வெற்றியின் தேவை வைட்டமின் சி!! (Success formula "Vitamin C")
"நான் வெற்றி பெற தயாராகிவிட்டேன்..
என் மனதை வெற்றியை நோக்கி திருப்பி விட்டேன்..
வெற்றி மற்றும் தோல்வியை ஏற்க்கும் மனப்பக்குவம் எனக்கு வந்துவிட்டது..
அடுத்து என்ன செய்ய வேண்டும்..."
முதலில் வாழ்த்துக்கள்!!!
இந்த மனநிலை வர மிக பாடுபட வேண்டும்!
உங்களுக்கு தொண்ணுற்றி ஒன்பது சதவீத வெற்றி தரப்போகும் ரகசியத்தை கூறுகிறேன்...
பனிமூட்டமான பாதையில் வண்டி ஓட்ட இயலுமா?
தெரியாத மொழியில் கவிதை எழுத முடியுமா?
தெரியாத பதிலை சரியாக எழுத முடியுமா?
ஏன் முடியவில்லை???
"தெரியாத விஷயத்தை எப்படியா பண்ண முடியும்? லூசா நீ??"
ஆம்! வெற்றி பெற CLARITY (கிளாரிட்டி) என்ற வைட்டமின் சி தேவை!!!
எந்த துறையாக இருந்தாலும் அதில் வெற்றி பெற அந்த துறையில் நுண்ணிய, தெளிவான அறிவு மற்றும் பயிற்சி தேவை!
சில எடுத்துக்காட்டுகளை காண்போம்...
* அப்துல் கலாம் அவர்கள் ஏவுகணை தொழில்நுட்பத்தை கரைத்து குடித்ததனால் தான் "இந்திய ஏவுகணை தொழில் நுட்ப தந்தை" என பெயர் பெற்றார்.
* டாக்டர் பழனிவேலு, கோவை.. லேபரோஸ்கோப்பி முறையை நன்கு அறிந்ததால் மட்டுமே இன்றும் தமிழ்நாட்டில் அசைக்க முடியாத இடத்தில் உள்ளார்.
*பி சி ஸ்ரீராம் பற்றி கூறவே வேண்டாம்... புகைப்பட கலையில் பல நுணுக்கங்களை அறிந்த கலைஞன், வெற்றி பெற்றதற்கு தெளிவான அறிவே காரணம்!
*ரிலையன்ஸ் குரூப் மார்க்கெட்டிங் தந்திரத்தை தெளிவாக அறிந்ததால் இன்றும் நம்பர் ஒன்!
*டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் "கடவுள்" என புகழ் பெற பேட்டிங் நுணுக்கமே காரணம்!!!
இவ்வாறு எந்த துறையை எடுத்து கொண்டாலும், அதில் கரை கண்டவர்கள் அத்துறையை பற்றி தெளிவாக (கிளியராக) தெரிந்தவர்கள் மட்டுமே!!!
எவ்வாறு கிளியராக செய்வது???
முதலில் தேர்ந்தெடுத்த துறையில் உங்களுக்கு உள்ள அறிவை அளவிடுங்கள்!
உங்களின் பிளஸ் மற்றும் மைனஸ்'ஐ எழுதி கொள்ளுங்கள்!
எந்தெந்த விஷயங்கள் தெரிய வேண்டும்?? அதில் எவையெல்லாம் உங்களுக்கு தெரியவில்லை என்று எழுதிகொள்ளுங்கள்!
அதை செயல் படுத்த ஆரம்பியுங்கள்...
தெரியாதவற்றை தெரிந்து கொள்ளுங்கள்..
தெரிந்தவற்றை மேலும் நுட்பமாக தெரிந்து கொள்ளுங்கள்...
உங்களுக்கே வெற்றியின் பாதை தெரிய ஆரம்பிக்கும்...
வெறும் கிளாரிட்டி மட்டும் முழு வெற்றியை தருவது இல்லை..
இன்னும் சில வைட்டமின் சி கள் தேவை!!!
அவை...
CONFIDENCE
CONSISTENCY
COURAGE
COMMUNICATION
மீதம் உள்ள ஒரு சதவீதத்தை இந்த வைட்டமின் சி மூலம் அடைந்து விடலாம்!!!
அப்புறம் என்ன???
CONGRATULATIONS!!!!!
No comments:
Post a Comment