Monday, May 6, 2013

நேற்றைய நினைவுகளே இன்றைய நிஜங்கள்…


- ருத்ரன் 

” நினைப்புதான் பொழப்பு கெடுக்குது…..  நினைப்பு இருக்க யானை மேய்க்க… ஆனா…” இந்த வாக்கியங்கள் இன்றும்கூட சில  வீடுகளில் பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால் இன்றைய இளைஞர்கள், இந்த  வாசகங்களை பெரீய… இரப்பர் வைத்து அழித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். 

தன் குட்டிகளை பிறந்தவுடன் புலி வாயில் கவ்விக்கொண்டு செல்வதைப்  பார்த்திருக்கிறோம். 

சற்றே பயம் வந்து செல்லும் நமக்கு, அது வாயில் குட்டிகளை வைத்திருப்பதைப்  பார்ப்பதற்கு. ஆனால் தாயின் வாயில் இருக்கின்ற புலிக்குட்டி நினைக்கும்,  ”அம்மா என்னைத் தூக்கிச் செல்வதைப் போன்று என் இரையை நான் தூக்க  வேண்டும்” என்று. சற்றே வளர்ந்தவுடன் கிட்டத் தட்ட 10 மாதங்களில்  தன்னுடைய இரையை இலகுவாக வாயில் கவ்விவிடும். அதன் நினைவும் கவனமும்  முழுவதும் இரையை எப்படிக் கவ்வுவது என்றேதான் இருக்கும். மனிதன்கூட  அப்படித் தான்! புலியின் வாயில் அதன் இரை. மனிதனின் மனதில் அவனின்  லட்சியம். 

அண்டார்டிகா உறைபனியின் இடையே இரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. 
கிடக்கின்ற இரகசியங்களை கிளர்ந்து எடுக்க ஆராய்ச்சி நிலையங்கள் முயன்று  கொண்டுதானிருக்கிறது. பல நிஜப்படுத்த வேண்டிய நினைவுகள் உறைந்து  கிடக்கின்றன. உறைந்த நினைவுகள் உருகினால் போதும் நிஜங்களாகிவிடும். உருக  வைக்க முயற்சி எனும் வெப்பமும், பயிற்சி எனும் பாத்திரமும் வேண்டும். நம்முடைய நினைவுகளே நமக்கான கடிவாளம். நினைவின் தீவிரத்தன்மை அதிகரிக்க  அதிகரிக்க கடிவாளம் இலகுவாகின்றது. 

”காட் விட்” என்று ஒரு பறவை உண்டு. அதனுடைய எண்ணம் எப்பொழுதும் தான்  பறக்க வேண்டும் என்பதிலேயே இருக்கும். பறப்பது என்றால் சும்மா பறப்பது  இல்லை. தொடர்ந்து எட்டு நாள்! பதினோராயிரம் கிலோ மீட்டர்!! உண்ணாமல்  உறங்காமல் !!!  செயலின் வெற்றி என்பது மனதின் நினைவின் வெற்றியே. பழைய நிஜங்களை (நினைவு)  மறந்து போன ஒருவருக்கு மருத்துவ சிகிச்சையின்போது மருத்துவர் சொல்லுவார்,  நீங்கள் இப்பொழுது என்னையே பாருங்கள்! நீங்கள் என் ஆளுமையில்  இருக்கிறீர்கள், நீங்கள் இப்பொழுது எட்டு வயதில் இருக்கிறீர்கள்,  இப்பொழுது பத்து வயதில்… அடுத்து 13 வயதில்… உங்கள் நினைவுகளை விண்  நோக்கி செலுத்துங்கள்” என்று சொல்லிக்கொண்டே போவார். இது நடைமுறை. தன்  நினைவு இல்லாத ஒருவரை, வேறு ஒருவர் (டாக்டர்) அவரின் நினைவுக்கு அவரை  இழுக்கிறார். இழுக்க முடியும் என்றால், சுய நினைவில் உள்ள நம்மால் ஏன்  நம் நினைவுகளை நிஜங்களாக்க முடியாது? நிச்சயம் முடியும். 

