Friday, May 17, 2013

நிறுவன திறன் விருத்தி என்றால் என்ன?


 நிறுவனத்தின் திறன் விருத்தி என்பது அதன் செயற்பரடுகளை அதிகரிக்கக் கூடிய திறமைகளைக் கொண்டு இயங்குவன என்று எழிமையாக குறிப்பிடலாம். ஒரு நிறுவனமாவது தன்னால் செய்யக்கூடிய அதி உச்ச சேவையை செய்யக்கூடிய அறிவையும் ஏனைய திறன்களையும் கொண்டிருப்பது என்று பொருள் .சொல்லலாம் ஆநேகமாக நிறுவனங்கள் ஏதோ செயற்பாடுகளைச் செய்து இதுதான் எமது உச்ச செயல்பாடு என்று எண்ணியவாறு எமது செயற்பாடுகளை ஒரு எல்லையுடன் நிறுத்திக்கொண்டு விடுகின்றன. தம்மால் இதற்குமேலும் சாதிக்க முடியும்  சேவையை  வளர்க்க முடியும் என்றவாறிலும் இன்னமும் உயர்வடைவதற்கு அறிவைப் பெறுவதற்கு எமது திறன்களை வளர்ப்பதற்கு இடமிருக்கின்றது என்றவகையிலும் சிந்திப்பதில்லை இதன் காரணமாகவே நிறுவனங்கள் திறன் விருத்தி அடைவதில்லை என்பது கருதப்படுகிறது.

ஓரு நிறுவனத்தின் திறன்விருத்தி என்பது அதனுடைய முகாமைத்துவ திறன்களிலும் ஏனைய நடவடிக்கைகளை செய்யும் திறன்களிலும் அவற்றை வழிடத்தும் திறன்களிலும் தங்கியிருக்கின்றது.

முகாமைத்துவ திறன்கள் என்று குறிப்பிடும் போது நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக வழிடத்தும் திறனுடன் திட்டமிடுதல் திட்டங்களை அமுலாக்கம் செய்தல்;; கண்காணித்தல் மதிப்பீடுசெய்தல் தவறுகளை திருத்திக் கொள்ளுதல் பிழைகள் வருகின்ற போது கட்டுப்படுத்துதல் நெறிப்படுத்துதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும் இத்தகைய சிறந்த முகாமைத்துவம் ஊடாக நிறுவனத்தில் உரிய வேலைகள் உரிய நேரத்தில் முடிக்கப்படும். செயற்படுகின்ற திட்டங்களுக்கு நடைமுறைகளுக்கு ஏற்படுகின்ற செலவீனங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும் பணம் மீதப்படுத்தப்படும் நேரம் மீதப்படுத்தப்படும். வளங்கள் மீதப்படுத்தப்படும் ஒரு சிறந்த முகாமைத்துவசெயற்பாடுள்ள நிறுவனத்தின் வெளியீடுகள் அல்லது அவற்றின் செயற்பாடுகள் தரரீதியாகவும் எணண்ணிக்கை ரீதியாகவும்  அதி உச்ச நிலையில் காணப்படும். தம்மால் அதி உச்ச சேவையை மக்களுக்கு எவ்வாறு வழங்கலாம் என்று தினமும் முகாமைத்துவத்தில் உள்ளவர்கள் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள் அதி உச்ச சேவையை வழங்குகின்றபோது வள விரயஙகள் தவிக்கப்படவேண்டியதும் கவனத்தில் எடுக்கப்படவேண்டிய ஒன்றாகும். நிறுவனத்தில் உள்ள திறன்கள் விருத்தியாகும் போது வளங்கள் மீதப்படுத்தப்படுகின்ற நிலமையும் தோன்றும்.

சுருக்கமாகவும் விரைவாகவும் காரியங்களை செய்யக்கூடியவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் உதாரணம் திறன்விருத்தியுள்ள ஒரு நிறுவனத்தின் மூல செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக காணப்படும். உதாரணம் எல்லோரும் செயற்படுவதுபோல அவர்கள் காகித்தையும் பேனாவையும் பாவிக்காது கணனியை பாவித்து வேலையை செய்வார்கள். கணனி பாவித்தல் என்பது ஒரு கௌரவத்திற்குரிய செயலாக அன்றி இந்த வேலையை இலகுவாகவும் கோவைகளை இலகுவான முறையில் பேணுவதற்கும் ஆய்வுகள்; பகுப்பாய்வுகள் போன்றவற்றை இலகுவாக கணனி மூலம் செய்வதன்மூலம் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் விரைவாக தகவல்களை அனுப்புவதற்கும் கணனி பயன்படுத்தப்படுவது வினைத்திறன் மிக்க செயற்பாட்டுக்கு வழிவகுக்கும் இத்தகைய செயற்பாடுகளை செய்கின்ற ஒரு நிறுவனம் ஆவது திறன் விருத்தி உள்ள நிறுவனமாக கொள்ளப்படுவதற்கு இது ஒரு உதாரணமாகும்.

இதே போல ஊழியர்கள் அல்லது பணியாளர்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நோக்கத்திற்காக என்ன என்ன செயற்பாடுகளை எவ்வப்போது எவ்வாறு செய்யலாம் என்ற அறிவை கொண்டிருனப்பார்கள். இவர்களின் செயற்பாடுகள் ஊடாக நிறுவனத்தினுடைய திறன் மேம்படுத்தப்படுகிறது இவ்வாறு பணியாளர்கNளின் அறிவு செயற்பாடுகள் வளங்களை பயன்படுத்துகின்ற பாங்கு இருக்கும் வளங்கள் உச்ச நிலைக்கு பயன்படுத்துகின்ற நிலை அதி உச்ச நிலை வழங்குகின்ற நிலை போன்றவை நிறுவனத்தினுடைய வினைத்திறனை அதிகரிக்கும். இவ்வாறான பல்வேறு வழிகளிலே வினைத்திறனை அதிகரிப்பதற்கான நிலை ஒன்றுதான் நிறுவனத்தின் திறன் விருத்தியாகும் இதற்கு என அறிவு நிதி மற்றும் தேவையான உபகரணங்கள் வாகனங்கள் கருவிகள் மற்றும் வழங்கள் தேவைப்படலாம். இவை அனைத்தையும் உரியமுறையில் பயன்படுத்திய நிறுவனம் தன்னுடைய நோக்கத்திற்கேற்ப மக்களுக்கு அதி உச்ச சேவையை வழங்குவதற்கு திறன் விருத்தி உள்ளதாக இருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment