Sunday, January 20, 2013

எங்கும் வெற்றி எதிலும் வெற்றி ...


எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

கோவையில் பெரிய கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பங்குபெற்றோர் அனைவரும் நிறைய படித்தவர்கள். பேச்சாளர்கள் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். ஆங்கிலத்துடன் தமிழ் கலந்து பேசிய ஒருவர் பேச்சின் முடிவில், “தமிழில் பேசியமைக்காக தலைவரும், பார்வையாளர்களும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்” என்று கூறி முடித்தார்.
அடுத்ததாக பேச வந்த தமிழ் வளர்ச்சித் துறைஇயக்குநர் முனைவர் இராஜேந்திரன் பேசத் தொடங்கியதும், நான் தமிழில்தான் பேசுவேன். இங்குள்ளவர்களுக்கு தமிழ் தெரியும். நான் தமிழில் பேசுவதற்காக மன்னிப்பு கேட்கவும் மாட்டேன் என்றபடி தன்னுடைய உரையைத் துவக்கினார்.
இதில் முக்கிய அம்சம் அவருடைய சுயமதிப்பு.
சுயமதிப்புள்ள ஒருவர் எப்படி இருப்பார், அதை பெறவிரும்புபவர் எப்படி செயல்பட வேண்டும் என்பதைப் பற்றி சற்று ஆய்வோம்.
சுயமதிப்பு குறைந்தவர்களின் செயல்கள்
  • மற்றவர்களையே குறைசொல்லுதல்.
  • குறுகிய பார்வை
  • எல்லாவகை சூழ்நிலைகளையும் குறைசொல்லுதல்
  • எதற்கெடுத்தாலும் கோபம்
  • மதுப்பழக்கம், போதை மருந்து, செய்கிறவேலை. காதல், மத ஈடுபாடு போன்றஎதுவானாலும் அதில் அதீத தீவீரம்.
  • மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை வலியுறுத்துதல்.
  • கடவுளை அளவிற்கு மீறி சார்ந்திருத்தல்.
  • மற்றவர்களை தன் வழிக்கு வளைத்தல்.
  • மற்றவர்களை குற்றவாளிகளாக குற்றம்சாட்டி கட்டுப்படுத்துதல்.
  • மனதில் அதிக குற்றஉணர்வு
  • 100 சதம் சரியாக இருக்க எதிர்பார்த்தல்
  • பிறர் உதவியை உதறுதல் (தேவையிருந் தாலும்)
  • எல்லா நிலையிலும் பணம், நேரம் போதாத நிலை.
  • சுயமதிப்பு உள்ளவர்களின் செயல்கள் :
  • நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல்
  • திறந்த மனநிலை, உயர்ந்த பண்புகள்
  • எந்த சூழ்நிலையிலும் கோபமில்லாமல் செயல்படுதல்
  • கோபத்திலும் நிதானம்
  • பணம், நேரத்திற்கேற்ப வாழ்க்கையை திட்டமிடுதல்
  • உதவிகளை ஏற்றுக்கொண்டாலும் அதற்காக ஏங்காதிருத்தல்.
  • எல்லா செயல்களும் நன்றாக நடைபெறும் என்றகோணத்தில் எதிர்பார்த்தல்.
  • தன்மீதோ பிறர்மீதோ குற்றஉணர்வுகளை திணிக்காமை.
  • மற்றவர்களை கட்டாயப்படுத்தாமல் ஒத்துழைப்புப் பெறுதல்.
  • கடவுள் நம்பிக்கை இருந்தாலும் தனது செயல்களை முழு ஈடுபாட்டுடன் செய்தல்.
  • குறிக்கோளிலிருந்து மாறாமலும் அதே நேரம் சூழ்நிலைக்கேற்றவாறு செயல் படுதல்.
  • உணர்வுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்தல்.
சுயமதிப்பை வளர்க்க உறுதிமொழி
  • என்னுடைய எல்லா செயல்களின் விளைவுகளுக்கும் நானே பொறுப்பு.
  • என்னுடைய பொறுப்புகளை நானே முன்வந்து ஏற்றுக்கொள்வேன்.
  • செயல்பாடுகளின்போது ஒருசில தவறுகள் ஏற்படவே செய்யும் என்பதை ஏற்பேன்.
  • என்னுடைய செயல்களுக்கு முடிவுகளை நானே எடுத்து, அதன் விளைவுகளையும் ஏற்பேன்.
  • என் வாழ்க்கையில் நடந்த நன்மைகளை எண்ணி மகிழ்வேன்.
  • போலித்தனமான செயல்களில் ஈடுபடமாட்டேன்.
  • ஒவ்வொரு மனிதருடைய இயல்பு களையும் ஏற்றுக்கொள்வேன்.
  • நான் சந்திப்பவர்களிடம் மனதாரப் பழகுகிறேன்.
  • நான் நேராக நடப்பேன். பிறருடைய கண்ணைப் பார்த்து நேருக்குநேர் பேசுவேன்.
  • தவறுகளுக்காக போலியான காரணங் களை சொல்லாமல் உண்மையை ஏற்றுக் கொள்வேன்.
  • என்னுடைய நியாயமான உணர்வுகளை வெளிப்படுத்துவேன்.
  • பிறருடனான உணர்வுகளை நானே முன்வந்து வளர்ப்பேன்.
  • என்னுடைய செயல்களுக்கு அறிவியல் பூர்வமான ஆய்வுகளை செய்தபின்னர் முடிவெடுப்பேன்.
  • நான் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்
  • பிறருடைய ஆமோதிப்பிற்காக ஏங்க மாட்டேன்.
  • எல்லா பிரச்சனைகளும், குறிக்கோள் களும் எனக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
  • நான் எதையும் தள்ளிப்போட மாட்டேன்.
  • என்மீது திணிக்கப்படுகிற நியாயமற்ற குற்றசாட்டுகள், அவமானங்கள் மற்றும் குற்றஉணர்வுகளை ஏற்க மாட்டேன். நான் நடைமுறைகளை ஏற்று, என்னால் முடியாதவைகளை ஒப்புக்கொள்வேன்.
  • என்னுடைய செயல்களை முழு மன ஈடுபாட்டுடன் செய்வேன்.
  • பிறருடைய நியாயமில்லாத பணம், உதவிகளை ஏற்க மாட்டேன்.
  • என்னுடைய தவறுகளுக்கு பிறரை குற்றம் சாட்ட மாட்டேன்.

No comments:

Post a Comment