"பிரச்சனையில் இருந்து தப்பித்து போவதற்கு எவ்வளவு சக்தி தேவைப்படுகிறதோ அதே அளவு சக்திதான் பிரச்சனையை புரிந்துகொண்டு வெற்றி கொள்ளுவதற்கும் தேவையாக இருக்கிறது”.
பிரச்சனையில் இருந்து தப்பித்துப்போக முயன்றால் அது உங்களை தொடர்ந்துவந்து கொண்டே இருக்கும். பிரச்சனையை புரிந்து கொண்டு நீங்கள் தீர்க்க முயலும் போது, அது உங்களை விட்டு முற்றிலுமாக நீங்கி விடும். பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்குமாதலால், அவற்றை அவ்வப்போதே தீர்த்து விடுவது அவசியம். இல்லாவிட்டால் அவை ஒன்று சேர்ந்து சுமையாகி உங்களை அழுத்தத் தொடங்கும். தீர்க்க முடியாத பிரச்சனைகளால்தான் உலகத்தில் பல ஆண்களும், பெண்களும் மன அளவிலும் உடல் அளவிலும் சோர்வுற்று முறிந்து போகிறார்கள். எந்த அளவிற்கு ஒருவன் பிரச்சனையி்ன் யதார்த்தத்தை நேர்முகமாகச் சந்திக்கிறானோ அந்த அளவுக்கு அவன் பலசாலியாக வெளிப்படுகிறான். அதே சமயம் எந்த அளவுக்கு பிரச்சனையில் இருந்து தப்பி ஓட முயல்கிறானோ, அந்த அளவுக்கு வாழ்க்கையினையும் சிக்கலாக்கிக் கொள்கிறான். பிரச்சனையை நேரடியாகச் சந்தித்து, அதன் மையப்பகுதியில் நுழைந்து, அதன் தன்மையினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுகின்ற போது, நீங்கள் பலம் பெறுவதோடு அதைச் சமாளிக்கின்ற திறமையினையும் பெற்று விடுகிறீர்கள். மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு வலிமையுண்டு வெற்றிதரும் வருந்திடாதே! எதிர்த்து வரும் துன்பத்தை மதிக்கும் தன்மை எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமடா!! “பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும், பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் தான் மகிழ்ச்சியே இருக்கிறது”.
No comments:
Post a Comment