Thursday, January 24, 2013

மன அமைதி


நமக்குள் பார்ப்பதும், நம்மை நோக்கி பயணிப்பதும் மன அமைதியை அதிகபடுத்தும்

யாரவது உங்களை திட்டிவிட்டாலோ, மனம் நோகும்படி நடந்துவிட்டாலோ, உடனே உங்களின் மனம் வருத்தப்படுவதோடு மீண்டும் அவர்களை எதாவது செய்யவேண்டும் என யோசிக்க ஆரம்பித்துவிடும். அப்பொழுது மன அமைதி என்பதை தேடினாலும் உணர முடியாது. அம்மாதிரியான சூழல்களில் சிறிது நேரம் மனதை அமைதிபடுத்த முயலுங்கள். கண்டிப்பாக முடியும் உங்களால், பின்பு நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். மூச்சு பயிற்சி செய்யும்போது அப்படியே அதில் கவனம் செலுத்தி உங்களுக்குள் பார்க்க முயற்சி செய்யுங்கள். நம்மை நாமே உள்நோக்கி பார்க்கும் போது ஒருவித அமைதியை உணர முடியும். 

அதற்குத்தான் சொல்லுவார்கள் prayer , தியானம், relaxation போன்றவற்றை செய்வது நல்லது என்று. இவை எல்லாம் நம்மை அமைதிபடுத்தும் செயல்கள். இதை நாம் செய்யும் போது நாம் நமக்குள் பயணம் செய்ய ஆரம்பிப்போம். இம்மாதிரி செய்யும் போது நம்மை பற்றிய தெளிவும் அறிவும் நமக்கு அதிகமாகும். இத்தெளிவு மன நிறைவோடு கூடிய அமைதியை கொடுக்கும். நமக்கு உள்ளே நாம் கவனிக்கும் பொழுது நம்முடைய நிறை குறைகளை தெரிந்து கொண்டு முன்னேற்றத்திற்கு தேவையானவற்றை கற்றுகொள்ள ஆரம்பிப்போம். அதனால் தேவையில்லாத சிந்தனைகள் அகற்றப்பட்டு நமக்கு என்னதேவை, எதை நோக்கி செல்ல வேண்டும் எனபதில் ஒரு உணர்தல் ஏற்படும் . உங்களையே நீங்கள் கவனிப்பதால் வரும் அத்தெளிவு உங்களையே உங்களுக்கு பிடிக்கவும் மற்றவர்களிடத்தில் அதிக அன்பு செலுத்தவும் உங்களை ஊக்குவிக்கும். இதல்லாம் ஒருசேர நடக்கும் போது வாழ்வில் ஒரு பிட்டிப்பும் சந்தோசமும் அதிகமாக மன அமைதி உங்களுக்கே சொந்தமாகும்.

சலனமில்லாத மனது அதில் இருக்கும் அமைதி

நாம் ஒவருவரும் ஒரு நாளில் அல்லது வாரத்தில் என்றாவது ஒரு தடவை ஒரு வித அமைதி நம் மனதில் இருப்பதை உணர்வோம். அந்த அமைதி க்கு என்று சில காரணங்கள் இருக்கும், அதை கண்டுபிடித்தால் நாம் என்றுமே மன அமைதி மற்றும் மன நிறைவுடன் இருப்பதற்கான வழியை தெரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக எனக்கு தெரிந்த நண்பர் குழந்தைகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட கல்வியை கற்று கொடுப்பதில் ஆர்வம் உடையவர். அவர் சொல்வார், என் சந்தோசமும் மன அமைதியும் அவர்களுக்கு கற்றுகொடுக்கும் போது என்னால் உணரமுடிகிறது.

இப்படியாக நமக்கு எதை செய்தால் சந்தோசம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தல் முக்கியம். 