புதுமையாக செய்யத் தெரியாதவன் என்று ஏளனம் செய்யப் பட்ட ஒருவர்தான்  பின்னாளில் ”டிஸ்னி லேண்ட்” என்கின்ற அற்புதத்தைத் தந்த ”வால்ட் டிஸ்னி”!  நான்கு வயது வரை ஒரு சிறுவன் பேசவே இல்லை! ஏழுவயது வரை படிக்கவேயில்லை!  மிக மந்தமானவன் என்று விமர்சிக்கப்படுகிறான், சுற்றி இருந்தவர்களால்.  ஆனாலும் அவனுக்குள் இருக்கும் ஆற்றல் அவனுக்கு மட்டுமே தெரியும்,  தெரிந்தது! உறைந்து போயிருந்த தன் ஆற்றலை வெளிக்கொணர்ந்தான், ஆற்றல்  சமன்பாடாக (உ ‘ ம்ஸ்ரீ2 )!! 

பள்ளியில் படிக்கின்ற காலத்தில், படிக்கின்ற அத்தனையையும் சற்றே  மறந்துவிட, உ’ம்ஸ்ரீ2 என்ற ஆற்றல் தத்துவமும், அதைத் தந்த ஐன்ஸ்டீன்  மட்டும் மனதில் உறைந்து, உறைபனியாய் நின்றது அச்சிறுவனுக்கு! பள்ளி  நாடகத்தில் நடிக்க என்ன வேஷம் என்று கேட்டால், எனக்கு வேஷம் வேண்டுமானால் போடுவேன். ஆனால் அது ஐன்ஸ்டீனாகத்தான் இருக்க வேண்டும் என்பான் அந்தச்  சிறுவன். 

பேசுவதில் கெட்டிக்காரனான அச்சிறுவன், பத்தாம் வகுப்பு படிக்கின்றபோது  ஐன்ஸ்டீனின் உருவங்களை வரைந்து தள்ளினான். ’2வில் கோவையில் தாவரவியலிலும்  (ஆர்ற்ஹய்ஹ்), விலங்கியலிலும் (ழர்ர்ப்ர்ஞ்ஹ்) டாப் ஸ்கோரர்! ஆ.நஸ்ரீ.  உயிர் நுண்ணியல் தொழில்நுட்பத்தில் (ஆண்ர் பங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ்)  பட்டப்படிப்பில் மிகச்சிறந்த மாணவன் மட்டுமல்ல, கல்லூரியின் மாணவர்  தலைவர்! அடுத்து முதுகலை படிக்க தேர்ந்தெடுத்த இடம் லண்டனில் உள்ள  லெஸ்டர் பல்கலைக் கழகம். ங.நஸ்ரீ. ஜெனடிக்ஸ் பட்டம் மெரிட்டால்!! 

அடுத்த ஆறு மாதங்கள் மான் செஸ்டர் பல்கலைக் கழகத்தில் வேலை. அடுத்து,  கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் வேலை வர,  நினைவில் நிற்கின்ற லட்சியம் தடுத்தாட் கொண்டது.தான் விரும்பிய துறையில்  டாக்டரேட் பட்டம் பெற வேண்டும். 

வந்தது வசந்தம்! ஜெர்மனியிலிருந்து நேர்காணலுக்கான அழைப்பு அது.  நேர்காணலில் தன்னுடைய ஆய்வுப் பணிக்கான விருப்பத்தையும் நோக்கத்தையும்  சொல்லச்சொல்ல ஜெர்மன் விஞ்ஞானிகளுக்கு இந்திய இளைஞனின் நேர் கொண்ட  பார்வையும் நிமிர்ந்த சொல்நடையும் பிடித்துப்போனது. வந்திருந்த ஜெர்மன்,  அமெரிக்க இளைஞர்களுக்கிடையேயும் மின்னினான் இந்திய இளைஞன். உடனடியாகத்  தேர்ந்தெடுக்கப் பட்டான். 

எல்லாம் சரி, ஐன்ஸ்டீனுக்கும் இளைஞனுக்கும் என்ன பொருந்தியது என்று  கேள்வி வரும்? இந்திய இளைஞனுக்கு டாக்டரேட் செய்ய கிடைத்த நாடு  ஐன்ஸ்டீனின் தாயகம் ஜெர்மனி! கிடைத்த இடம் ஐன்ஸ்டீன் பணிபுரிந்து  கொண்டிருந்த ஏங்ப்ம் ஏர்ப்ற்க்ஷ் இங்ய்ற்ழ்ங். அந்த இளைஞனின் பெயர்  முரளிதரன். ஐன்ஸ்டீனின் இருக்கைக்கு அருகில் இந்திய இளைஞனின் நம்பிக்கை!  இளைஞன் வெற்றி பெற்று சாதிக்க நமது நம்பிக்கையின் வாழ்த்துக்கள். 

