ஆயுத பூஜை!!! கொண்டாடுவது ஏன்? ஆயுத பூஜை வெளியே இருக்கும் ஆயுதங்களுக்கு அல்ல. வெளி உலக ஆயுதங்களை மனிதன் தான் படைத்தான் மனிதனே நமக்கு பயன்படுத்தும் வித்தையை கற...்றுக்கொடுக்க முடியும் உள் உலக ஆயுதங்களோ பல பல... அன்பு காதல் பாசம் நட்பு பொறாமை காமம் நயவஞ்சகம் சூழ்ச்சி தாழ்வு மனப்பான்மை உயர்வு மனப்பான்மை பயம் துக்கம் கவலை சுயநலம் ஏமாற்றுதல் பிறரை வீழ்த்துதல் நம்பிக்கையின்மை பேராசை வெறுப்பு எதிரி தன்மை அஹங்காரம் நன்றியின்மை பொறுப்பின்மை சோம்பல் தூக்கம் நேர்மறை எண்ணம் மற்றும் எதிர்மறை எண்ணம் இன்னும் எத்தனையோ ஆயுதங்கள் நமக்குள் கிடங்கு போல இத்தனை ஆயுதங்களும் நம்மை காயபடுத்தாமலும் பிறரை காயபடுத்தாமலும் எப்படி கையாள்வது மேலும் இந்த ஆயுதங்களை கொண்டு நம்மை நாமே எப்படி செதுக்கி "அற்புத சிற்பமாய்" வெளிபடுத்துவது என்ற வித்தையை சரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே ஆயுத பூஜை! ... -மெய்ப்பொருள்
No comments:
Post a Comment