இன்றைய இளைய சமுதாயத்தினர் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பல நல்ல பழக்க வழக்கங்களை ஏற்றுகொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளனர். ஏன் இது போன்ற பழக்க வழக்கங்களை தெரிந்துகொள்ள கூட விரும்புவதில்லை. சரி நம் முன்னோர்கள் கடைப்பிடித்த சில நல்ல பழக்கவழக்கங்களை பார்ப்போம். இந்த கருத்துக்களை தெய்வ திரு முருக கிருபானந்த வாரியார் அவர்களும் மற்றும் சில பெரியோர்களும் தொகுத்து வழங்கியதிலிருந்து சில.
01.வயிறு பசித்தால் மட்டுமே உணவினை உண்ண வேண்டும், பிறரின்
கட்டாயத்திற்காக உணவினை உண்ணக்கூடாது.
02.உணவினை வியாதிக்கு மருந்து உண்ணுவது போல உண்ணவேண்டும்.
ருசிக்காக உண்ணக்கூடாது. அது உடல் நலனை பாதிக்கும். உண்ணும் போது
மகிழ்வுடன் உண்ண வேண்டும்.
03.குழந்தைகளுக்கு முன் எதையும் அவர்களுக்கு தராமல் உண்ணக்கூடாது.
அதிலும் புகைத்தல், மது அருந்துதல் நிச்சயம் கூடாது.
04.எந்த பானத்தையும் எச்சில் செய்து குடிக்க கூடாது. நாம் குடித்த எச்சில்
பானத்தையோ அல்லது உணவையோ நம்மை விட பெரியவர்களுக்கு
தெரிந்தே தரக்கூடாது.
05. உணவினை நிந்திக்க கூடாது , உணவினை வீணாக எறிதல் கூடாது .
அன்னதானம் செய்பவர்களை எந்த காரணம் கொண்டும் இழிவாகப்
பேசக்கூடாது.
06. பந்தியின் நடுவே எழுந்திருக்கக் கூடாது, சாப்பிடும் போது
கோபப்படக்கூடாது, உண்ணும் போது குழந்தைகளை விரட்டுவது, அழுவது
கூடாது .உண்ணும் போது புறங்கையை நக்குவது, மிக சப்தத்துடன்
உறுஞ்சுவதுக் கூடாது.
07. உணவு உண்ணும் போது படுத்துக்கொள்ளக் கூடாது, கால்களை
நீட்டிக்கொண்டு உண்ணக்கூடாது. முதியவர்களை தவிர மற்றவர்கள்
தரையில் அமர்ந்துதான் உண்ண வேண்டும்.
08. ஈராமான ஆடைகளையோ அல்லது ஒற்றை ஆடையுடனோ உணவு
உண்ணக்கூடாது.(இவை ஓரளவு வசதியுள்ளவர்களுக்கு, உண்ண
உணவில்லாத பரம ஏழைக்கல்ல ).
09. நிச்சயம் பாதுகை அணிந்துகொண்டு உணவு உண்ணக்கூடாது. உண்ணும்
போது முகம்,கைகால்கள் சுத்தம் செய்த பின்னரே உணவருந்த வேண்டும்.
10. தரமான நல்ல நிலையிலுள்ள பொருட்களை மட்டுமே தானமாக
தரவேண்டும்.தரமில்லாத மற்றும் பாழான பொருட்களை யாருக்கும்
தானமாக தரக்கூடாது.
11. வயது வந்த பெண்களை தகுந்த காலத்தில்,தகுந்த வரனுக்கு தங்களின்
வசதிக்கு ஏற்ப திருமணம் செய்து தந்துவிடவேண்டும். பலனை
எதிர்ப்பார்த்து அவர்களின் திருமணத்தை தள்ளி வைத்தல் கூடாது.
12. கர்ப்பமாக உள்ள பெண்கள் சூரியன் மறையும் நேரத்தில் உணவு
உண்ணக்கூடாது. ஆடையில்லாமல் வெற்று உடலுடன் குளித்தல் கூடாது.
மாலை நேரத்தில் உறங்குதல் கூடாது.
13. கர்ப்பமான பெண்கள் மன அமைதித்தரும் பாடல்கள் மற்றும் அன்பு
பாசம்,தைரியம் வளர்க்கும் கதைகள் கேட்பது,படிப்பது போன்றவற்றில்
இடுபாடுக்காட்டவேண்டும்.
14. பொதுவாக பெண்கள், அதிலும் குறிப்பாக கர்ப்பமான பெண்கள் நடுநிசியில்
மயானம் மற்றும் பாழடைந்த கிணறு உள்ள பகுதிக்கு செல்லக்கூடாது.
கிரஹண காலங்களில் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளிவருதல்
கூடாது.
15. கிரஹண காலங்களில் வயிற்றில் உணவு இருத்தல் கூடாது.
கிரஹணத்திற்கு 8 மணிநேரத்துக்கு முன்பாக உணவு
உண்டு விடவேண்டும்.
16. பெண்கள் பூசணிக்காயை சுற்றி உடைக்க கூடாது, மனைவி கர்ப்பமான
காலத்தில், கணவன் பிணம் சுமக்கக்கூடாது மற்றும் சுடுகாட்டிற்கு
செல்லக்கூடாது.
17. எந்த மதத்துடைய புராண,இதிகாசங்களையும் பழித்தலோ அல்லது கேலி
செய்தலோ நிச்சயம் கூடாது.
18. வழிப்பாட்டு தளங்கள் மற்றும் பாதைகளில் அசுத்தம் செய்தல் கூடாது.
ஆண்டவன் வழிப்பாட்டு தளங்கள் உள்ள மலைகளில் மற்றும் அதன் வேறு
எந்த பகுதியலும் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் கூடாது.
19. பள்ளிகள்,மருத்துவமனைகள் மற்றும் ஆலயங்கள் அமைந்துள்ள
இடங்களில் அசுத்தம் செய்வதோ ,சத்தம்செய்வதோ மற்றும் மதுபானக் .
கடைகள் அமைத்தலோ கூடாது.
20. ஆண்டவனின் பெயர் அல்லது படங்கள் உள்ள ஆடைகளை அணிந்து
கொள்ளக்கூடாது. விளம்பரப் பொருட்களில் எந்த கடவுள் படங்களையும்
அச்சடித்து வியாபாரம் செய்தல் கூடாது. அது கடவுளை இழிவு செய்யும்
செயலாகும்.
21. நகங்களை அளவுக்கு அதிகமாக வளர்தலும், அதனை பற்களால் கடித்து
துப்புதலும் செய்யக்கூடாது. இதன் மூலம் கண்களுக்கு புலப்படாத
தேவையில்லாதா கிருமிகள் பரவும்.
22. வாங்கிய கடனை திருப்பிதராமல் ஏமாற்றக்கூடாது. கடன் தருவதையும்,
பெறுவதையும் தவிர்க்க வேண்டும் அது இருவருக்கும் நன்மை பயக்கும்.
23. பிணத்தின் புகையும்,காலை வெயிலும் மற்றும் இரவில் தயிரும் கூடாது.
24. ஜீவன்களின் முட்டைகளையோ அல்லது அதன் சிசுகலையோ கொள்வது
கூடாது.
25. காமந்தகாரன், துறவிபோல் வேஷம் போடுபவன், தேசவிரோதி,தர்ம
சிந்தனை இல்லாதவன், மற்றவர்களை குற்றம் கூறுபவன்,பெண்களிடம்
தேவையில்லாமல் சிரித்து சிரித்து பேசுபவன், கடவுளை இழிந்து பேசி
தன்னை உயர்த்தி கொள்பவன் இவர்களை வீட்டில் சேர்க்கக்கூடாது.
26. விடிகாலை 5 மணிக்கு விழித்தெழ வேண்டும், விழித்தவுடன் நம்மை .
தாங்கும் பூமித்தாயை வணங்கி எழ வேண்டும்.
27. தினமும் நீரால் உடல் சுத்தம் மிக்க அவசியம்,வாரம் ஒருமுறை
கட்டாயமாக தலைகுளியலும் செய்தல் வேண்டும்.
28. காலை, மாலை இரு வேளையிலும் தீபமேற்றி வீட்டின் முன் வாசலை
திறந்த நிலையிலும், பின் வாசலை மூடிய நிலையிலும் வைத்தல்
வேண்டும்.
29. வீட்டில் இரு வேலைகளிலும் மணி சப்தத்துடன் கூடிய பூஜை செய்தல்
வேண்டும்.
30. வாழை இலைகளில் உணவு பரிமாறும் போது உப்பிட்ட பதார்த்தங்களை
நடு மட்டைக்கு மேலேயும், உப்பில்லாதவைகளை நடு மட்டைக்கு
கீழேயும் பரிமாறவேண்டும்.
31.கோவில் இல்லா ஊரில் குடியிருக்க கூடாது, ஆலய பிரசாதங்களை
அலட்சியம் செய்தலோ அல்லது வீண் செய்தலோ கூடாது. ஆலயங்களில்
நுழைந்து விட்டால் வீண் பேச்சுக்கள் மற்றும் அரட்டைகள் கூடாது(
இக்காலத்தில் செல்போன் பேசக்கூடாது).