உங்களை உங்களுக்கு பிடிக்க வேண்டும், அப்பொழுது நம்மால் என்ன முடியுமோ அது நம்மை எவளவு சந்தோசம் படுத்துமோ என்று தெரிந்து அதில் ஈடுபட்டால் மன அமைதி யும் சந்தோசமும் நம்முடன் என்றுமே இருப்பதாய் உணரலாம்

புதுமை படைப்பதும் மனஅமைதியும்

ஓவருவருக்கும் அவர்களுக்கு என்று புதுமை படைக்கும் ஆற்றல் உண்டு. அதை நாம் எந்த அளவுக்கு பயன்படுத்த பழகி இருக்கிறோமோ அதை பொறுத்து நம் வாழ்வில் சந்தோசமும் மனஅமைதியும் ஏற்படும். புதுமை படைப்பது அதாவது creativity என்பது ஆங்கிலத்தில், நம் பேச்சில் இருந்து, நாம் செய்யும் ஓவரு செயல்களிலும் நம்முடைய creative ஆற்றலை பயன்படுத்தி அங்கே ஒரு புது தன்மையை, புது பரிமாணத்தை ஏற்படுத்தும் பொழுது நமக்கு என்று ஒரு அங்கீகாரத்துடன் ஒருவித சந்தோசத்தையும் நாம் பெறமுடியும். . இப்படியாக ஓவரு நாளிலும், பல இடங்களில், அவரவருக்கே உரித்தான புதுமையான சிந்தனைகளை செயல்படுத்த ஆரம்பித்தால், ஒருவித தன்னம்பிக்கையுடன் கூடிய மனஅமைதியை உணர முடியம். 

புதுமையை படைப்பது என்பது ஒரு தனித்திறமை. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ஓவருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். ஆனால் புதுமை படைப்பது என்பது எல்லோருக்குமே இருக்கிற ஒரு திறமை, அதை நாம் கண்டுபிடித்து பயிற்சியின் மற்றும் பழக்கத்தின் அடிப்படையில் அதை வளர்த்துக்கொள்ளலாம். அப்படி நீங்கள் வளர்த்து கொண்டபின் அது ஒரு தனித்திறமையாக கருதப்படிகிறது. 

எடுத்துக்காட்டாக, எனது நண்பர் ஒருவர் அவருக்கு வரும் forward message யை, அப்படியே திருப்பி புதுமையாக சிலதை சேர்த்து அனுப்பியவருக்கே அனுப்புவார். இதுவும் கூட ஒருவித creativity தான். இப்படியாக நம் வாழ்வில், பல சந்தோசங்களை நாம் அனுபவிப்பதோடு, நம்முடன் சேர்ந்தோரையும், நம்முடைய புதுமை படைக்கும் திறமையினால், அவர்களை சந்தோசபடுத்தி ஒருவித மனஅமைதியை அவர்களுக்கும் ஏற்படுத்தி கொடுக்கலாம். 

பேச்சில், எழுத்தில், நடவடிக்கையில், செயல்களில், மற்றவர்களுடன் உறவை மேம்படுத்துவதில், நம் வாழ்க்கை முன்னேற்றத்தில், நம் சமூகத்தை வழிநடத்துவதில், என்று பல இடங்களில் நாம் மாற்றத்தை ஏற்படுத்தி, பழையன இல்லாமல், புதுமையான கண்ணோட்டத்தில் உலகை பார்வையிட நமக்கே உரித்தான புதுமை படைக்கும் ஆற்றலை வளர்ப்போம், மனித வாழ்வில் புதுமை படைத்தவர்கள் தான் தனியாக அடையாளம் காட்டப்படுகிறார்கள் என்பதை யாவரும் அறிவோம். அதனால் அதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து, மனதில் இருக்கும் மற்ற கஷ்டத்தையும், கவலையையும் பின்னுக்கு தள்ளி, எப்போதும் மனஅமைதியை பெற்றிடுவோம்.

