தேவைப்பட்டாலொழியக் கோபம் கொள்ளாதே.
நன்மை செய்தவனுக்கு நன்றி காட்டு.
தீமை செய்தவனை மறந்து விடு.
எதையும் சாதிக்க நிதானம், அற்புதமான ஆயுதம்.
வென்றவனுக்கு மலையும் கடுகு. தோற்றவனுக்கு கடுகும் மலை.
ஆணவமும், அழிவும் இறைட்டைக் குழந்தைகள்.
அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.
சோம்பி நிற்கும் மனிதனிடம் துன்பங்கள் உற்ப்பத்தியாகின்றன.
தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் இருக்காது.
இலக்கியங்கள் எல்லாம் மனிதர்களுடைய அனுபவத்தில் உதித்தவையே.
நீயாகவே முடிவு செய். நீயாகவே செயல் படு.
முடிந்தால் நன்மை செய். தீமை செய்யாதே.
சினிமா-பயன் படுத்த தெரிந்தவனுக்கு அற்புதமான ஆயுதம்.
சிறு வயதில் வரவு வையுங்கள். பெரிய வயதில் செலவளிங்கள்.
நம் மனதளவு எவ்வளவோ அவ்வளவு தான் உலகம்.
வாழ்வில் நகைச் சுவை வேண்டும். சிரிக்காதவன் மிருகம்.
அருங்குறள் 1330-ம் கடலளவு. அதன் முன் உலகம் கடுகளவு.
வாழ்ககையின் ஒவ்வொரு அணுவையும் அனுபவிக்க வேண்டும்.
எதையும் தெரியாது என்று சொல்லாமல் தெரியுமென சொல்.
வாழ்வில் துணிவு வேண்டும்.
விதி என்னும் மூலத்தில் இருந்து முளைத்த கிளையே மதி.
காற்றுள்ள போதே தூற்றிக்கணும் என்பதை கவனத்தில் வை.
வாழ்க்கையில் முன்னேற எந்த விமர்சனத்தையும் தாங்கிக்கொள்.
திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு தூரமில்லை.
No comments:
Post a Comment