Wednesday, January 23, 2013

சந்தோஷம் and சிந்தனைகள்

சந்தோஷம்
  1. அடுத்தவர்களைப் பற்றி நாம் சிந்தித்து அவர்களுக்காக ஏதாவது செய்யாவிட்டால், சந்தோஷத்திற்கான சிறந்த வழியை இழந்துவிடுகிறோம்.
  2. பெறுவதிலோ, வைத்திருப்பதிலோ சந்தோஷம் இல்லை. தருவதில்தான் சந்தோஷம் இருக்கிறது.
  3. சந்தோஷம் என்பது நறுமணத் திரவியத்தைப் போல. உங்கள் மீது சில துளியாவது படாமல் உங்களால் அடுத்தவர் மேல் அதைத் தெளிக்க முடியாது.
  4. ஒரு மனிதனிடம் என்ன இருக்கிறது என்பதைவிட அவன் என்னவாக இருக்கிறான் என்பதே  அவனுக்கு சந்தோஷத்தைத் தருகிறது.
  5. ஒரு மனிதன் தனியாக இருக்கும்போது அவனிடம் என்ன இருக்கிறது, எதை யாராலும் அவனுக்குத் தர முடியாது அல்லது அவனிடமிருந்து எடுத்து செல்ல முடியாது என்பது  நிச்சயம் அவனிடம் இருக்கும் செல்வங்களைவிட, உலகின் கண்களுக்கு அவன் எப்படித் தென்படுகிறான் என்பதைவிட அவசியமானதாகும்.
  6. சுவையான கருத்துக்களை சிந்திப்பவனே மிகவும் சந்தோஷமான மனிதன்.
  7. உள்ளிருக்கும் எண்ணங்கள், உணர்வுகளிலிருந்து வரும் சந்தோஷம்தான் உங்களுடனேயே நிலைத்து நிற்கிறது.


சிந்தனைகள்

  1. சந்தோஷத்தின் ஊற்றைத் தனக்குள்ளே அதிகம் காணக் காண மனிதன் அதிக இன்பமடைவான். மிக  உயர்ந்த, பலதரப்பட்ட, நீடித்திருக்கும் இன்பங்கள் மனத்திலிருந்து எழுபவையே.
  2. உயர்ந்த சிந்தனைகள் உள்ளவர்கள் தனிமையில் இருப்பதில்லை.
  3. நம்மில் நாம் திருப்த்தி காணாவிட்டால் அதை வெளியே தேடுவது பயனற்றது.
  4. நலமின்றி சந்தோஷம் சாத்தியமில்லை. நம் வாழ்வின் ஆரோக்கியத்தின் ஆயுள் அதையே பொறுத்தது. சந்தோஷம் மனதிலிருந்தே வருகிறது.
  5. யார் அதிகம் சிந்தித்து, உயர்ந்த உணர்வுகளை உணர்ந்து, சிறந்து செயல்படுகிறார்களோ அவர்களே உன்னத வாழ்வு வாழ்கிறார்கள்.
  6. உங்களுக்கு நீங்களே சந்தோஷமாக இருங்கள். நீங்கள் நினைப்பதைவிடக் காலம் இன்னும் குறைவாகவே இருக்கிறது.
  7. நம்பிக்கையின்றி மனிதனால் எதுவும் செய்ய முடியாது. நம்பிக்கை இருந்தால் எல்லாம்  சாத்தியம்.
  8. நம்பிக்கை இருக்குமிடத்தில் வீரம், மனோபலம், விடாமுயற்சி, வலிமை எல்லாமே இருக்கும்.


No comments:

Post a Comment