Sunday, January 20, 2013

ஆளுமைத் திறன் / எண்ணங்கள் / தன்னம்பிக்கை / குறிக்கோள்


ஆளுமைத் திறன்


ஆளுமைத் திறன் என்பது ஒருவனுடைய சிந்தனையால் அல்லது செயலால் பிறரிடம் ஏற்ப்படும் பாதிப்பை குறிக்கிறது. ஆழ்ந்த, தெளிவான மற்றும் கூர்மையான மனநிலை உள்ளவானின் ஆளுமை பிறரிடம் அதிகமான பதிப்பை ஏற்படுத்துகிறது (உதாரனம்: மகாத்மா கந்தி)
தனிமனிதனின் ஆளுமைதிறன் அவன் வாழ்க்கையையே மாற்றி அம்மைக்கிறது. ஒட்டுமொத மக்களின் ஆளுமைதிறன் சமுதாயத்தையே மாற்றியமைக்கிறது.

ஒருவனுடைய ஈர்ப்பும், எர்ப்பும் அவனுடைய ஆளுமைதிறனை பொறுத்தே அமைகிறது.  பொதுவாக பலமான மனநிலை உள்ளவனின் ஆளுமைதிறன் சற்று பலம் பொருந்தியதாகவும், பலவீன மனநிலை உள்ளவனின் ஆளுமைதிறன் சற்று குறைந்தும் காணப்படுகிறது.
தொடர்ச்சியான பழக்கம், சீரான சிந்தனை, ஆழ்ந்த மனநிலை, ஒருவனுடைய ஆளுமைதிறனை அதிகரிக்கிறது. இவை மற்றவரிதமிருந்து சற்று உயர்வான இடத்தில் வைக்கிறது.

“அணைத்து சக்திகளும் உன்னில் உள்ளன; உன்னால் எதையும், எல்லாவற்றையும் சாதிக்க முடியும்; இதில் நம்பிக்கை கொள்ளுங்கள், பலவீனன் என்று ஒரோபோதும் நம்பாதீர்கள். எழுந்திருங்கள், உங்களுள் இறுக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்துங்கள்.”  சுவாமி விவேகனந்தர்.

எண்ணங்கள்

எண்ணங்களே வாழ்க்கையை அமைக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களே அவனது வாழ்க்கைக்கு காரணமாய் அமைகிறது. நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள், நல்ல சூழ்நிலையை உருவாக்குகின்றன. தீய எண்ணங்கள், தீய சிந்தனைகள், தீய சூழ்நிலையை உருவாக்குகின்றன.
இந்த பிரபஞ்சம் முழுவதுமே என்ன அலைகளால் சூழப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்கையும், சுற்றுப்புறமும், செயல்பாடுகளும் இந்த என்ன அலைகலாலேயே  வழிநடத்தப்படுகிறது.
நல்ல சிந்தனையை விதைக்கும் மனிதன் நல்ல என்ன அலைகளால் ஈர்க்கப்படுகிறான். அதே என்ன அலைகள் கொண்ட மற்றவர்களும் அவன்பால் ஈர்க்கபடுகிரார்கள். அதேபோல் தீய சிந்தனையை விதைக்கும் மனிதன் தீய என்ன அலைகளால் ஈர்க்கப்படுகிறான்.
நல்ல எண்ணங்களை விதைப்போம், நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.
“மனமிருந்தால் மார்க்கமுண்டு”


தன்னம்பிக்கை

ஒவ்வொருவரின் வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் தன்னம்பிக்கை மிக அவசியம். தன்னம்பிக்கை வலுப்பெற தன்னை பற்றிய சுய பரிசோதனை முதலில் அவசியம்.
ஒரு மனிதனின் தன்னம்பிக்கை அவனது செயல்பாடுகளில் அவனுடைய ஆழ்ந்த ஈடுபாட்டை அதிகரிக்கும். தன்னம்பிக்கையோடு கூடிய சரியான செயல்முறை (Strategy) நிச்சயம் வெற்றி தரும்.

“நம்பிக்கை உள்ளவன் 50 தவறுகள் செய்கிறான், நம்பிக்கை இல்லாதவன் 5000 தவறுகள் செய்கிறான்.”


குறிக்கோள்

குறிக்கோள், ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் கைகொள்ளவேன்டியது அவசியம்.
குறிக்கோள் உடைய மனிதனின் சிந்தனையை நேர்படுத்தப்படுகிறது, சக்தி ஒருமிக்கப்படுகிறது, ஆக்கம் பலப்படுதபடுகிறது, கால அளவு சீரமைக்கபடுகிறது.
வாழுகிற வாழ்கை எந்த அளவில் இருந்தாலும் ஒரு சிறிய குறிக்கோலாவது இருப்பது நன்மை பயக்கும்.
சேரும் இடம் தெரியா பயணம் சரியான ஊர் போய் சேர்வதில்லை,
குறிக்கோள் இல்லாத வாழ்கை முழுமை பெறுவதில்லை.

No comments:

Post a Comment