1.உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டம் மனதை வலிமையாக்கும் -செனகா.
2.கடினமான உழைப்பே சிறந்த அதிர்ஷ்டமாகும் -டெம்பஸ்
3.நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.
4.திறமைதான் ஏழையின் மூலதனம் -எமர்சன்
5.பசியுடையவனின் புன்னகை, செயற்கையாயிருக்கும்.
6.பெரிய பெரிய சாதனைகளனைத்தும் செய்து முடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தினால்தான் -மேலை நாட்டறிஞர்
7.மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை -லாவோட்ஸே
8.அறிவாளி, ஒருபோதும் சோம்பேறிகளுடன் நேரத்தை வீணடிக்க மாட்டான்.
9.அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால் அல்ல; விடாமுயற்சியால்தான் -ஜேம்ஸ் ஆலன்
10. கீழ்த்தரமான தந்திரத்தால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது -விவேகானந்தர்
11.நேரப்படி வேலையைச் செய்கிறவர்கள் முறையான சிந்தனை வளத்தைப் பெற்றவர்கள் – பிட்டின்
12.துணிவுமிக்கவர்களின் அருகிலேயே எப்போதும் அதிர்ஷ்டம் நிற்கிறது. – வெர்ஜில்
13.கண்ணைக் குருடாக்கி, காதைச் செவிடாக்கி, மூளையை மழுங்கச் செய்கிறது ஆசை!
14.எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும் -ஜான் ரஸ்கின்
15.அளவுக்கு மீறிய சுதந்திரம் ஆபத்தானது.
16.ஒவ்வொரு நிமிடமும் நிமிடமும் நல்ல பண்புடன் வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே, இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம் – பிராங்கிளின்
17.எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும் – எமர்சன்
18.நாளை நான் வாழ்வேன் என்கிறான் மூடன். இன்று என்பதும் கால கடந்ததே. அறிவாளிகள் நேற்றே வாழ்ந்து விட்டனர். -மார்ஷியல்
19.அறிவு தலைக்கு கிரீடம்! அடக்கம் காலுக்கு செருப்பு!
20.அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல; அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும் -அடிசன் /Source : நிஜாம் பக்கம்
No comments:
Post a Comment