ஒரு செயலை எண்ணியவர் தாம் எண்ணிய படியே செயலாற்றுவதிலும் உறுதி உடையவர்  களானால் நினைத்ததை நினைத்தவாறே செய்து வெற்றியடைவர். 

555555555555555555555555 

சமீபத்தில் நான் பார்த்து ரசித்த விளம்பரம் இது. பறவை ஒன்று, அநாதையாக  கிடக்கும் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆறு, மலை, கடல், பாலைவனம்  எல்லாவற்றையும் தாண்டிப் பறக்கும். நடுவில் அந்தக்குழந்தைக்கு வரும்  ஆபத்துக்களையும், மழையையும் திறமையாக எதிர்கொண்டு கடைசியில் குழந்தையை  பத்திரமாக ஒரு வீட்டில் கொண்டு சேர்க்கும். 

பல வருடங்கள் கழித்து, அநாதையாக விட்டுவிட்டு வந்த குழந்தை எப்படி  இருக்கிறது என்று பார்க்க, பறவை அந்த வீட்டுக்கு மறுபடி வரும். 

இப்போது குழந்தை இருபத்தைந்து வயது இளைஞனாகியிருக்கும். பறவை அந்த இளைஞனை  ஆர்வத்தோடு பார்க்கும். அவன் சோம்பேறித்தனமாக கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பான். அசுவாரஸ்யமாக ஏதோ வேலை செய்துகொண்டிருப்பான். சுருக்கமாக  சொன்னால் சராசரி மனிதனாக இருப்பான். பறவை ஏமாற்றத்தோடு திரும்பிப்போகும். 

விளம்பரம் முடிந்துவிடும். அழகான அந்த விளம்பரம் சொல்லும் செய்தி  இதுதான். அந்த பறவை அதன் ஆற்றலையும் தாண்டி பல காரியங்கள் செய்து அந்தக்  குழந்தையை காப்பாற்றியது. ஆனால் அவன், அவன் ஆற்றலுக்கு உட்பட்ட  காரியங்களை செய்துகூட சாதனை படைக்காமல் சோம்பேறியாக இருக்கிறான்.  இந்த விளம்பரத்தை பார்த்தவுடன் எனக்கு எழுந்த கேள்வி, கடவுள் என்று  ஒருவர் இருந்து, அவர் இந்த பூமிக்கு வந்தால், நம்மைப்பார்த்து மகிழ்வாரா?  இல்லை வருந்துவாரா? 

இந்தக்கேள்வியை நீங்களும் உங்களைப்பார்த்து கேட்டுக்கொள்ளுங்கள். கடவுள்  உங்களைப் பார்த்ததும் என்ன நினைப்பார் ? 

என் படைப்பின் நோக்கம் நிறைவேறியது என்று பூரிப்பாரா? ஏன் படைத்தோம் இவனை  என்று வேதனைப்படுவாரா ? 

பழசையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள். இப்போது நினைத்தால்கூட கடவுள் தன்  காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும்படியான ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழமுடியும். 

நான் அடிக்கடி யோசிப்பதுண்டு, ‘கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் எந்த  மொழியில் பேசுவார்? எல்லோரையும் படைத்த கடவுளுக்கு எல்லா மொழியும்  தெரிந்திருக்கும், இருந்தாலும் அவர் மொழி எது? அவருக்கு பிடித்த மொழி எது 
?’  பிறகுதான் தோன்றியது. எந்த மொழியில் பேசினாலும் நம்பிக்கையோடு  பேசுவதைத்தான் கடவுள் விரும்புவார். 

