தவம் என்பது மனதை ஒருங்கிணைக்கும் ஒரு பயிற்சி அல்லது மனதை ஒருங்கிணைப்பதற்காக செய்யும் பயிற்சி என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது ஓரளவு மட்டுமே உண்மை. தவம் என்பது செயலை குறிப்பதுவன்று. அது ஒரு நிலை. மனதை ஒருங்கிணைப்பத்தின் விளைவாக ஏற்படும் நிலையே தவம். தவம் என்பது செயல் இல்லை. என்னும்பொழுதே அதை முயற்சி செய்ய தேவை இல்லை. மாறாக தவம் என்னும் நிலையை அடையக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தும் பொழுது தவம் என்னும் நிலை அடைவோம்.
தவம் என்னும் நிலையில் என்ன நடக்கிறது
பொதுவாக நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் செயல்படும் பொழுது நம் மூளை 15 to 40Hz அதிர்வெண் கொண்ட பீட்டா அலையில் இயங்கும். நாம் தவம் செய்ய உட்கார்ந்தவுடன் சிறிது சிறிதாக நம் மூளையின் அதிர்வெண் குறைந்து ஆல்பா அதிர்வெண்ணை (9 to 14) அடையும். இந்த அதிர்வெண்ணில் நம் மனம் ஆழ்ந்த அமைதி பெறும். உடல் இயக்கங்கள் சீரடையும், மூச்சின் வேகம் குறையும், இதயத்தின் துடிப்பும் குறைவடையும் . அதனால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் சீரடைகிறது. வளர்சதை மாற்றம் குறைவடைகிறது. இதனால் நம் ஆயுள் கூடுகிறது. தவம் செய்வதால் நம் உடலுக்கு பல நன்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இப்படியே நம் மூளையின் அதிர்வெண் தீட்டா (5 to 8Hz) அதிர்வெண்ணை அடையும்.
தவத்தால் ஏற்படும் மனநிலை மாற்றங்கள்
தவ நிலையில் நம் மனம் ஆழ் நிலைக்கு செல்லும். பொதுவாக நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம் மனம் வெளி மனம் (conscious mind), உள்மனம் (subconscious mind) என இரண்டு நிலைகளில் இயங்கும். நாம் நம் மூளையில் ஏற்படும் எண்ணங்களின் விளைவாக செய்யும் செயல் வெளி மனம் எனப்படும். அதேபோல் நாம் செய்யும் எண்ணம் இல்லாமல் செயல்படும் சில நம் உடலின் வேலைகள் உள் மனதின் உதவியோடு நடைபெறும். உதாரணமாக நம்முடைய இதயத் துடிப்பு, நம்முடைய மூச்சு, இப்படி சில செயல்கள் நம் விருப்பங்கள் எண்ணங்கள் இல்லாமல் தானாக நடுக்கும் அவை செய்வது உள் மனம். தவ நிலையில் இந்த இரண்டு மனநிலையை தாண்டி நாம் ஆள் மனதிற்கு(Transcendental mind) செல்ல முடியும். தவ நிலையில் நம் மனம் ஆழ் நிலைக்கு செல்லும். இதனால் நம் மனம் அமைதி அடைவதுடன் நாளடைவில் தெளிவான சிந்தனை , ஆழ்ந்த சிந்தனை, தெளிவான சிந்தனை மற்றும் ஆக்கபூர்வ சிந்தனை மேலோங்கும். தீர்மானிக்கும் திறன் கூடும். மனம் தீட்டா அதிர்வெண்ணில் இருக்கும் பொழுது மனம் பல அறிதற்கரிய விடயங்களை அறியும். இந்த மன நிலையில் தான் புதிய கண்டுபிடிப்புகளும், ஒப்பற்ற கலை படைப்புகளும் உருவாகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பூமியின் இதயத்துடிப்பு (schumann resonance)
நமக்கு எப்படி இதயத்துடிப்பு இருக்கிறதோ அதேபோன்றே நம் பூமிக்கும் இதயத் துடிப்பு இருக்கிறது. அது நம் மூளையின் அதிர்வெண்ணை போலவே 8 முதல் 40Hz அதிர்வெண்ணில் இயங்குகிறது. பொதுவாக அது 7.5 to 11Hz அதிர்வெண்ணில் இயங்குகிறது. இது பூமியின் மின்காந்த அலையின் அதிர்வெண்ணாகும். நம் மூளையின் அதிர்வெண் இந்த பூமியின் அதிர்வெண்ணை அடையும் பொழுது அல்லது அதற்கு நெருங்கி வரும் பொழுது நம் மனம் அதிகம் அமைதி பெரும். ஒட்டு மொத உலக மக்களும் தவம் செய்யும் பொழுது உலகமே அமைதி பெரும். இதனாலேயே தவத்தின் மூலம் மட்டுமே உலக அமைதி பெரும் என்று கூறுகின்றனர்.
தவம் செய்வது எப்படி?
பல்வேறு முறைகளில் தவம் செய்யலாம். இப்படித்தான் ஒரு தவம் செய்யவேண்டும் என்பதில்லை. இதன் அடிபடையில் மந்திர பிரயோகம், சூனிய தவம், குண்டலினி தவம், கிரியா யோகம், விபாசனா முறை, ராஜ யோகம், ஆழ் மன தியானம், என எண்ணற்ற வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு வகை தவம் நன்கு அமையும். அல்லது பல்வேறு தவ முறைகளை செய்து எது நன்கு அமைகிறதோ அதையே எடுத்துக்கொண்டு நாம் அதை தொடர்ந்து முயற்சிக்கலாம். தியானத்தில் நாம் எவ்வளவு நேரம் செய்கிறோம் என்பது முக்கியமில்லை. எவ்வளவு நாள் தொடர்ந்து தவறாமல் செய்கிறோம் என்பதே முக்கியம்.
தவம் செய்யும் ஆரம்பிக்கும் பலர் தங்கள் பயிற்சியை ஆரம்பிக்கும் பொழுது தங்களுக்கு பல எண்ணங்கள் வந்து இடர்ப்பாடுகள் செய்வதையே சிரமமாக நினைப்பார்.
அந்த எண்ணங்களில் இருந்து விடுபட கடுமையாக முயற்சி செய்வார். அவர்கள் கடுமையாக முயற்சி செய்ய செய்ய மீண்டும் மீண்டும் வரும் எண்ணங்களால் தோற்கடிக்கப்படுவர். எப்பொழுது எண்ணங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோமோ அப்பொழுதே தவம் செய்வதை விட்டு விலகி செல்கிறோம். தவம் செய்வதில் முயற்சி இருக்ககூடாது. தவ பயிற்சியை எளிதாக்க தவம் செய்ய அமர்ந்தவுடன் இந்த மூன்று எளிமையான வழிமுறைகளை கையாளலாம்.
1. எண்ணங்களை எதிர்க்கக்கூடாது
2. எண்ணங்களின் பின் செல்லக்கூடாது
3. புதிதாக எண்ணங்களை உருவாக்ககூடாது.
இந்த வழிமுறைகள் எல்லாவகை தவ முறைகளுக்கும் பொருந்தும்.
தவத்தின் பயன் எண்ணிலடங்காதது. பல பயன்கள் தத்துவரீதியாக இருப்பதால் நாம் அதை மூட நம்பிக்கையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நம் வாழ்வு மேன்மை பெற தவம் ஒரு நல்ல வழி.
இப்போது ஆன்மிகம் என்பது அரசியலிலும் பேராசைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளது. அதுபோன்ற ஆன்மிக வாதிகளிடம் பணத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment