முயற்சியை தீவிரமாக்குங்கள்!!!
* தொடக்கத்தில் கறையான் சிறிதாகவே தோன்றும். சிறுகச்சிறுக பெருகி, நாளடைவில் மரக்கட்டை முழுவதும் செல்லரித்துப் போகும். அதுபோல, தீய சிந்தனைகள் சிறிதாகவே தொடங்கும். ஆனால், முடிவில் ஒருவனை முற்றிலும் அழித்துவிடும்.
* உணவு உடனே ஜீரணமாக வேண்டும். அதுபோல ஒவ்வொரு நாளும் கேட்கின்றநல்லசிந்தனைகளை அன்றைக்கே நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால்அச்சிந்தனையைக் கேட்டதில் பயனில்லை.
* சேற்றுநிலத்தை மெதுவாகப் பாயும் நீரோட்டத்தால் சரிசெய்ய முடியாது. வேகமாகவும், முழுமையாகவும், மூலை முடுக்கெல்லாம் அடித்துச் செல்லும் வெள்ளம் போல தண்ணீர் பாயவேண்டும். அதுபோல, ஆன்மிகத்தில் சாதனை செய்ய நினைத்தால் அரை மனதுடன் இறங்கக்கூடாது. இது ஆபத்தானது.
* கிணற்றுக்கோ, ஏரிக்கோ அல்லது பரந்த சமுத்திரத்திற்கோ கூட நீர் எடுத்துவரச் சென்றாலும், நம் கையில் இருக்கும் பாத்திரத்தின் அளவுக்குத் தான் தண்ணீரை எடுக்க முடியும். அதுபோல, நம் செய்யும் செயலில் நம் முயற்சிக்கு தகுந்தவாறே பலன் கிடைக்கும். எனவே முயற்சியை தீவிரமாக்குங்கள்.
No comments:
Post a Comment