என் விருப்பமும் அதுதான். நம்பிக்கையோடு பேசுங்கள். நம்பிக்கையோடு  வாழுங்கள். ஒருவேளை கடவுள் இருந்தால், நிச்சயம் அவர் உங்களைப்பார்த்து  பெருமைப்படுவார்.  என்றென்றும் நம்பிக்கையுடன் 
88888888888888 

கடந்த வாரம் கடவுளைச் சந்தித்தேன்…!  -அத்வைத் ஆனந்த் 

கடந்தவாரம் கடவுளைச் சந்தித்தேன். அவர்மேல் அதிக கோபத்தில் இருந்ததால்  அவரை நான் கண்டுகொள்ளவில்லை. உலகில், சிலர் சாதனையாளர்களாக  இருக்கிறார்கள். பலர் சராசரிகளாக இருக்கிறார்கள். ஏன் என்று கேட்டால்,  ‘தலைவிதி’ என்கிறார்கள். அதனால்தான் அதை எழுதிய கடவுள் மேல் கோபம்  எனக்கு. 

இதுவே மனிதனாக இருந்திருந்தால், இப்படி மாற்றி மாற்றி எழுதி வைத்ததற்கு,  சட்டையைப் பிடித்து இரண்டு கேள்வி கேட்டிருப்பேன். கடவுளாய்  போய்விட்டதால் கம்மென்று இருந்து விட்டேன். 

அவரை நான் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் கடவுள் என்னை இழுத்துப்பிடித்து  வைத்துப் பேசினார். என் வருத்தத்தை, பட படவென்று அவர் முன்னே கொட்டினேன்.   “ஏன் மனிதர்களின் தலைவிதியை ஒரே மாதிரி எழுதாமல் மாற்றி மாற்றி  எழுதினீர்கள்?”  “ஒரு மனிதன் 75 ரூபாய்க்கு ஸ்டார் ஹோட்டலில் ஒரு வேளை காப்பி \ சாப்பிடுகிறான். ஆனால், இன்னொரு மனிதன் தள்ளுவண்டியில் பின்னால்  ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடையையோ, கொசுக்கடியையோ பொருட் படுத்தாமல்  பத்துரூபாய்க்கு ஒருவேளை சாப்பாட்டையே சாப்பிட்டு விடுகிறான். ஏன் இந்த  வித்தியாசம் ?” 

கடவுள், ஆர்ப்பாட்டமாக சிரித்தபடியே, “முட்டாள்! தலைவிதி என்றால் ஒவ்வொரு  மனிதன் தலையிலும் நான் எழுதிய விதி என்று நினைத்துக் கொண்டாயா?  அதனால்தான் குழந்தையின் தலையில் முடி இறக்கி என்ன எழுதியிருக்கிறேன்  என்று பார்க்கிறீர்கள் போலும்” என்றார் கிண்டலாக. 

“கிண்டல் பேச்சு வேண்டாம். என் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள்.  எல்லோருக்கும் அவர் தலைவிதியை நீங்கள் எழுதுகிறீர்களா? இல்லை, உங்கள்  அலுவலகத்தில் யாரேனும் இந்த வேலையைச் செய்கிறார்களா? அதனால்தான் இப்படி  தப்பும் தவறுமாக இருக்கிறது போலும்”.   கடவுள் இன்னும் ஆர்ப்பாட்டமாக சிரித்தார், ”எல்லோருடைய விதியையையும் நான்  தான் எழுதுகிறேன்.” அவர் கம்பீரமாக அதைச் சொல்லும்போது, திருவிளையாடல்  சிவாஜி போலவே இருந்தார். 

“பிறகு ஏன் மனிதர்களின் வாழ்க்கையில் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள்? சிலர்  வாழ்க்கையில் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பலர் வாழ்க்கையில்  தாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். வெற்றி பெறுகிறவர்கள் சிலராகவும்  தோல்வியடைபவர்கள் பலராகவும் இருக்கிறார்களே. ஏன் இந்த ஏற்றத்தாழ்வு? ஏன்  இந்த இடைவெளி?” 

என் கோபம் கண்டு, கடவுளே கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார். என்னை இழுத்து  அணைத்துக்கொண்டார். கிண்டல் தொனி விடுத்து, இப்போது ஆறுதலாக பேசத்  தொடங்கினார். 

“தலைவிதி என்றால் தலையில் எழுதும் விதி என்று பலரும் தவறாக நினைத்துக்  கொண்டு விட்டார்கள். நான் எல்லோருக்குள்ளும் ஒரு விதியை எழுதி  வைத்திருக்கிறேன். அது விதிகளிலேயே முதன்மையான விதி. அதாவது தலையாய விதி.  அதைத்தான் நீங்களெல்லாம் நாளடைவில் தலைவிதி என்று சொல்ல ஆரம்பித்து  விட்டீர்கள்” என்றார். 