32. மனைவி கணவனை பற்றியோ அல்லது கணவன் மனைவியை பற்றியோ
அடுத்தவரிடம் தவறாக பேசக்கூடாது.
33. இல்லறம் என்ற வண்டிக்கு கணவன் மனைவி என்ற சக்கரம் சீராக
இருந்தால் தான் பயணம் வெற்றிப்பெறும். கணவன் மனைவியிடையே
விட்டுக்கொடுத்தல் வேண்டும்.
34. காமம் என்பது பெண்ணின் மீது வைப்பது மட்டும் அல்ல. காமம் என்பது ஒரு
பொருளின் மீது வைக்கின்ற அதிகப்படியான ஆசையும் காமம் எனப்படும்.
காமத்தின் மகன் கோபம், கோபத்தின் குமரன் மயக்கம்.
35. வசதியில்லாத புதுமண தம்பதியினர் கடவுள் படம் நிறைந்த அறையில்
தாம்பத்தியம் வைக்க நேரிட்டால் அது தவறில்லை.
கணவனும்,மனைவியும் வாழ்வது பிழையன்று. "இல்லறம் அல்லது
நல்லறமன்று" என்கிறார் ஔவையார் .
36. இறைவன் அனைத்து உயிரிலும் உள்ளான் எனவே கோவில்களில்
உயிரினங்களை பலியிடக்கூடாது அது மிக பெரிய பாவமாகும் .
37. கோழி முட்டை சைவ உணவாகாது. அதில் கரு இருப்பதினால் அது மாமிச
உணவே ஆகும். ( காந்தியடிகள் மருத்துவர் கூறியும் கோழி முட்டையை
உண்ண மறுத்தார் என்பதை அவரின் வரலாறு மூலம் அறிய முடிகிறது.)
38. பிறர் மனைவியை மனதினால் கூட நினைக்கக்கூடாது, பிறர் சொத்தினை
அபகரிக்க கூடாது, தேவையின்றி பருவ பெண்களை தொட்டு பேசக்கூடாது
அது நமது சகோதிரியாக இருந்தாலும் கூட.
39. எப்பொழுதும் பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது. வாயில்லா
ஜீவன்களை துன்புறுத்தக்கூடாது.
40. தாய்,தந்தை, குரு மற்றும் வயது முதிர்ந்த பெரியவர்களின் சாபத்திற்கு
ஆளாகக்கூடாது.
41. நமது கடமையை பிறர் செய்விக்க கூடாது.
42.தானம் தர யோசிக்கக்கூடாது, தந்தபின் தந்ததிற்காக வருந்தக்கூடாது,
பெற்றவரின் சொத்தாக மாறிய பின் நாம் சொந்தம் கொண்டாட கூடாது.
43. இளைஞ்சர்கள் சிறிது நேரமாவது குழந்தைகள் மற்றும் உறவினருடன் பேசி பழகி இன்பதுன்பங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.
44. தீண்டாமையை ஒரு போதும் ஏற்கக்கூடாது. யாரையும் தள்ளிவைத்து
வாழ்தல் கூடாது.
45. அரசாங்க நெறிமுறைகளை தவறாமால் கடைபிடிக்க வேண்டும்.
அரசாங்கத்துக்கு புறம்பாக நடக்க கூடாது. தவறை அகிம்சைவழியில்
சுட்டிக்காட்டலாம், அதிகாரத்தை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது.
46. வயதானவரையும், நோய்வாய்பட்டவரையும் அலட்சியம் செய்தல்
கூடாது.
47.சாலை விதிகளை மீறக்கூடாது . சட்டம் பொதுவானது எந்த ஒரு தனி
மனிதனும் அதனை மீறி நடக்க உரிமையில்லை.
48. இயற்கை வளங்களை அழித்தல் கூடாது.வாழும் காலத்தில் நம்மால்
முடிந்தது ஒரு மரமாவது வளர்க்கவேண்டும். நமக்கென என இருத்தல்
கூடாது.
49. மனைவியை தவிர பிற பெண்களிடம் உறவு வைத்தல் கூடாது.
ஒருவனுக்கு ஒருத்தி என மரபு மீறாமல் வாழ்தல் வேண்டும். பகல்
பொழுதில் கணவன்,மனைவி உறவு வைத்தல் கூடாது. பெற்றோர்,
பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் போது கணவன், மனைவி
கண்ணியமின்றி நடத்தல் கூடாது.
50. உணவு பொருட்களில் ஏமாற்றுதல் கூடாது. கையூட்டு பெறுதல் பாவம்
அதனை செய்யக் கூடாது.அது நேரடியாக இல்லாமல் மறைவாக பிறருக்கு
செய்யும் துரோகம்.
No comments:
Post a Comment