Saturday, January 19, 2013

பெருநிறுவன வெற்றிப் பாடங்கள் (Corporate Success Lessons)

பெருநிறுவன வெற்றிப் பாடங்கள் (Corporate Success Lessons)
              அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
           
                          


                 பெருநிறுவன வெற்றிப் பாடங்கள் 
                          (Corporate Success Lessons)

                                   



வெற்றிக்கான தேவைகள் - விளக்கங்கள்


வாய்ப்புகள் (opportunities) :



பலவித பெரிய பிரச்சனைக்குள் வாய்ப்புகள் என்பது சிறு சிறு புள்ளிகள் போல் கட்டாயம் இருக்கும். அதை நாம் நுண்ணிப்பாக கவனித்து பயன் படுத்திக்கொள்ள தவறக்கூடாது.




வெற்றி (Success) :



பலர் வெற்றியை தூங்கிக்கொண்டு கனவில் அனுபவிக்கும்போது வெகு சிலரால் தான் விழித்துக்கொண்டும், முயற்சியுடன் உழைத்துக்கொண்டும் தங்கள் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறனர்.


உந்துசக்தி  (motivation):



உழைப்பின் ஓட்டத்தை சரியான திசையில் தன்னம்பிக்கையுடன் தூண்டிவிடும்போது அபரிவிதமான சக்தி கிடைக்கின்றது.


ஊக்கப்படுத்துதல் :


ஒரேநாளில் ஒருவனை ஊக்கப்படுத்திவிட முடியாது. அது மூளையை  சிறிது சிறிதாக செதுக்குவது போன்றதாகும். அழகான அதிசயமான சிற்ப்பங்கள் ஒரே நாளில் செதுக்கிவிட முடியாது.அதாவது உடம்பிற்கு சிறிது சிறிதாக ஊட்டச்சத்து அளிப்பது போன்றதாகும். ஒரே சமயத்தில் அதிகப் படியான ஊட்டச்சத்துகளை உட்கொண்டால் உடம்பால் ஏற்றுக்கொள்ள முடியுமா? முறைப்படி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே தெலுத்தினால் தான் ஊக்கம் வேலை செய்யும். ஒரேதடவை அதிகமாக ஊக்கப் பயிற்சி கொடுத்தால் அதிகப் படியான சோர்வு ஏற்ப்பட்டு கடைசியில் எழும்ப முடியாதபடி செய்துவிடும் 



மனப்பான்மை அல்லது  மனப்பாங்கு (attitude) :


உனது முகத்தை எப்போதும் சூரியனை நோக்கி ஓர் வெளிச்சத்தை நோக்கி இருந்தால் உன்னால் உன் நிழலை பார்க்கமுடியாது.
அதுபோல் உனது எண்ணத்தை வெற்றியை நோக்கி குவிக்கப்படும் போது தோல்வி என்பது உனக்குத் தெரியாது (வராது).

உன் எதிரே இருக்கும் எல்லாப் பிரச்சனைகளையும் உத்வேகத்துடன் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுங்கள். ஏனென்றால் அதில் தான் உனது வாழ்க்கை அடங்கியிருக்கின்றது.


மாற்றங்கள் (Changes):

  

உனது தொழில் மற்றும் வாழ்கையின் பயணத்தின்போது வளைவான பாதையின் கடைசியில் உன்னால் பாதை தெரிய முடியாததைப்  பார்த்து அதுவே பாதை முடிந்துவிட்டது என்று எண்ணி அங்கேயே நின்று விடாதே !   நீ வளையாமல் அடம்பிடித்து இருக்காதே! அது உண்மையில் முடிவல்ல! சற்றே வளைத்து பயணித்துப் பார். மேலும் பாதையின் விரிவை பயணித்து மேலும் அனுபவிக்கலாம்.

அதுபோல் மாற்றத்திற்கு பயந்து உனது கடின உழைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தால் முன்னேற்றம் என்பது கேள்விக்குறியே? 

அதாவது கடலில் ஏற்ப்படும் காற்று மற்றும் அலைகளை அனுசரித்து பயணம் செய்தால் தான் உன் இலக்கை அடைய முடியும்.

ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்றுக்கொள் !

முன்னேற்றம் தானாகத் தேடி வரும்!


பந்தயம் (Challenge ) :

 

அமைதியான கடலில் யார் வேண்டுமானாலும் எந்தவித கஷ்டமில்லாமல் அழகாக பயணம் செய்யலாம். ஆனால் உனது திறமை கடலில் ஏற்ப்படும் சூறாவளி காற்றை சமாளித்து பாதுகாப்புடன் பயணம் செய்வதில் தான் இருக்கின்றது.


துணிச்சல் (Risk) :


புதிய கடல் நாடுகளை காணவேண்டுமென்றால் இப்போது உனக்குத் தெரியும் கடற்கரையை காணாதவாறு தாண்டி பயணம் செய்ய வேண்டும்.

திட்டமிடுதல் (Plan):

எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கலாம். திட்டமிடுதல் முதலில் தானே வரவேண்டும். ஏன் கடைசியில் வருகின்றது என்று? ஏனெனில் மேற் கூரியவைகள் அனைத்தும் இருந்தால் தாள் தெளிவான திட்டம். தீட்ட முடியும். அவைகள் இல்லாமல் திட்டம் தீட்டுவது வெறும் பேப்பர் அளவிலே காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும்.

எப்படி திட்டமிடுவது?

* முதலில் தன்னால் அடைய முடிந்த இலக்குவை குறித்துக் கொள்ளுங்கள்.

* எந்தெந்த வழிகளில் அடையலாம் என்பதை தெளிவாக எழுதிக் கொள்ளுங்கள்.

* அவற்றினால் ஏற்படும் பிரச்சனைகளையும் அதை தீர்வு காணும் முறையினையும் விவரமாக எழுதுங்கள்.  

* இலக்கை அடைவதற்கு தகுதியான நேர் சிந்தனை உடைய ஆட்களை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

* எப்போது இலக்கை பற்றிய சிந்தனையிலே இருங்கள்.

* செயல்களை செய்யத்தொடங்குகள்.  

* செயல்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் திசை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளுங்கள். 

* தோல்வி ஏற்ப்பட்டால் மாற்றுப் பாதையில் உடனே செல்வதற்கு தயாராக வைத்திருங்கள்.

* இப்போது உங்கள் திட்டம் வெற்றி தான்.

* மீண்டும் அடுத்த திட்டத்திற்கு தயாராகிக் கொள்ளுங்கள்.

வெற்றிக்கு வாழ்த்துக்கள் .

No comments:

Post a Comment