“சரி. தலைவிதியோ, தலையாய விதியோ என்ன எழுதினீர்கள். அதைச் சொல்லும்?”  ”என்னால் முடியும் என்பதைத்தான் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஓதிவைத்தேன்” என்றார். 

‘என்னால் முடியும்’ என்ற எண்ணத்தைத் தான் எல்லோருக்குள்ளும்  விதைத்திருந்தால், எல்லோரும் நம்பிக்கையோடு முயற்சி செய்து உயரங்களை  தொட்டிருப்பார்களே. ஆனால் நிஜத்தில், ‘என்னால் முடியாது’ என்கிற கோஷ்டி  அல்லவா அதிகம் இருக்கிறது? ஒருவேளை எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக்  எதுவும் வந்திருக்குமோ? ச்சே! கடவுளாவது எழுத்துப் பிழை செய்வதாவது? 
 கடவுள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும் பொய் சொல்பவர் இல்லை  கடவுள். என் குழப்பத்தை புரிந்து கொண்ட கடவுள் அவராகவே எனக்கு இன்னும்  விளக்கினார். 

“நீ டூவீலரை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்புகிறாய். முன்னால்  உட்கார்ந்திருக்கிற உன் சின்னக் குழந்தை என்ன சொல்லும்?”  யோசித்துப்பார்த்தேன், ‘என்ன சொல்வான் என் பையன்?’ “அப்பா நான் ஓட்டுகிறேன்”  “உன் மனைவி தண்ணீர்க்குடம் எடுத்துக் கொண்டு செல்கிறாள், உன் குழந்தை  என்ன சொல்கிறது?” 

“அம்மா! நான் தூக்குகிறேன்.” 

“அதனால் முடியுமா?” 

“நிச்சயமாக முடியாது.” 

“அப்புறம் ஏன் அது அப்படி பேசுகிறது? காரணம், நான் ஒவ்வொரு குழந்தையை  படைக்கும் போதும் ‘என்னால் முடியும்’ என்ற எண்ணத்தையும் வைத்தேதான்  படைத்தேன். இப்போதாவது நம்புகிறாயா என்னை?” 

“இன்னுமோர் உதாரணம் சொல்கிறேன், கேள். உங்கள் குழந்தை, வீட்டில் உள்ள  ஸ்டூல்மேல் ஏறி, பீரோவில் உள்ள எதையோ எடுக்க முயற்சி செய்யும்போது கீழே  விழுந்துவிட்டது. கையில் பலமாக அடிபட்டுவிட்டது. கை நன்றாக வீங்கி  விட்டது. அடுத்தநாள் உன் குழந்தை ஸ்டூல்மேல் ஏறுமா? இல்லை, என்னால்  முடியாது. ஏற்கனவே விழுந்துவிட்டேன் எனப் பயந்து ஏறாதா?” 

அட! ஆமாம். என் குழந்தை ஏறும். நிச்சயம் ஏறும். கடவுளே.. ‘என்னால்  முடியும்’ என்று இந்த உலகத்தில் பிறந்த குழந்தை, பிறகு எப்படி ‘என்னால்  முடியாது’ என்று எண்ணத்தை மாற்றிக் கொண்டது? 

இது நான் கேட்கவேண்டிய கேள்வி. ‘என்னால் முடியும்’ என்ற எண்ணத்தோடு நான்  படைத்தவனை, நீங்கள் எல்லோரும் சேர்ந்து ‘என்னால் முடியாது’ என்று  யோசிக்கிறவனாய் எப்படி மாற்றினீர்கள்? கடவுள் வார்த்தைகள் வேகமாய் வந்தன.  அந்தக்கணத்தில் கடவுள் அப்படியே மறைந்துவிட்டார். 

வீட்டிற்கு வந்து விடை தேட ஆரம்பித்தேன். 

என் குழந்தை முதன் முதலாக சேரை தூக்க முயற்சி செய்தபோது, என்ன சொன்னேன்?  ‘உன்னால் முடியாது.’ 

