Thursday, May 9, 2013

முயற்ச்சியும்,தன்னம்பிக்கையும் இருந்தால் போதும்


எப்படி 100 விழுக்காடு வாய்ப்புகளைப் பயன்படுத்திக்

கொண்டு 150 விழுக்காடு முயற்சியை மேற்கொள்வது..?

* உள்ளுக்குள் உறங்கிக் கிடக்கும் ஆற்றலை... பேராற்றலைத் தட்டி எழுப்புவது.

* சந்தர்ப்பங்களுக்காக காத்திராமல்... மாவீரன் நெப்போலியன் போல சந்தர்ப்பங்களைத் தாமாகவே உருவாக்கிக் கொள்வது.

* உண்மையில், வெற்றி என்பது ஒரு இடைவிடாத, இயக்கம் Process' விதைகளை விதைக்கும் செயல். 

* விதையிலிருந்து மரம். மரத்திலிருந்து மீண்டும் விதை என்று தொடரான இயக்கம்.

* நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதும் தனது அறிவை வளர்த்துக் கொள்வதும் மாணவனின் வெற்றி.

* நோயாளிகளின் உயிரைக் காத்து ‘ராசிக்காரர்’ என்று பெயரெடுப்பது மருத்துவரின் வெற்றி. 

* உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவது வழக்குரைஞரின் வெற்றி. 

அதே போல,

தன் உற்பத்திப் பொருளைச் சந்தையில் தரத்துடன் நிலை நிறுத்துவதும், 

தனது நிறுவனத்தை உலகச் சந்தையில் முன்னணியில் நிறுத்துவதும் ஊழியர்களின் வெற்றி.

“ எனக்கு அதிகமாகத் தேவைப்படுபவர் யார் என்றால்...

என்னால் இயன்றைச் செய்யுமாறு தூண்டும் மனிதர்கள்!” என்றார் அமெரிக்க அறிஞர் எமர்ஸன்.

நம்மைச் சுற்றியும் எத்தனை மனிதர்கள்..! சிறுவர்கள், இளைஞர்கள்,நடுத்தர வயதுடையவர்கள், முதியவர்கள் என்று எத்தனை மனிதர்கள்!

இவர்களுக்கு தங்கள் லட்சியம் எது என்று தெரியவில்லை அதற்கான விழிப்புணர்வும் இல்லை.

அதனால் தான்,

அவர்களின் அளவிட முடியாத ஆற்றல்கள் உறங்கிக் கிடக்கின்றன.

நடுவயதைக் கடந்த எத்தனையோ பேர் அதன் பிறகு பேரறிஞர்களாக... தொழில் வல்லுநர்களாக வளர்ந்ததை வரலாறுகள் கூறுகின்றன. 

அதற்கு உந்துகோலாக இருந்தது எது? 

அது ஒரு சொற்பொழிவாக இருக்கலாம்.

ஒரு புத்தகமாக இருக்கலாம் அல்லது 

ஒரு நண்பரின் தனிப்பட்ட அறிவுரையாகவும் இருக்கலாம்.

50.000 குழந்தைகளை 30 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த வல்லுநர்களின் முடிவு -

“ பிறந்த குடும்பம் - கோத்திரத்தை விட சூழ்நிலைகளும், சுற்றுச் சார்புகளும் சக்திமிக்கவை; குழந்தைகளை அதிகமாக பாதிப்பவை.”

ரஸ்கினுடைய நூலைப் படித்ததும் பீச்சர் ஒரு மனிதாரய் ஆனார். 

தோல்வி அடைந்தவர்களை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்... 

அவர்கள் பெரும்பாலோரின் தோல்விக்குக் காரணம் அவர்களை ஊக்குவிக்க யாரும் இல்லாததே காரணம் என்று அறிய முடியும். அதனால்,

*உங்களை ஊக்குவிக்கும் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளுக்கே எப்போதும் ஆயத்தமாக இருங்கள்.

*உங்களை அறிந்து உங்களுக்கு உதவி செய்யும்... 

நீங்கள் முழு மனிதர்களாக மாற உற்சாகமூட்டும் மனிதர்களுடன் நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளுங்கள்.

. உங்கள் பதிவுகளை உங்களுக்குப் பிறகும் இந்த மண்ணுலகில் விட்டுச் செல்ல உதவுபவர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

உண்மையில், 

ஆர்வமானது தொற்று நோயைப் போன்றது. 

நீங்களும் முன்னேறத் துடிப்போருடன் இருக்கும் காலம் வரை அந்த பண்புகளால் ஈர்க்கப்படுவீர்கள். உங்களுக்கு சோம்பல் ஏற்படும் போதேல்லாம் முன்னேறிச் செல்பவர்களின் சுறுசுறுப்பு உங்களையும் உசுப்பி விடும்.

வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கான உரைகல் இதுதான் :

‘ஒவ்வொருவரும் தத்தமது பணிகளின் மேல் கொள்ளும் கொழுந்து விட்டெரியும் ஆவல்தான்!’

வேண்டா வெறுப்பாக... ,

முக்கி முணகிக் கொண்டு, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பணிபுரியும் ஒருவர் அவனுக்கு கிடைத்த வாய்ப்பை நிராகரிக்கிறார் என்றுதான் பொருள்

* யாரொருவர் தனது வேலையை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பேணுதலுடன், 

ஆர்வத்துடன் மதித்து செய்கிறாரோ அவர் வாழ்வில் முன்னேறத் தொடங்கி விட்டார் என்றே பொருள்.

* நம்முடைய துறைசார்ந்த அல்லது தொழில் எதுவானலும் அதில் நமக்கு போட்டியாளர்கள் இருப்பது மிகவும் நல்லது அப்படி இல்லையென்றால் உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இறுதியாக,

உச்சியை அடைய நினைத்தால் ஏறித்தான் ஆகவேண்டும்.

கால்கள் வலிக்கும் களைப்பாகும்.

இதெல்லாம் உனக்கு சாத்தியமில்லை என்று மனம் அச்சுறுத்தி பார்க்கும் .

ஒய்வெடுத்துக் கொள் என்று சபலம் காட்டும்.

தளராதீர்கள்....

செய்வதை முழுமையாக விருப்பத்துடன் செய்தால் எந்த வலியும் வேதனை தராது. 

உச்சியை அடைந்ததும் அத்தனை களைப்பும் சுகமாகும்..

No comments:

Post a Comment