உருவாக்கத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமை இருந்தால் போதாது என்பார் கணேஷ் பாலிகா. உருவானதை முன்வைப்பதிலும் அதே புதுமை அவசியம் என்று நினைப்பார். படைப்பாக முன்வைப்பு டழ்ங்ள்ங்ய்ற்ஹற்ண்ர்ய் என்பது. விளம்பர நிறுவனங்களைப் பொறுத்த வரை ஒரு பெரிய வைபவம். எனக்குத் தெரிந்து க்ளையண்ட்டின் இடத்திற்குப் போவதை விட தங்கள் இடத்திற்கு அவர்களை அழைத்து புதுமையான ஏற்பாடுகள் செய்வதில் கணேஷ் பாலிகா கைதேர்ந்தவர்.
ஒருமுறை உணவகம் ஒன்றின் விளம்பரங்களுக்கான முன்வைப்பு சந்திப்பை அவர் மிகப் புதுமையாகத் திட்டமிட்டார். அலுவலக மொட்டை மாடியிலேயே உணவகச் சூழலை உருவமைத்தார். விளம்பர முன்வைப்பு என்றால் அதில் எத்தனையோ அம்சங்கள் உண்டு. எந்தெந்த ஊடகங் களுக்கு எவ்வளவு சதவிகிதம் ஒதுக்கலாம் என்பது தொடங்கி பல அம்சங்கள் காரணகாரியங்களுடன் விளக்கப்படும்.
மேசைகளில் க்ளையண்ட்டுகளை அமர வைத்து விளம்பர நிறுவனத்தின் பல்வேறு துறையினரும் தங்கள் துறை சார்ந்த முன் வைப்புகளைக் கொணர்வார்கள்.
அதன்பிறகு ஹோர்டிங் எனப்படும் பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகளுக்கான டிசைன் காட்டவேண்டும். பொதுவாக வடிவமைக்கப்பட்ட டிசைன் பிரிண்ட் அவுட்தான் காட்டுவார்கள். ஆனால் கணேஷ் பாலிகா, “அங்கே பாருங்கள்” என்று சாலையின் எதிர்புறத்தைக் காட்ட அங்கே திரை போட்டு மூடப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஹோர்டிங் திறந்து காட்டப் பட்டது.
பாய்ன்டர் விளம்பரங்களுடன் கூடிய “எனக்கென்ன கவலை” விளம்பரத்தை உரிய அளவுகளில் பிரிண்ட் அவுட் எடுத்து தினத்தந்தி நாளிதழில் 1-3-5-7 பக்கங்களில் ஒட்டி கடைசிப் பக்கத்தில் மைய விளம்பரத்தை ஒட்டி அந்த தேக்கு முதலீட்டு நிறுவன இயக்குநர்களுக்கு ஒரு பேப்பர் பையனைக் கொண்டு விநியோகித்தார்.
அந்த நிறுவன இயக்குநர்களில் ஒருவர் ஒரு யோசனை சொன்னார், “கடைசிப்பக்க விளம்பரத்தில் நான்தான் கவலையில்லாத மனிதன் என்று அந்த விளம்பர மாடல் சொல்வதாகப் போட்டால் என்ன?” இப்படிச் சொன்னவர், “கவலையில்லாத மனிதன்” படத்தை தயாரித்த கவியரசு கண்ணதாசனின் அண்ணன் மகன் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன்.
ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் தன்னை ஒரு நிர்வாகியாக அந்த நிறுவனத்தில் அறியச் செய்தாரே தவிர கலைப்பின்புலம் வெளிப்படும் விதமாக நடந்து கொண்டதில்லை. ஒரேயொரு தடவை தன் மாமனாரின் நினைவு நாளுக்கு தான் வெளியிட்ட விளம்பரம் ஒன்றை சக இயக்குநர் களிடம் காண்பித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் அவருடைய மாமனார் எதையோ எழுதிக் கொண்டிருப்பது போன்ற படம் வெளியாகி இருந்தது. அதன்கீழ், “வாழ்வின் கணக்குக்கு வரவெழுத வந்தவரே” என்று தொடங்கி சில வாசகங்களை எழுதியிருந்தார். ஏ.எல்.எஸ். கண்ணப்பன்.
ஊடகங்கள் ஒத்துழைப்பில் பல புதுமைகளை விளம்பர நிறுவனங்கள் இன்றும் மேற்கொள்வதுண்டு. அத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் அட்வர்டோரியல் .
தேக்கு முதலீட்டுத் திட்டத்திற்கு ஒரு சிறுகதை எழுதினேன். “நடவுவேலை முடிந்து ஆட்கள் மேடேறத் தொடங்கியபோது பொழுது சாய்ந்திருந்தது” என்பது அதன் ஆரம்ப வரிகள். கிராமத்தில் இருக்கிற தந்தையிடம் தன் முதலீட்டுத் திட்டம் குறித்து யோசனை கேட்க மகன் வருவதாகவும், விவசாயியான அப்பா தேக்கு முதலீட்டுத் திட்டத்தில் பணம் போட ஊக்கம் கொடுப்பது போலவும் அந்தக் கதை எழுதப் பட்டிருக்கும். கதையின் கடைசி வரிக்குக் கீழ், “முற்றும்” போடும் இடத்தில், “விளம்பரம்” என்று போட்டால் போதும். இந்த விளம்பரத்தையும் இதழ்களில் வரும் சிறுகதை போலவே வடிவமைத்து, நியூஸ்பிரிண்ட் தாளில் பிரிண்ட் அவுட் எடுத்து, கல்கி இதழில் ஒட்டி வெளிவந்த சிறுகதையைக் காட்டுவது போலவே க்ளையண்ட் டிடம் காட்டினார் கணேஷ் பாலிகா.
மாலை வேளையில் ஏதேனும் விளம்பரம் குறித்து விளக்கிவிட்டு, அரைமணி நேரத்தில் அழைத்து ”ரட்ஹற் ட்ஹல்ல்ங்ய்ங்க்” என்பார். ”ஐ ஜ்ண்ப்ப் ஞ்ண்ஸ்ங் ற்ர்ம்ர்ழ்ழ்ர்ஜ் ள்ண்ழ்” என்றால் கோபம் வந்துவிடும். ”பர்ம்ர்ழ்ழ்ர்ஜ் ஐ ம்ண்ஞ்ட்ற் க்ண்ங் ஹ்ஹ” என்பார். சில நிமிடங்களிலேயே அதனை மறந்து விட்டு கலகலப்பாகப் பேசத் தொடங்கிவிடுவார்.
அதே நேரம் சில தவறுகள் நடக்கும்போது “நன்றாக வேலை செய்பவர்களுக்கு சின்னச் சின்ன தவறுகள் செய்ய உரிமை இருக்கிறது” என்பார்.
No comments:
Post a Comment