Wednesday, May 15, 2013

எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது...


பணி நியமனம் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் குழு கலந்தாய்வு என்ற முக்கிய செயல்பாட்டில், எதை செய்ய வேண்டும் மற்றும் செய்யக்கூடாது என்பதை தெரிய வேண்டியது அவசியம்.

செய்ய வேண்டியவை

* சர்ச்சைக்குரிய தலைப்புகள் குறித்த விரிவான தகவல்களை, தினசரி செய்திகள், தலையங்கங்கள் மற்றும் நிபுணர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் ஆகியவற்றைப் படித்து சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* நிகழ்ச்சிகளை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* அடிப்படை மொழி இலக்கணம், உச்சரிப்பு மற்றும் வெளிப்படுத்தும் முறை போன்ற திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும்.

* முடிந்தளவு எளிய மொழி நடையிலேயே பேசவும்.

* லாஜிக் அடிப்படையில், உங்களின் விபரங்களை தொகுத்து வைத்துக்கொள்ளவும்.

* உங்களின் எதிரே அமர்ந்து பேசும் நபரை புன்முறுவலுடன் அணுகவும்.

* உங்களின் அணுகுமுறையில், பரந்த மனப்பான்மையோடு இருங்கள்.

* உங்களின் வாதத்திற்கு சரியான ஆதாரத்தைக் கொடுக்கவும்.

* சார்பற்றவராக இருக்கவும். சமநிலையைக் கடைபிடிக்கவும்.

* மற்றவர்கள் வெளிப்படுத்தும் சிறந்த கருத்துக்களை ஆமோதித்து பாராட்டவும்.

* நல்ல கவனிப்பாளராக இருக்கவும்.

* பொறுமையாகவும், அமைதியாகவும் பேசவும்.

* உங்களின் கருத்தை வலுவாக்க, பொருத்தமான மேற்கூறுகளையும், உதாரணங்களையும் எடுத்துக்கூறவும்.

* கூச்சப்பட்டு, அமைதியாக இருக்கும் நபர்களை, பேசுமாறு உற்சாகப்படுத்த வேண்டும்.

* அனைத்து உறுப்பினர்களையும் சுழற்சி முறையில் பார்க்கவும், ஒரு சிலரையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டாம்.

* உங்களின் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், உரையாடல் முழுவதும் தொடர் வேண்டும்.

* மிதமான நகைச்சுவையை கடைபிடிக்கவும்.

* உங்களின் உடல்மொழியை சோதித்து, சரிசெய்துகொள்ள வேண்டும்.

* யாரேனும் உங்களின் கருத்தைக் கேட்டால், அதை பேசுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு பேசவும். தவிர்க்க நினைக்க வேண்டாம்.

* ஒருங்கிணைந்து குழுவாக செயல்படுவதில் உங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தவும்.

* பொறுமையாக இருக்கவும். ஆதிக்கம் செய்ய நினைக்க வேண்டாம்.

* குழு நன்மைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனிப்பட்ட நன்மைக்காக அல்ல.

* முடிந்தளவிற்கு, உங்களின் கருத்துக்களை உதாரணங்களுடன் விளக்கவும்.

* நேர ஒழுக்கத்தை தவறாமல் கடைபிடிக்கவும்.

* நல்ல முறையில் ஆடை அணிந்திருக்க வேண்டும்.

* வெற்றி குறித்து நம்பிக்கையுடன் இருத்தல் வேண்டும்.

* பேசும்போது சரியான வேகத்திலும், தெளிவாகவும் பேச வேண்டும்.

* ஒரு மாற்றுக்கருத்தை தெரிவிக்க விரும்பினால், இந்த விஷயத்தை இந்த விதத்திலும் பார்க்கலாம் என்று சொல்லி, உங்கள் கருத்தை நயமாக விளக்க வேண்டும்.

எவற்றை செய்யக்கூடாது

* விவாதத்தின்போது உணர்ச்சி வசப்படக்கூடாது.

* வரட்டு விவாதத்தில் ஈடுபடக்கூடாது.

* தனி நபரையோ அல்லது குழுவையோ உதாசீனம் செய்யக்கூடாது.

* கொடுக்கப்பட்ட நேரத்தில் பெரும்பகுதியை நீங்களே எடுத்துக்கொள்ள நினைக்கக்கூடாது.

* பிறரின் கோபத்தை தூண்டும் வார்த்தைகள் அல்லது சைகைகளைப் பயன்படுத்தக்கூடாது.

* பேசும்போது, உணர்ச்சிவசப்பட்டு, டேபிளை தட்டக்கூடாது.

* மற்றவர்கள் பேசுவதை குறுக்கிட்டு தடுக்கக்கூடாது.

* குழுவில் யாரேனும் உங்களின் கருத்தை மடக்கும் விதமாக பேசினால், அவருக்கு சூடான பதிலடி தர வேண்டும் என நினைத்தல் கூடாது.

* பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும். யாரையும் ஆதிக்கம் செலுத்த நினைக்கக்கூடாது.

* அதிக சத்தமாக பேசக்கூடாது. அதற்காக குசுகுசுவென்றும் பேசக்கூடாது.

* You see, I mean, Ya Ya போன்ற சொற்களைப் பயன்படுத்தக்கூடாது.

* நீங்கள் குழம்பி விட்டீர்கள் என்பதை காட்டிக்கொள்ளக் கூடாது.

* குழுவில் வேறு நபர் சொன்ன கருத்தையே திரும்ப சொல்லக்கூடாது.

* நாகரீகமற்ற விஷயங்களை வெளிப்படுத்தக்கூடாது.

* உங்களின் கருத்து ஏற்கப்படவில்லை என்றறால், அதற்காக, கோபப்படக்கூடாது. ஏமாற்றமடையக்கூடாது.

No comments:

Post a Comment