Thursday, May 9, 2013

கண்ணதாசனின் கடைசிப் பக்கம்


"ஒரு நாளைக்கு ஐம்பது பேரையாவது நான் சந்திக்கிறேன்.ஐம்பதில் நாற்பது பேர்கள் நல்லவர்களாக இல்லை. ஏமாற்றுக்காரர்கள், வஞ்சகர்கள், போலிக் கண்ணீர் வடிப்பவர்கள், பழி சுமத்துபவர்கள், கேலி செய்பவர்கள், நன்றி மறந்தவர்கள், நாணயம் கெட்டவர்கள் - ஏதேனும் ஒரு வகையில் குணக்கேடான மனிதனைத் தான் நான் சந்திக்கிறேன். அத்தனை பேர்களுக்கிடையேயும் நல்லவனாக இருக்க முயற்சிசெய்கிறேன்.


முள்ளின் மீது நடனம்; கால் வலிக்கத்தான் செய்கிறது. சமயங்களில் சத்தம் போட்டு அழக்கூடத் தோன்றுகிறது.


இன்று நேற்றல்ல; இருபத்தைந்து ஆண்டுகளாக இதே நிலை. ஆயினும் நான் நல்லவனாகவே இருக்க விரும்புகிறேன்."

No comments:

Post a Comment