ஒருமுறை சுவாமி விவேகானந்தர், தனது சீடர் ஒருவரது கேள்வி க்கு அளித்த பதிலில், நம் உணர்வுகள் அனுபவிக்கும் பயம் பற்றி கூறியிருக்கிறார். இதோ அவரது உன்னத வரிகளை படியுங்கள்.
இன்பத்தில் இருப்பது நோயின் பயம்
உடலில் இருப்பது சாவின் பயம்
உயர் பிறப்பில் சாதி இழத்தலில் பயம்
பணத்தில் இருப்பது கொடுங்கோலின் பயம்
பலத்தில் இருப்பது பகைவர் பயம்
மதிப்பில் இருப்பது அதை இழத்தலின் பயம்
அழகில் இருப்பது மூப்பின் பயம்
குணத்தில் இருப்பது வசையின் பயம்
வாழ்க்கையில் இருப்பது எல்லாம் பயம்
இத்தனை உணர்வுகளுக்குள்ளும் பயம் இருக்கிறதே! எதில் துளியும் பயம் இல்லை என்று சுவாமி விவேகானந்தர் சீடர்களிடம் கேட்டு விட்டு அவரே சொல்கிறார்.
துறவில் தானே பயமே இல்லை!
No comments:
Post a Comment