Tuesday, January 15, 2013

வாழ்கையின் வெற்றிக்கு எந்த மாதிரி 'தகுதி' தேவை- WHAT IS THE QUALIFICATION FOR SUCCESS


அனுபவ பொன்வரிகள் 



வாழ்கையின் வெற்றிக்கு எந்த மாதிரி
 'தகுதி' தேவை-
WHAT IS THE QUALIFICATION FOR SUCCESS


எந்த ஒரு செயலிலும் தகுதி இருப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். அந்த வெற்றிக்குரிய தகுதி இதோ!

த  - தன்னம்பிக்கை 
கு - குறிக்கோள் 
தி - திட்டம்.

தன்னம்பிக்கை:

நீ நினைக்கும் காரியத்தைப் பற்றி யாரிடமாவது கேட்டால் ,'அந்த காரியமா! ரொம்ப கஷ்டமான வேலை. செய்யவே செய்யாதே! மீறி செய்தால் வர்றதை நீ தான் அனுபவிக்கனும். அப்புறம் உன்னிஷ்டம்!' என்று அவனம்பிக்கையாகவே பேசி செய்யவிடாமல் செய்பவர்கள் தான் அநேகம் பேர். இத்தனைக்கும் அந்த வேலை பற்றிய அறிவும், தெளிவும் அவர்களுக்கு இருக்காது. இந்த இடத்தில் தான் உங்களது தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. வேண்டுமென்றல் அந்த காரியத்தை செய்தே முடிப்பேன் என்று இன்னும் அதிகமாகவே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும். 


தன்னம்பிக்கை என்பது உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் செயல். அநேகம் பேர் வானத்தையே பார்த்துக் கொண்டிரும்போது ஒரு சிலர் வானத்தில் பறந்து சாதனை செய்தததை அறிவியல் வரலாறு சொல்கிறது.


அனைவரும் நிலவை ரசித்துக்கொண்டு காலத்தை கழித்துக் கொண்டிருக்கும்போது சிலர் அந்த நிலவிலே காலடி பதித்ததை மறுக்கமுடியமா! அதைவிடவா தன்னம்பிக்கைக்கு உதாரணம் வேண்டும்.


தன்னம்பிக்கை, உன்னிடத்தில் அணையா விளக்காக எரிந்துகொண்டிருந்தால் அதன் வெளிச்சமே உனது வெற்றிக்கு அடையக்கூடிய வழியைக்காட்டும்.

குறிக்கோள்:


குறிக்கோள் இல்லாத வாழ்க்கை எழுதப்படாத வெள்ளைத்தாள் போன்றது. அது இருந்தாலும் ஒன்று , இல்லாவிட்டாலும் ஒன்று ! கயிற்றில் கட்டப்படாத பட்டம் எத்தனை நிமிடம் உயரத்தில் இருக்கும். காற்றடிக்கும் திசையில் ஏற இறங்க பறந்து முடிவில் எங்கோ விழுந்து புதைந்தும் போகும். அது போல குறிக்கோள் இல்லாத வாழ்க்கை 'ஸ்டேரிங் ' இல்லாத கார். எவ்வளவு திறமையான டிரைவராக இருந்தாலும் அவரால் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் விபத்து இல்லாமல் போய்ச் சேரமுடியாது.
அது கண்களைக் கட்டிக்கொண்டு நெருக்கமுள்ள சாலையில் நடப்பதற்க்குச் சமம்.    


குறிக்கோள் ஒரு மனிதன் இருப்பதை அடையாளம் காட்டுகிறது. வெற்றியை முன்னமே நிச்சயிக்கிறது. புது தேம்பித் தருகின்றது. குறிக்கோளுள்ள மனிதன் தனக்கு வரும் எந்த ஒரு இடையூறையும் தாண்டிச் செல்லும் துணிச்சல் தருகின்றது. எந்த ஒரு பிரச்சனையும் சமாளிக்கும் அறிவையும், ஆற்றலையும் தருகின்றது.


திட்டம்:

திட்டம் இல்லாத வாழ்க்கை படிக்கபடாத புத்தகம். அதாவது 'வாழ்கையில் வெற்றி பெறுவது எப்படி?' என்ற புத்தகம் உனது கையில் இருந்தால் மட்டும் போதுமா? அதைப் படித்தால் தானே அதில் உள்ள விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும். அதன் படி நடந்து வெற்றிபெற முடியும். 


திட்டம் ஒருவனிடத்தில் இருக்கும் திறமையை, எண்ணத்தை, கனவை நனவாக்கும் முதல் படி. முதல் படியை கால்பதிக்கும் அடுத்த படி தானாகவே உருவாகி உன்னை மேலே மேலே ஏறச் செய்கின்றது. அது உனது குறிக்கோள் அடையும் வரை படிகளை உருவாக்குகிறது.

நீ இருக்கின்ற இடத்தையும், அடைய வேண்டிய இடத்தையும் இணைக்கும் பாலம். ஆற்றின் குறுக்கே கட்டப்படும் வலிமையான பாலம் எவ்வாறு பயணத்தை எளிமையாக்குவ்தோடு, மற்றவர்களையும் கடப்பதற்கு உதவி செய்கின்றது. அது போல உனது திட்டத்தின் வலிமையைப் பொறுத்துதான் உனது வெற்றி அமைகிறது.


எப்போதும் வெற்றிக்கு இந்த 'தகுதி' யை வளர்த்துக் கொண்டால் நீங்கள் ஒரு சாதனை மனிதனாக மாறலாம்.  

இல்லையென்றால் ........     


No comments:

Post a Comment