நான் வண்டி ஓட்டுவதைப் பார்த்துவிட்டு, ‘அப்பா! நான் வண்டி ஓட்டுகிறேன்’  என்று சொன்ன போது, என்ன சொன்னேன்? ‘உன்னால் முடியாது.’ என் மனைவி தண்ணீர்  எடுத்துக் கொண்டு வரும்போது, என் குழந்தை கேட்டது, “அம்மா! நான் குடத்தை  தூக்குகிறேன்”. அப்போது என் மனைவி என்ன சொன்னாள்? ‘உன்னால் முடியாது’  திரும்பத் திரும்பக் கேட்டு, குழந்தைகள் மனதில் இப்போது இது பதிந்துவிட்டது. 

நாம் எதைச் செய்யச்சொன்னாலும் இப்போது குழந்தைகள் சொல்கிறது, ‘என்னால் முடியாது.’ 

எத்தனை முறை விழுந்தாலும் என்னால் முடியும் என்று எழுந்த குழந்தைகள், வளர  வளர சின்னச்சின்ன தோல்விகளில் துவண்டு, ‘என்னால் முடியாது’ என்று முடிவே  செய்துவிட்டது. 

நீ கிளாஸ் பர்ஸ்ட் வரவேண்டும் என்று சொன்னால், என்னால் முடியாது. எனக்கு  சைன்ஸ் வராது என்கிறது. இன்னும் வளர்ந்து தொழில் செய்யும் போது, சிறிய  தோல்வி வந்தால்கூட என்னால் முடியாது. நான் பிஸினஸ்க்கு தகுதியானவர் இல்லை  என்கிறது. 

முடியும் என்ற எண்ணத்தை, ‘முடியாது! முடியாது’ என்று திரும்பச்சொல்லி  நாம்தான் மாற்றினோம். இந்த உலகத்தில் இவ்வளவு ஏற்றத் தாழ்வுகளை நாம்தான் ஏற்படுத்தினோம். 

இப்போது என் பணி என்ன என்று எனக்கு புரிந்தது. எல்லோருக்கும்  சொல்லவேண்டும். தலைவிதி இதுதான், தலையாய விதி இதுதான். ‘உன்னால் முடியும்! உலகை வெல்ல!’ 

பேப்பரை எடுத்துக்கொண்டு விறு விறுவென்று எழுத ஆரம்பித்தேன். முதலில்  கட்டுரைக்கு தலைப்பு வைத்தேன்.  கடந்த வாரம் நான் கடவுளைச் சந்தித்தேன். 

99999  மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்  தடம் பதியுங்கள் 

எல்லாத்திறமைகளும் இருக்கும்போது, ஆனால் உரிய வாய்ப்புகள் இல்லாதபோது, ஏற்படும் மனத்தடையை என்ன செய்வது? இந்தக் கேள்வியை பலரும் பலவிதங்களில் எதிர் கொள்வதுண்டு. சாதாரணமாக வருகிற பதில், உரிய வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பது. ஆனால், சாமர்த்தியசாலிகள் தருகிற பதில்,  உரிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதுதான். 

தன்னுடைய இடத்தைப் பிடிப்பதும், தன்னுடைய தடத்தைப் பதிப்பதும்  முக்கியமென்று கருதிய மனிதர்கள் முண்டியடித்து, முயற்சி செய்து,  முன்னேறியதன் விளைவுதான், ஏறமுடியாத சிகரங்களில் அவர்களை ஏற்றிவைத்து  அழகு பார்த்தது. 

தடைகள் தாமாக விலகும் என்று காத்திருப்பதைவிட, தடைகளை நகர்த்தியவர்களே தாண்டிச் சென்றிருக்கிறார்கள். சில தடைகள், வாழ்க்கைப் பாதையின் வேகத்தடைகள். அவை நம் வேகத்தை மட்டுப்படுத்துபவையே தவிர, நம் கால்களைக் கட்டுப்படுத்துபவை அல்ல. மட்டுப் பட்ட வேகம் ஆபத்துக்களைத் தவிர்க்கும்.  அதே நேரம், நம் இலக்கு நோக்கி நம் கவனத்தைக் குவிக்கும். 

சாதிக்கும் மோகம், செயல்வேகம், இரண்டும் இருப்பவர்கள், ஏதாவதொரு துறையில்  தங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். பழைய காலத் திரைப்படங்களில்  பக்கம் பக்கமாய் வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது. அதன்  காரணமாய் அன்றைய நடிகர்களுக்கு மனப்பாட சக்தி வளர்ந்து கொண்டேயிருந்தது. 