மன அமைதியும் சந்தோஸத்தயும் உருவாக்குவோம்

ஸர்ப் எக்ஸ்செல் விளம்பரத்தை பார்த்து இருப்பீர்கள். ரோசி மிஸ் ஏன் வரல. அவங்க நாய்குட்டி செத்து போயிடுச்சாம். அதை கேட்ட மாணவன் ரோசி மிஸ் வீட்டுக்கு வருவான். அவர் சோகமாக இருப்பதாய் பார்த்து எப்படியாவது அவரைசந்தோஷ படுத்த முயல்வான். நாய் போல நடித்து காட்டுவான். அவனுடைய வெண்மையான உடை கரை படியும். ஆனாலும் அவன் அதை பற்றியெல்லாம் கவலை படாமல் ரோசி மிஸ்சை சந்தோஷ படுத்துவதில் கவனமாய் இருப்பான். பார்க்கும் போதே எவளவு இனிமை. அனுபவித்தால் எப்படி இருக்கும். 

இப்படியாக நாம் ஒவருவரும் மற்றவருக்காக தான் வாழ்கிறோம். வாழ்வது ஒரு வாழ்கை. எப்படியும் சாக போகிறோம். தவறு என்றாலும் கூட கடிந்து கொள்வதில் எந்த வித மாற்றத்தையும் பார்க்க முடியாது. அன்பால் மட்டுமே மாற்றத்தை காண முடியும். முடிந்தவரை அன்பை கட்டுவோம். முடியாத போது அன்பை வேறு விதமாக காட்டுவோம். எந்த வித சுழலிலும் மற்றவர்களிடையே சந்தோசத்தை உருவாக்க முடியும் நீங்கள் நினைத்தால். உறுதி எடுப்போம் அமைதியை வாழ.

மன அமைதிக்கு குடும்பத்தின் பங்கு

ஒரு மனிதனுக்கு அவன் குடும்பம் மிகவும் முக்கியம். குடும்ப உறுப்பினர்களின் ஒரேஒரு கடமை இக்கட்டான சுழலில் ஆறுதலான வார்த்தைகளை சொல்வதும் அரவணைப்பது மட்டுமே. புத்தகத்தில் இருந்து அறிவும், மீடியாவில் இருந்து செய்தியும், வலைத்தளத்திலோ என்னவெல்லாம் தேவையோ அத்தனையும் கிடைக்கும். இப்படி இருக்க குடும்பம் எனபது மட்டுமே அன்பை கொடுத்து ஆனந்தத்தை உருவாக்கும் இடமாக இருக்க முடியும். என் தோழி ஒருத்தி அடிக்கடி சொல்லுவாள் அவள் அண்ணனை பற்றி. அவன் நிறைய படிபபானாம். அவளிடம் எதாவது பேசுவது என்றால் அவனுக்கு தெரிந்த அறிவியல் கோட்பாடுகள் பற்றித்தான் பேசுவான். இவள் இதைபற்றி ஒருபுறம் பெருமையாக சொன்னாலும் மறுபுறமோ அவனின் அன்பு அவளுக்கு கிடைக்கவில்லை என்பது தெளிவாக புரிந்தது. குடும்ப நபர் ஓவருவரின் எதிர்பார்ப்பையும் ஒருத்தரால் நிறைவு செய்ய முடியாது. அதற்காக அவர்களை வெறுத்து விட்டால் அதை விட கொடுமை எதுவும் இருக்க முடியாது. குழந்தை பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் தேவை படுவது அன்பு ஆதரவு மற்றும் மனதுக்கு அமைதி. இதை திருப்தியாக தந்தால் எப்பேர்பட்ட குழந்தையும் படிப்பில் சிறந்தவராக முடியும். இது குழந்தைக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பொருந்தும். அதை விட்டு அட்வைஸ் பண்ணுவதும், அதை படி இதை படி என்று கஷ்ட்டம் செய்வதும் கம்பேர் பண்ணுவதும் ஒருவரின் மன அமைதியை கெடுக்குமே தவிர பெரிய மாற்றத்தை கொடுக்காது இனிமையான வார்த்தைகளால் குடும்ப நபரை பாராட்டி, அவர்களுடைய நல்லதை எடுத்து சொல்லி மகிழ்வூட்டி , அவர்களோடும் குடும்பத்தார் அனைவரோடும் சந்தோசமாகவும் அமைதியாகவும் வாழ்வோம் . வெற்றிகளும் சாதனைகளும் தானே தேடி வரும்.

