உச்சநீதி மன்றம் கடந்த 2009 ஆண்டு நடைபெற்ற ஒரு வழக்கில், காவல்துறையினர் ஒருவரை கைது செய்யும்போது 11 விதி களை கடைபிடிக்குமாறு கட்டளை யிட்டுள்ளது.
1. கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத் தியிருக்க வேண்டும்.
2. கைது செய்தவுடன், அங்கேயே “கைது குறிப்பு’ தயாரிக்க வேண்டும்.
3. கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.
4. கைது செய்த விபரத்தை 12 மணி நேரத்திற்குள் உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு, என்பதை கைதானவருக்கு தெரிவிக்க வேண்டும்.
6. காவலில் உள்ள இடத்தில், கைது விபரம், கைது குறித்த தகவல், அதி காரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட விபரம் மற்றும் எந்த அதிகாரி பொறுப்பில் உள்ளார் என்பதை பதி வேட்டில் குறிப்பிட வேண்டும்.
7. கைதானவரின் உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்.
8. கைதானவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
9. கைது குறித்த ஆவணங்களை குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
10. கைதானவரை விசாரிக்கும்போது வக்கீல் உடன் இருக்க வேண்டும்.
11. கைது பற்றிய தகவலை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்யத்தவறும் பட்சத்தில் காவல் துறையின்ர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடுகிறது.
No comments:
Post a Comment