அந்த ஆற்றலை, நடிக்கும் வாய்ப்புகள் இருக்கும் வரைக்கும் பயன்படுத்தி,  அதன்பின் அப்படியே மங்கிப்போக விட்டவர்கள் பலர். ஆனால், தீவிர  நடிப்பிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, அதே ஆற்றலைக் கொண்டு இலக்கியங்களை  மனனம் செய்து, இன்று கம்பனிலும், பாரதியிலும் தங்குதடையின்றி பாடல்களைக்  கொட்டுகிற பன்முகக் கலைஞராய் ஒளிர்பவர் திரு. சிவக்குமார். 

அடிப்படையில் தேர்ந்த ஓவியர் இவர். ஓவியம், பேச்சு, நடிப்பு என்று  பன்முகத் திறமைகளில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதால்  நிகழ்காலத்தின் நிமிஷமாய் இருக்கிறார் இவர். கலைப்பாதையில் குறுக்கிடக்கூடிய காலமாற்றம் என்னும் மலையை அனாயசமாய் நகர்த்திவைத்த  பெருமைக்குரியவர் இவர். 

சமீபத்தில் வெளிவந்த ஓம்சக்தி தீபாவளி மலரில், பின்னணிப் பாடகி வாணி  ஜெயராமின் நேர்காணல் வெளிவந்துள்ளது. கலைவாணி என்ற பெயரில் பேச்சுப்  போட்டிகளில் பரிசுகள் குவிந்ததையும், சிறந்த ஓவியராய் வளர்ந்து வந்ததையும் நினைவு கூர்கிறார். ஒன்றோடு நின்று விடாமல், ஒவ்வொன்றிலும்  முயன்று பார்க்கிற முனைப்பு, வாழ்க்கையை அர்த்த பூர்வமாய் ஆக்கி வைக்கும்  என்பதற்கு இவர்கள் இருவருமே இணையில்லாத சாட்சிகள். 

உலகமெங்கும் கிரிக்கெட் விளையாட்டில் மக்களின் ஈடுபாடு பரபரவென்று பற்றிக் கொண்டிருக்கிறது. விளையாட்டு மூலமாகவும் விளம்பரங்கள் மூலமாகவும் கோடிக்கணக்கில் வீரர்கள் பணம் குவிக்கிறார்கள். சூடு பறக்கும் ஆட்டம் தொடங்கி, சூதாட்டம் வரையில் கிரிக்கெட்டின் பெயரால் கலகலப்பாய் நடக்கிறது. 

இந்திய கிரிக்கெட் வீரர்கள் அத்தனை பேரும் அள்ளிக் குவிக்கும் புகழ், \பணம், பாராட்டு இவற்றுக்கு மத்தியில் கவனிக்கப்படாத சவலைப் பிள்ளையாய் இந்தியாவில் இருக்கிறது, இன்னொரு தேசிய கிரிக்கெட் அணி!! 

ஆம்! இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி தான் அது! பேசிப்பார்த்த போது பலருக்கும் இந்த அணிபற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. 

ஆண்கள் அணிக்கு நிகராக விளையாடக் கூடிய வீராங்கனைகள் கொண்டது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி. ஆனால் இன்றளவும் இந்த அணி எதிர்கொள்ளும் தடைகளுக்கு எல்லையில்லை. அதே நேரம் அவர்களின் உறுதியும் உற்சாகமும் குறையவில்லை. 

1700களில் ஆங்கிலேயர்களால் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் 
கிரிக்கெட் விளையாட்டு. 1890களிலேயே பெண்கள் கிரிக்கெட் விளையாடினார்களாம். மகாராஷ்டிர முறைப்படி புடவை அணிந்த பெண்கள் களத்தில் இறங்கி மட்டை பிடித்துப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். 1930ல்,  கத்தியவாரில் நடந்த போட்டியில் ஆண்கள் அணியை பெண்கள் அணி 
ஜெயித்திருக்கிறது. 

ஆனாலும் கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை முறையான ஆண்கள் அணி 1911லும், பெண்களுக்கான தேசிய கிரிக்கெட் சங்கம் 1973லும்தான் உருவாகியுள்ளன. ஆசியாவின் தலைசிறந்த பெண்கள் கிரிக்கெட் அணியாக இந்திய அணி இருந்தும், இதுவரை நான்கு முறை ஆசியக் கோப்பையை வென்றும், பொருளாதாரமோ புகழாதாரமோ இந்த அணிக்குப் பெருகவேயில்லை. 

