Thursday, October 10, 2013

பெண்கள், “இந்த ஐந்தை” கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்!

5, ஐந்து,  கடைபிடித்தால், பெண்கள், வாழ்வில், 50, வயதிலும், ஆனந்தமாய், வாழலாம்,! பெண் கள் கடைபிடிக்க‍ வேண்டிய அந்த ஐந்து குணங் களை கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து. படித்து பய னுறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1. நம்பிக்கை

கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொரு வர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவ ரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங் களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண் டும். அதை செயல் படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக் கொரு வர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வருங் காலத்தில் என்ன வெல்லாம் நடக்க போகிற தோஎன்று பயம் கொள்வதைவிட, நிகழ் கால வாழ்க் கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டு வது தான் புத்திசாலித்தனம். முதுமை என்பது எல்லோருக்கும் வருவ துதான். அதற்காக நாற்பது வயதை நாம் தாண்டி விட்டோம். உடல் சோர்வு தெரிகிறது. 50 வயதிற்கு பின் முட்டுவலி தெரிகிறது. 60 வயதிற்குபின் தோல் சுருங்கி போய் விடுமே என்றெல்லாம் பயந்து கொண் டிருக்கக் கூடாது. எந்த வயதிலும் மனதை இளமையாக வைத்துக் கொ ள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள்.

2. பாதுகாப்பு

ஆண்களைவிட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைப் படுகிறது. திருமண வயதையடை யும் வரை பெண்களுக்கு பெற்றோ ரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டி லும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திரு மணத்திற்கு பின் பாதுகாப்பி ற்காக கணவனை நம்பி வாழ்கின் றனர். இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும் போதுதான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்ற ன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணைவிட தான் தான் மேலா னவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவ ன் என்றும் எண்ணுகின்றனர். இருவரு ம் அவரவர் தனித்தன்மைகளில் மேலா னவர் தான்.
.
3. மரியாதை
.
ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கண வருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்க ளிலும் தனக்கும் பங்குண்டு என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணு க்கு மரி யாதை உள்ளது. அதேபோல், மனைவி யின் உணர்வுகளுக்கு மதிப்ப ளித்து அவ ளுடன் இணைந்து ஒற்றுமை குலையா மல் குடும்பத்தை பராமரிப்பதி ல் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத் தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.
.
4. அன்பு
.
வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவிதான் அன்பு. வாழ்வை அர்த் த முள்ளதாக மாற்றும் வல்லமை அன் பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னத மான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக் கூடியவை. அன்பால் மல ரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்ப தை இருவரும் உணர வேண்டும். அன்பை வெளிப்படுத்தவே திருமணம் நம்மை இணை த்துள்ளது என்று எண்ண வேண்டும். மனிதர் கள் உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால் பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய தவறுகள் அன்பி னால் சீரமைக்கப்பட வேண்டும். `என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்ச யம் கிடைக்கு ம்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ் நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.
.
5. நேர்மை
.
நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவா க்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். “என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள் வேன். என் நோக்கம், இயல்பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்” என்று இருவரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மை தான் குடும்பத்தின் முதுகெலும்பு.

No comments:

Post a Comment