Wednesday, May 15, 2013

உங்களின் பணியில் ஆதிக்கம் செலுத்தும் மென் திறன்கள்


போட்டிகள் நிறைந்த இந்த உலகில், ஒருவர் தனது துறையில் வெற்றிபெற வேண்டுமெனில், 2 விஷயங்கள் நடக்க வேண்டும். முதல் விஷயம், ஒருவர் தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இரண்டாவது, வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில், அந்த குறிப்பிட்ட நாளில், சிறப்பாக தனது திறனை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்க வேண்டும்.

உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நாளில், உங்களின் திறமையை காட்டுவதென்பது, உங்களின் Soft skills மற்றும் hard skills ஆகியவற்றை சார்ந்துள்ளது. ஒருவரின் கல்விக்கூட அனுபவம், தொழில்நுட்ப அறிவு உள்ளிட்ட பல்வேறான அம்சங்களிலிருந்து மேற்கூறிய திறன்கள் பெறப்படுகின்றன.

இன்றைய உலகில் அனைத்திற்குமே போட்டிகள் அதிகமாகிவிட்ட சூழலில், ஒருவர் தனது திறனை முடிந்தளவு அதிகப்படுத்திக் கொள்வதே வெற்றிக்கு வழியாகும். பொதுவாக, நேர்முகத் தேர்வு மற்றும் மீட்டிங் போன்றவற்றின்போது, அனைத்து வகையான உள் ஆற்றல்களையும் வெளிப்படுத்த உதவக்கூடிய Soft skills -ஐ வளர்த்துக் கொள்வதில் பலர் அக்கறை காட்டுவதில்லை.

இன்றைய நிலையில், வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள், ஒரு பணியை, விரைவாகவும், செலவு குறைந்தும் மற்றும் சிறப்பாகவும் செய்து முடிப்பவருக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இன்றைய கார்பரேட் கலாச்சாரமானது, செங்குத்து நிலையிலிருந்து, சாய் நிலைக்கு சென்றுவிட்டது. மேலும், கட்டளையிடும் மேலாளர் வகையறா நிலையானது, கூட்டாளர் ஒருங்கிணைப்பு நிலையாக மாறிவிட்டது.

இத்தகைய ஒரு குழு பணி நிலையில், மேலதிகாரிகளும், பணியாளர்களும் மிக அதிகமாக நெருங்கி பணியாற்றும் ஒரு சூழலில், ஒருவரின் ஆளுமைத் திறன்கள் வெளிப்படையாக தெரிகின்றன. எனவே, ஒருவர், மற்றவருடன் சிறப்பாக தொடர்பு கொள்ளும் Interpersonal திறன்களை சிறப்பாக வளர்த்துக் கொள்வது அவசியமாகிறது. இல்லையெனில், நாம் நமது முக்கியத்துவம் அல்லது பணியை இழக்க நேரிடும்.

நமக்கென்று, இயல்பாகவே, சிலவகைத் திறன்களும், அனுபவம் உண்டு. ஆனால், நமது பணியிடத்தில், நமது மேலதிகாரியானவர், தான் என்ன காண்கிறாரோ, அதைத்தான் நமது திறமைகளாக நம்புவார். எனவே, நாம் ஒவ்வொரு விஷயத்திலும் மிகுந்த கவனமாகவும், நேர்த்தியாகவும் செயல்பட்டு நமது முக்கியத்துவத்தையும், பணியையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

சுய பிம்பம், சுய மரியாதை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றில், ஒருவரின் தோற்றம் ஆதிக்கம் செலுத்துவதை மறுக்க முடியாது. எனவே, ஆடை மற்றும் இதர உடல் தொடர்பான இயங்குதல்களில் நீங்கள் கவனமாகவும், நேர்த்தியாகவும் செயல்பட வேண்டும்.

Soft skills மற்றும் Image management ஆகிய இரண்டும், தற்போது இந்தியாவில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்துறைகளில் ஒன்று என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. அரசாங்கம் இத்தொழில்துறை வளர்ச்சிக்கென்று அதிக நிதி ஒதுக்குவதால், இத்துறையின் பெரியளவில் வளர்ந்து வருகிறது. ஆனால், ஒரு பெரிய குறை என்னவெனில், இத்துறையில் தகுதிவாய்ந்த பயிற்சியாளர்கள் மிகவும் குறைவு என்பதுதான். பல பயிற்சியாளர்கள், சுயமாக உருவானவர்களே தவிர, அவர்கள், இத்துறைக்கென்று சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் பெற்றவர்கள் அல்ல.

எனவே, மென்திறன் பயிற்சியாளர் மற்றும் இமேஜ் கன்சல்டன்ட் போன்ற துறைகளில் பணியாற்ற விரும்புபவர்களுக்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன. எனவே, காலம் தாழ்த்தாமல் முந்திக் கொள்பவர்கள், அதிகமாக அறுவடை செய்வார்கள்.

No comments:

Post a Comment