முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிர்ஷ்டசாலி…
இரண்டாம் முயற்சியில் வெற்றி பெறுபவன் புத்திசாலி…
முன்றாம் முயற்சியில் வெற்றி பெறுபவன் தைரியசாலி…
நான்காம் முயற்சியில் வெற்றி பெறுபவன் அனுபவசாலி..
வெற்றி பெரும் வரை முயற்சி செய்பவன் சாதனையாளன்…
துரியோதர சகோதரர்களுக்கு எப்பொழுதுமே ஆற்றல் மிகுந்த அர்ச்சுனன் மீது பொறாமை, விரோதம்.
துரோணர் தங்களைவிட அர்ச்சுனன் மீது அதிக அக்கறைகாட்டுவதாகவும், தனியாக வித்தைகளை கற்றுத் தருவதாகவும், தங்களுக்கு சரியாகக் கற்றுத் தருவதில்லை எனவும் குற்றம் சுமத்தினர்.
பீஷ்மர் முதலான பெரியோர்களிடம் இந்த வழக்கு வந்தது. இதை தெளிவுபடுத்த ஒரு பரிசோதனை வைக்கப்பட்டது.
துரியோதன சகோதரர்களிடமும் பாண்டவர் களிடமும் சரிசமமான பொற்காசுகள் வழங்கப் பட்டன. அதைக் கொண்டு இருவரும் வீடு நிறைய பொருட்களை வாங்கி வைக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.
துரியோதனன் சகோதரர்கள் கொடுக்கப்பட்ட காசுகளைக் கொண்டு வீடு நிறைய ‘வைக்கோள்’ வாங்கி கதவு திறக்க முடியாத அளவு அடைத்து வைத்தனர்.
பாண்டவர்களோ, விதவிதமான பழ வகைகள், வாசனைப் பொருட்கள், விளக்கு தீபம் ஏற்றுவதற்கான பொருட்கள் என பலவிதமான பொருட்கள் வாங்கி வீட்டை அழகுபடுத்தி விருந்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.
பெரியோர்கள் அனைவரும் துரியோதனன் வீட்டிற்குச் சென்றனர். அங்கு வீட்டிற்குள் நுழைய முடியாத அளவு ‘வைக்கோள்.’ வீடு நிறைய பொருட்களை வாங்கி வைத்துவிட்டோம் என்ற ஆணவத்தில் வெளியே துரியோதன சகோரர்கள். பெரியோர்களை வீட்டிற்கு உள்ளே அழைத்து உபசரிக்காமலே அனுப்பி வைத்தனர்.
பாண்டவர்களோ அனைவரையும் உள்ளே அழைத்து, வீடு நிறைந்த விளக்கொளியில் விருந்து வைத்து மரியாதை செய்து அனுப்பிவைத்தனர். வீடு நிறைய விளக்கின் ஒளி இருந்தது. அதில் அவர்களுடைய அறிவுடைமை வெளிப்பட்டது.
ஆம்!..நமக்கும் கிடைக்கிறமூலதனத்தை நாம் சரியான விதத்தில் பயன்படுத்துவதுதான் அறிவு. எல்லோருக்கும் சமம்தான் மூளையின் விகிதம், பயன்படுத்தும் விதத்திற்கு ஏற்பதான் பலன்கள் கிடைக்கும்.
தொழில் ஒன்றையே பலர் செய்தாலும் ஒரு சிலர் மட்டும் வெற்றி பெறுவதற்கான காரணம் இதுதான். சிந்தனை உயர்வாகும் போது தான் சிறப்பு அமைகிறது.
No comments:
Post a Comment