1)உங்களுக்கென்று உள்ள கருத்துக்களைக்கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள்.
2)வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய வேண்டாம்.பழகி முடிவு செய்யுங்கள்.
3)பிற மனிதர்கள் கூறுவதை உன்னிப்பாக கவனிக்கவும்.
4)எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு.அதற்காக பிறரை வெறுக்க வேண்டாம்.
5)குறைவாகப் பேசுங்கள்;அதனால் நிறைய கற்றுக் கொள்வீர்கள்
6)ஒருவரிடம் கேள்வி கேட்டப்பின் அவர் என்ன கூறுகிறார் என்பதை பொறுமையாக கவனியுங்கள்.நீங்களே உடனே விடை கூற முற்படாதீர்கள்.
7)பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்க வேண்டாம்.பிறர் உங்களுடைய நேரத்தை வீணாக்க அனுமதிக்காதீர்கள்.
8)ஒருவருக்கு ஓர் உதவியை செய்யும்முன், அதில் சிறிது சந்தேகம் இருந்தாலும், அதைச் செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள்.
9)(உங்களிடம் பணிபுரிவர்களிடம்) முடிவு செய்தல், செய்த முடிவை மாற்றுதல்,வேலையை முடித்தல் இவற்றில் முழுச்சுதந்திரம் கொடுங்கள்.
10)மற்றவரின் குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.இதனால் அவர்களிடம் நீங்கள் நன்மதிப்பு பெற முடியும்.
11)ஒருவரைப் பாராட்டும்போது தாராளமாக பாராட்டுங்கள்.போலியான பாராட்டுக்களை வாரிவிடவேண்டாம்.
12)தவறுகள் மனிதர்களிடம் சகஜம்.அதை அனுமதியுங்கள்.மீண்டும் ‘அப்படி’ நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.
13)உங்களைச் சுற்றியிருப்பவர்களே உங்கள் கூட்டாளிகள்.(உங்கள் உலகமே அவர்கள்தான்)அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொள்ளவேண்டாம்.
14) உங்களுக்குத் தெரியாவிட்டால், உரியவரிடம் உண்மையைச் சொல்லிவிடுங்கள்.தெரியும் என்ற நடிப்பு வேண்டாம்.
15)தவறிழைத்தால் அதை ஒப்புக்கொள்ளத்தயங்காதீர்கள்! இதனால் மற்றவர்களுக்கு உங்களைப் பிடித்துப்போகும்.
16)வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்
No comments:
Post a Comment