சிலபேர் வாழ்நாள் முழுவதும் எதை தொட்டாலும் சலித்து கொள் வார்கள் எதிலும் அவர்களுக்கு திருப்தி இருக்காது நல்ல அழகாக வீடு ஒன்று இருந்தால் நன்றாக இரு க்கும் என்று ஆசைப்படுவார்கள் எப் படியோ ஆண்டவன் கிருபையால் வீடு அமைந்துவிட்டால் என்ன பெரிய வீடு நான் கிழக்கு பார்த்த வீடாக இருக்க வேண்டும் வீட்டுக்கு முன்னால் பெரிய திண்ணைகள் இருக்க வேண்டும் மாலை ஆறுமணி ஆனாலும் வீட்டிற்குள் இருட்டு வராமல் வெளிச்சமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் எனக் கென்று அமைந்தது பார் ஒரு வீடு எதற்கும் உதவாத புறாக்கூடு மாதிரி பகலும் இராத் திரியும் ஒரே மாதிரியே குகைக் குள் இருப்பது போல இருட்டாக இருக்கிறது நான் வெளியில் விடுகிற மூச்சி காற்று தான் அனல் காற்றாக என்மீது வீசு கிற து இப்படியும் ஒரு வீடா இது அமைந்ததை விட அமையா மல் இருந்திருந்தால் நன்றாக இருந்தி ருக்கும் என்று புலம்புவார் கள்
கல்யாணம் கட்டினால் வாழ்க்கை வசந்தமாகி விடும் என்பார்கள் கல்யாணத்திற்கு பிறகு எதற்கு தான் இந்த சனியனுக்காக ஆசைப்பட்டே னோ எல்லாம் நாசமாக போச்சி என் பார்கள் கருப்பு சட்டை இருந்தால் வெள்ளை சட்டை கிடைத்தால் நன் றாக இருக்கும் என்பார்கள் வெள் ளை சட்டையே கொடுத்தால்கூட இது சீக்கிரம் அழுக்காகி விடும் என்று குறைபடுவார்கள் இப்படி எதை எடுத்தாலும் அவர்களுக்கு நிறைவு என்பதே வராது சதா சர்வகாலமும் தங்களிடம் இல்லாதது எதுவோ அது இருந்தா ல் நன்றாக இருக்கும் அது கிடைக்கும் வரை வாழ் நாள் வீணான நாள் என்று புலம்புவார் கள் இப்படிப்பட்ட நபர்கள் ஒன்றிரண் டு பேர்கள் அல்ல தினசரி நாம் பார்ப் பவர்களில் பத்துக்கு எட்டுபேர் இப்படி யே இரு க்கிறார்கள்
நாம் பல நேரங்களில் பிரபலமானவர்கள் அதிகாரபீடத்தில் இருப் பவர்கள் பணக்காரர்கள் என்று மேல்மட்டத்தில் இருப்பவர்கள் திருப்தியாக இருப்பார்கள் நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் தான் திருப்தி இல்லாமல் அல்லல் படுகிறோம் என்று நினைக்கி றோம் இது முற்றிலும் தவறு அதிகாரத்தில் இருப்பவன் தன்னை விட அதிகாரத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவனை பார்த்து அவ னை போல நான் ஆக முடியாதா என்று நினைத்து வேதனைப்படு கிறான் தமிழ்நாடு முழுவதும் அறிந்த பிரபலமான மனித ர்கள் இங்கிலாந்து அரச பரம்பரை போல் நாம் உலகம் அறிந்த பிரபல மாக இல்லையே என்று ஏங்குகிறான் இதே போன்ற ஏக்க பெரு மூச்சை விடு பவர்களாக தான் பணக்காரர்களும் இருக்கிறார்கள் ஏழைகளும் இருக்கி றார்கள். ஆக உலகில் திருப்தியான மனிதன் என்று யாருமே இல்லையா? சில மணித்துளி கூட ஒரு மனிதனால் திருப்தி அடைய முடியாதா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
