றால் நீ செய்ய வேண்டும்.

அதற்கு பலனை எதிர்பார்க்க கூடாது... 

ஆழ்ந்து நோக்கினால் .. 

"கடமையைச் செய்" என்பது நிகழ்காலம்.

"பலன்" கிடைப்பது என்பது எதிர்காலம் .... 

எந்த ஒரு நல்ல காரியம் பண்ணுவதற்கும் நாளை (எதிர்காலம்) வரை காத்திராமல் அன்றே (நிகழ்காலம்) செவ்வென செய்ய வேண்டும் என்ற பொருள் விளங்கும்.

இதோ ஒரு சிறு கதை..

இரண்டு வயதான துறவிகள் தங்களது குருவை காண சென்று கொண்டிருந்த வேலையில் ... 

ஆற்றின் கரையினிலே ஒரு அழகிய பெண், ஆற்றை கடக்க முடியாமல் உட்கார்ந்து இருந்தாள். 

அவள் அவர்களிடம் ஆற்றை கடக்க உதவுமாறு கேட்டாள்... 

அதற்கு அந்த இரு முனிவர்களும் ஏதும் சொல்லாமல் ஆற்றை கடந்து சென்று விட்டார்கள்.

இவர்களுக்கு பின்னால் ஒரு இளந் துறவி வந்து கொண்டு இருந்ததை பார்த்த அந்த இளம்பெண்,

இளம் துறவியை பார்த்து என்னால் ஆற்றைக் கடந்து அக்கறைக்கு செல்ல முடியாது,எனவே என்னை அக்கறைக்கு செல்ல உதவுங்கள் என்று கேட்டாள்.

அந்த இளம் துறவி அந்த பெண்ணிடம் ஏதும் பேசாமல் தன் இரு கைகளினால் அந்த பெண்ணை தூக்கி தன் தோல் மீது சாய்த்தார்.

பின்பு ஆற்றில் இறங்கி நடந்து அக் கரையில் அந்த பெண்ணை இறக்கி விட்டு,ஏதும் பேசாமல் சென்று விட்டார்.

இந்த செயலை முன்னால் சென்று கொண்டு இருந்த இரண்டு முதிய துறவிகள் பார்த்தனர். 

பின்பு மூன்று நாட்கள் கழித்து அந்த இளம் துறவியை அந்த இரண்டு மூத்த துறவிகள் சந்திக்க நேர்ந்தது.

அப்போது அவர்கள் இருவரும் அந்த இளம் துறவியைப் பார்த்து,

"நம்ம குரு எந்த பெண்ணையும் சுமக்க கூடாதுன்னு சொல்லிருகாறு..."

நீர் ஏன் அன்று அந்த பெண்ணை உன் தோளில் சாய்த்து கொண்டு சென்றீர் என்று கேட்டார்கள். 

அதற்கு அந்த இளம் துறவி அந்த இரண்டு மூத்த துறவிகளிடம்,

"நான் அப்பொழுதே அந்த பெண்ணை இறக்கிவிட்டேன்.

நீங்கள் ஏன் அந்த பெண்ணை மூன்று நாட்கள் சுமந்து கொண்டு திரிகிறீர்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

இதன் கருத்து என்ன வென்றால்,

எந்த ஒரு நேரத்திலும் கெட்ட செயல்கள் என்று நாம் நினைப்பது நமது மனதில் நீங்காமல் இடம் பெற்று சதா மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். 

அதை அழிப்பது கடினம்,

யார் செய்த நல்ல காரியங்களையும் மனதில் தங்குவதை விட...

No comments:

Post a Comment