அமைதியாய் வாழ நல்லதை பார்ப்போம்

தவறு என்பது இயற்கை. அதை அனைவரும் அறிவோம். மனிதர்களுக்குள்ளும் பலவித குணங்கள் இருக்கிறது. பார்க்கும் கண்ணை பொறுத்து நல்லது கேட்டது என பிரிக்கலாம். உங்களால் முடியும் என்ற புத்தகத்தில் ஷிவ் கேரா சொல்கிறார், மண்ணுக்குள் இருக்கும் தங்கத்தை தோண்டும் பொழுது சிறிய துளிகளாய் தங்கம் தெரியுமாம். நிறைய மண்ணில் இருக்கும் அந்த சிறு தங்கம் மட்டுமே கண்ணில் படும் பொழுது மனிதனுக்குள் இருக்கும் பல விதமான நடத்தைகளில் இருந்து நல்லதை மட்டும் எடுக்க ஆரம்பித்தால் வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக இருக்கும்.

சிலரின் குணநலன்கள் சிலருக்கு பிடிக்கலாம். ஆனால் அதை அவரிடத்தில் நேரிடையை சொல்வது எப்படி என்று தெரியாமல் இருக்கலாம் . அந்த மாதிரியான சுழலில் அவரின் அந்த நல்ல குணங்களை பற்றி அவருக்கு தெரிந்த நபர்களிடம் பெருமையாக சொல்லலாம். இது எப்படியும் சம்மந்த்தப்பட்ட நபரை போய் சேரும். அவருக்கு ஏற்படும் அந்த சந்தோசம் உங்களை பற்றிய நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும். இதனால் மனதிற்கு அமைதி ஏற்படும். அமைதி மட்டும் இருந்தால் போதும் வாழ்கையில் எதையும் சாதிக்கலாம் .

மன அமைதியின் முழு அர்த்தம்

அமைதி என்பது ஒரு நிசப்தம் என்றும் சொல்லலாம். மனதிற்குள் அமைதி என்றால் எந்த ஒரு கடுமையான சுழலிலும் மனதினுள் உணரப்படும் ஒருவிதமான அமைதி. எத்தனை பேருக்கு அந்த அமைதி கிடைத்துவிடும். இடம் அமைதியாக இருந்தாலும் மனதிற்குள் நடக்கும் போராட்டம் உணர்பவருக்கு மட்டுமே வெளிச்சம். மன அமைதி இருப்பவர்கள் எதற்கும் அவசர படாமல் பொறுமையுடன் வாழ்கையை நோக்கி செல்வார்கள். பலவித கோணத்தில் பார்க்கும் திறமை படைத்தவர்கள். அமைதியாய் இருந்தோம் என்றால் எதையும் ஒரு கோணத்தில் பார்த்து அவசர முடிவு எடுக்காமல் பொறுத்தே முடிவு எடுக்கும் ஒருவித உயர்ந்த நிலைக்கு உட்பட்டுவிடுவோம். மன அமைதிக்கு நாம் செய்ய வேண்டியது மற்றவர்களின் நல்லதை பற்றி பேசுவதும், அவரை பாராட்டுவதும், அவரிடம் மற்றும் அனைவரிடமும் அன்பு செலுத்துவதும் மிக முக்கியமானவைகள். நாம் அனைவரும் அமைதியாகவும் அன்புடனும் வாழ்கிறோம் என்பதை நான் அறிவேன். பின் எதற்காக இதை எழுதுகிறேன் என்று நினைக்கிறீர்களா எழுதுவதன் மூலமாக நான் இதை சரியாக செய்கிறேனா என்று அறிந்து கொள்ளத்தான்.

No comments:

Post a Comment