Thursday, May 9, 2013

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்


நல்ல உறவுகளின் அஸ்திவாரம் எது தெரியுமா?

நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில விஷயங்களக் கற்றுக் கொண்டு, அதை மனதில் பத்திரப்படுத்திக் கொள்கிறோம்.

விவேகமுள்ளவர்கள், அந்த அனுபவங்களை தகுந்த தருணத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

நிறையபேர், நட்பில், காதலில், அன்பில் வெற்றி பெற, அடுத்தவர் எதிர்பார்ப்புகளப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். 

உண்மயில் நீங்கள் திருப்திபடுத்த வேண்டியது மற்றவரை அல்ல.

உங்களைத்தான்.

மேலே இது சுயநலமல்ல. 

தன் மீது அன்போ, மரியாதையோ கொண்டிராத ஒருவர் அடுத்தவருடய அன்பை, மரியாதையை உய்த்துணர முடியாது அப்படியெனில்,

அன்போ, நட்போ தொடர்ந்து நிலைத்திருப்பதன் ரகசியம் என்ன?

அன்பு வற்றாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும்!

உங்கள் அன்பு நன்கு மலர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில் மற்றவருக்கு உகந்த வகையில் நான் நல்லவனாக இருக்கவேண்டும். 

மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, உங்கள் மீதே மரியாதை கொள்ளுங்கள். 

உங்கள் வாழ்க்கையையும், செயல்களையும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக செய்யுங்கள்.

உண்மயான அன்பு பணத்தை வைத்து எடை போடக் கூடாது.

அல்ல பொருளை பகிர்வதோடு நின்றுவிடக்கூடா.

உங்கள் உறவுகளில் நீங்கள் தவறிழைக்கும் போது மற்றவர்கள் உங்களை மன்னித்துவிட்டால் மட்டும் போதாது.

நீங்களும் உங்களை மன்னிக்க வேண்டும்.

மற்றவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.

நீங்கள் மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது;

அவர்கள் உங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும்.
ஏனென்றால் உங்கள் வாழ்க்கையை யாரும் வாழ முடியாது. 

உங்கள் வாழ் நாளில் நீங்கள் பார்க்கப்போகும் அத்தன பேரிலும், உங்களை விட்டுப் பிரியாத ஒரேயொருவர் நீங்கள் மட்டும்தான்.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக, உற்சாகமாக, அர்த்தமுள்ளதாக வாழத் தொடங்கினால் போதும். 

உங்களுக்கு அமையும் உறவுகளும், மகிழ்வும் உங்களை விட்டு எளிதில் விலகி போகாது.

உங்கள் மனப்பான்மையைப் பொறுத்துத்தான் உங்கள் உறவு நீடிக்குமா, அல்ல காற்றில் கரந்த கற்பூரம் போலாகுமா எனச் சொல்ல முடியும்.

மனப்பான்மை என்றால் என்ன?

உங்களைப் பற்றி, மற்றவர்களைப் பற்றி, உங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் நாளடைவில் உங்கள் நம்பிக்கையாக மாறிவிடுகிறது. 

உங்களின் தீர்மானமான உணர்வுகள் நிரந்தர நிழலாய் மனதில் படிந்து விடுவதுதான் மனப்பான்மை..

உங்கள் உறவுகளின் அஸ்திவாரமான மனப்பான்மை எவ்வாறு உருவாகிறது?

நேற்றைய வார்த்தைகள் இன்றைய செயல்கள்..

இன்றைய செயல்கள் நாளைய மனப்பான்மைகள்..

இன்றய மனப்பான்மைகள் நாளைய குணங்கள்..

இன்றய குணங்கள் தாம் அவருடய நாளைய விதி!

எனவே,

ஆரோக்கியமான, வளர்ச்சியடையக்கூடிய மனநிலையை நாம் வளர்த்துக் கொண்டோம் என்றால் உறவுகள் இலேசில் புளித்துப் போகாது. 

ஐஸ்கிரீம் கலந்த அன்பு பேச்சுகள் எளிதில் அலுத்துப் போகாது.

No comments:

Post a Comment