திருப்தியாக வாழ முடியவில்லை என்று நினைப்பவர்கள் முத லில் திருப்தி என்றால் என்னவென்று சிந்திக்க வேண்டும் நாமும் சரி நம்மை போன்ற மற்றவர்களும் சரி பெளதிக மான பொருள் கள் நமக்கென்று சொந்தமாக இருந்தால்தான் திருப்தி கிடைக்குமென்று தவறாக கணக்கு போடுகிறோம் உண்மையி ல் வெளியில் கிடைக்கிற பொருள்கள் எதற் குமே நிரந்தரமான திருப்தியை தரும் சக்தி கொண் டதாக இருப்பதில்லை பத்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தால் சந்தோசம் வருமென்று நினைக்கி றோம் அந்த நிலம் வந்துவிட்டால் அதை பராமரிக்க முடியாமல் அவதிப் படுகிறோம் நிலத்தை பண்படுத்த வேலைக்காரர்கள் அமைய மாட்டார்களா? என்று அலை ந்து வேலையாளை பிடித்து விட்டால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லையே சம்பளம் கொடுப்பதற்கு பணம் இல்லை யே என்று ஒன்றை விட்டு மற் றொன்றை தேடிக்கொண்டே அலைகி றோம் இப்படி அலைந்து அலைந்தே வாழ்நாள் முழுவதும் வீணாகி விடுகிறது மரண படுக்கையில் விழுகிற வரை திருப்தி என்பதே காண முடியாத கைப் பற்ற முடியாத கானல் நீராக இருந்துவிடுகிறது.
அதனால் நிரந்தரமான திருப்தி யை தருவது எது என்று முதலி ல் சிந்தித்து முடிவு செய்ய வே ண்டும் அப்படி முடிவு செய்யாத வரை திருப்தி என்பதை நாம் அடையவே முடியாது அது நம் கைகளில் அகப்படவே அகப்படாது. அக் காலத்தில் வாழ்ந்த ஜமின் தார் ஒருவர் தனியாக காட்டை சுற்றி பார்க்க ஆசைபட்டார் தனக்கு துணையாக யாரையும் அழைத்து கொள்ளாமல் ஒரு நாள் காலை வேளையில் சாரட் வண்டியில் காட்டை பார்க்க கிளம்பி விட்டார் நடுகாட்டில் செல்லும்போது அவரது சாரட் வண்டியில் அச்சாணி உடைந்துவிட்டது ஆடம்பர மான வண்டி இருந்தாலும் அதை இழு த்து செல்வதற்கு வலுமிக்க குதிரை கள் இருந்தாலும் சிறிய அச்சாணி இல்லா விட்டால் வண்டி ஓடுமா? எனவே உடைந்த அச்சாணியை கையில் எடுத்து கொண்டு அதை சரி செய்வதற்கு பக்கத்தில் எதாவது கிராமம் இருக்குமா? கிராமத்தில் கொல்லன் பட்டறை இருக்குமா? என்று தேடி போக ஆரம்பித்தார்.
