கவலை ஏன்?
கவலைப்பட இரண்டு விஷயங்கள் தான் இருக்கின்றன,ஒன்று,நீங்கள்,ஆரோக்யமாய் இருக்கிறீர்கள்,அல்லது நோயுடன் இருக்கிறீர்கள்.ஆரோக்யமாய் இருந்தால் கவலை இல்லை.நோயுடன் இருந்தால்,கவலைப்பட இரண்டு விசயங்கள்தான் உள்ளன. ஒன்று நீங்கள் குணமடைவீர்கள்,அல்லது மரணம் அடைவீர்கள். குணமடைந்தால் கவலைப்பட ஒன்றும் இல்லை. இறந்தால் கவலைப்பட இரண்டு விசயங்கள்தான் இருக்கின்றன. ஒன்று நீங்கள் சொர்க்கம் போவீர்கள்,அல்லது நரகம் போவீர்கள். சொர்க்கம் போனால் கவலைப்பட ஒன்றும் இல்லை. நரகம் போனால், அங்கு உங்கள் பழைய நண்பர்களைப் பார்த்து கைகுலுக்கவே நேரம் போதாது.அப்போது கவலைப்படுவதற்கு நேரம் இருக்காது. எனவே எப்படிப் பார்த்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
பிரச்சினை ஏன்?
ஒருவருக்கு ஏன் பிரச்சினை வருகிறது என்று சிந்தித்துப் பாருங்கள்.நிகழ்வுகளையும் சம்பவங்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருப்பதால்தான் ஒருவருக்குப் பிரச்சினைகள் வருகின்றன.வாழ்க்கையில் சிக்கல்,தெளிவு இரண்டுமே சம அளவில் இருக்கின்றன.இவை இரண்டையும் எப்படி சமன் செய்கிறோம் என்பதில்தான் வாழ்வின் சூட்சுமம் இருக்கிறது.சிக்கலான தருணங்கள் வரும்போது,டென்சன் உச்சத்தை அடையும்போது, சிக்கலான விசயங்களை ஒதுக்கி வைத்து விட்டு, உங்கள் முன் தெளிவாக இருக்கும் எளிமையான விசயத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.தானாக அமைதி பிறக்கும்.மனதில் அமைதி தவழும் தருணங்களில், அதிக கவனம் தேவைப்படும் சிக்கலான விசயங்களுக்கு தீர்வு காணுங்கள்.வாழ்க்கை எளிய விஷயங்கள் மட்டும் கொண்டதாயிருந்தால் விரைவில் ஒருவர் சோம்பேறியாகக் கூடும்.அதேபோல வாழ்க்கை சிக்கலானதாக மட்டும் இருந்தால் ஒவ்வொரு நாளும் டென்சன் தான்.இரண்டையும் சாமர்த்தியமாக சமாளித்தால் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்.
புத்தி
நமது புத்தி எட்டு அங்கங்கள் கொண்டது . இதை அஷ்டாங்க புத்தி என்று சொல்வர்.
1.கேட்டலாகிய ஆற்றல்.இதை கிரஹணம் என்பர் .
2.கேட்டதைத் தன்னுள் நிறுத்துதல்.-தாரணம்.
3.அதை வேண்டும்போது நினைவு கூறல்-ஸ்மரணம்
4.அதை எடுத்து விளக்குதல்-பிரவசனம்
5.ஒன்றைக் கொண்டு மற்றொன்றை அறிதல்-யூகம்.
6.வேண்டாத இடத்தில் சிலவற்றை மறைத்தல்.-அபோஹணம்
7.ஒன்றைப் பற்றி முழுமையாக அறிதல்-அர்த்த விஞ்ஞானம்.
8.மெய்யறிவு பெறுதல்-தத்துவ ஞானம்.
No comments:
Post a Comment