வங்காளத்தில் உள்ள சின்னஞ்சியறிய கிராமமாகிய சாக்டாவில் பிறந்த ஜீலான் கோஸ்வாமி என்ற 25 வயது இளம்பெண், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர். இதற்கு முன் தலைவராக இருந்தவர், ஹைதராபாத்தைச் சேர்ந்த 26 வயது மித்தாலி ராஜ். உலகின் தலைசிறந்த வீராங்கனைகளில் இவரும் ஒருவர். 

இத்தனைக்கும், அஞ்சும் சோப்ரா என்ற வீராங்கனை தவிர மற்றவர்கள் அனைவரும் மிக எளிய குடும்பச் சூழலில் இருந்து வருபவர்கள். விளையாட்டு வீரர் களுக்கான ஒதுக்கீட்டில் தரப்படும் வேலை வாய்ப்பு களில்கூட அலுவலக எழுத்தர் பணியைத்தாண்டி இவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. 

இந்தச் சூழலில்தான், இந்தியாவிலுள்ள கிரிக்கெட் வீராங்கனைகளின் வாழ்வை சித்தரிக்கும் குறும்படம் ஒன்றை உருவாக்க அஞ்சும் சோப்ரா, ஜீலன் 
கோஸ்வாமி, மித்தாலிராஜ் ஆகியோர் கைகோர்த்தனர். 

சுனில் யஷ் கல்ரா என்ற இயக்குநர் ஐந்தாண்டுகள் முயன்று இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார். வணிக நிறுவனங்கள், மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை இவர்கள் மேல் விழுவதற்கான வாய்ப்பு இந்தப்படத்தின் மூலம அமையுமென்று நம்புகிறார்கள். 

ஆண் வீரர்களைக் காட்டிலும் அதிகமான மனவுறுதி, போர்க்குணம், நம்பிக்கை, 
தீவிரம் எல்லாம் தேவைப்படும் வாழ்க்கையை வாழ்ந் தாலும், போராட்டங்களே எங்களை மேலும் உறுதி உள்ளவர்களாக மாற்றுகிறது என்கிறார் ஜீலன் கோஸ்வாமி 
பாலினப்பாகுபாடு, குறைவான வாய்ப்பு ஆகிய தடைகளைத் தாண்டி, தங்களுக்கும் பிடித்தமான துறையில் சாதிக்கும் வெறியோடும் வேகத்தோடும் இந்த வீராங்கனைகள் தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கிறார்கள். 

எதில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி பெறுவதற்கு, இரண்டு விஷயங்களை நன்றாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். முதலாவது, நாம் இறங்கியிருக்கிற களம். இரண்டாவது நம்முடைய பலம். களம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நம் பலம் அதற்குத் தகுந்தாற்போல் பெருகக்கூடியது என்ற நம்பிக்கை மலைகளை நகர்த்தும் மன உறுதியைத் தருகிறது. 

ஆல்பர்ட்.ஈ.என்.கிரே என்ற வாழ்வியல் அறிஞர் ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பின் 
சொன்ன வாசகம் ஒன்று, மேலைநாட்டு சுயமுன்னேற்ற நிபுணர்கள் பலராலும் மேற்கோள் காட்டப் பட்டிருக்கிறது. அந்த வாசகம் இதுதான்: 

”வெற்றி பெறாதவர்கள் செய்ய விரும்பாத சில வேலைகளை வெற்றியாளர்கள் செய்கிறார்கள். அதன் மூலமே வெற்றி பெறு கிறார்கள். அவர்களுக்கும் அந்த வேலைகளைச் செய்ய விருப்பமில்லைதான். ஆனால் விருப்பு வெறுப்பைவிட தேவையின் தீவிரம் அவர்களை நகர்த்துகிறது.” 

செயல்படுவதும் சாதனை புரிவதும் விருப்பு வெறுப்புகளைத் தாண்டிய 
வேகத்திலும் வெறியிலும் நிகழ்பவை. நகர்த்த முடியாததையும் நகர்த்துகிற 
சக்தி, அங்கே பிறக்கிறது.

No comments:

Post a Comment