நேற்றுவரை உல்லாச மாளிகையில் ஒய்யாரமாக ஓய்வெடுத்த உடம்பு அவருக்கு இன்று உச்சி வெயிலில் கால்கள் நோக திசை தெரியாமல் நடந்த போது வியர்த்து கொட்டியது மூச்சி விடுவதற் கு நுரையீரல் என்ற உறுப்பு இருக்கிறது அது கடின மாக உடல் வலிக்க ஆரம்பி த்தால் அதிக காற்றுக்காக வேகமாக இயங்கும் அப்போது சோர்வு என்ற ஒன்று ஏற்படும் என்ற உண்மை அந்த நேரத்தில் தான் அவருக்கு தெரிய ஆரம் பித்தது எப்படியோ அலைந்து திரிந்து கொல்லன் பட்டறை ஒன் றை கண்டுபிடித்து விட்டார் அச்சா ணியை சரிசெய்து தரும்படி கொல் லனிடம் கேட்டார் அவனோ ஐயா அச்சாணியை நெருப்பில் காட்டி உருக்கி சரிசெய்ய வேண்டுமானால் அடுப்பு எரிக்க துருத்தி போட வேண் டும் நான் ஒருவனே துருத்தியும் போட்டு கொண்டு உடைந்த அச்சா ணியை சரி செய்ய முடியாது என்னி டம் துருத்தி போட இப்போது வேறு யாரும் இல்லையே என்று வருத்த பட்டான்
ஜமின்தார் யோசித்தார் இவனுக்கு துருத்திபோட ஒரு ஆள் கிடை த்து அதன் பிறகு அச்சாணியை சரி செய்வது என்பது காலம் கடத்து கிற விஷயம் எனவே ஆளுக்காக காத்திருக்காமல் நாமே துரு த்தி போடலாம் என்று நினைத்து கொல்லனிடம் எப்படி துருத்தி போடவேண்டும் என்று சொல் நானே போடுகிறேன் என்றார் அவ னும் செய்து காமித்தான் ஜமின்தார் துருத்தி போட துவங்கினார் துருத் தியை பிடித்து மாறிமாறி அழுத்து ம் போது அவர் கைகள் வலித்தன உழைக்காத உடம்பு உழைக்க துவங்கினால் என்னவாகும் மூச்சு வாங்கியது அருவிபோல உடம்பு வியர்த்து கொட்டியது எப்படியோ ஒரு வழியாக அச்சாணி யை சரிசெய்து கொல்லன் முடித் தான் இவரும் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சி விட்டார் உனது கூலி என்ன என்று கொல்லனி டம் கேட்டார் அவனோ நாங்களே துருத்தி போட்டால் ஐந்து வெள்ளி காசுகள் நீங்கள் போட்டதனால் ஒரு காசு குறைத்து நான்கு காசு கள் கொடுங்கள் என்று கேட்டான் ஆசுவாசமாக உட்கார்ந் திருந்த ஜமின்தார் அவனுக்கு ஐந்து பொற்காசுகள் கூலியாக கொடுத்தார்
கொல்லன் அதிர்ந்துபோனான் ஐயா நீங்கள் கொடுப்பது பொற்காசு தவறுதலாக கொடு க்கிறீர்களே என்று பதட்டத்தோடு கேட்டான் அதற்கு அவர் அப்பனே பொற்காசுக்கும் வெள்ளி காசுக்கும் வித்தியாசம் தெரியாம ல் கொடுக்க வில்லை பொற்காசு என்று தெரிந்தே கொடுக்கிறேன் தைரியமாக பெற்று கொள் என்று கூறிய அவர் இது வரை எனது வாழ்வில் திருப்தி என்றால் என்னவென்று அறியா மல் இருந்தேன் இன்று உன்னுடைய பட்டறையில் துருத்தி போட்ட போது உழைப்பும் உழைப்பதனால் ஏற்படும் உடல் வலியும் உழை ப்பு முடிந்த போது கிடைத்த ஓய்வினால் எனக்குள் தோன்றிய ஒருவித அமைதி யை நிஜமான திருப்தி என்பதை அறிந்து கொண்டேன் அதை அறிவித்த உனக்கு நன்றி செலுத்தவே பொற் காசை தந்தேன் என்றார்.
நிஜமான அழியாத சாஸ்வதமான திருப்தி என்பது உழைப்பின் முடிவில் கிடைப்பதே ஆகும். அந்த நேரத்தில் நமக்குள் ஏற்படுகிற அனைத்து கொந்தளிப்புகளும் அடங்கி ஒரு விதமான ஆனந்த அலை மேலோங்கி பிரவாகமாக வழியுமே அதன் பெயர்தான் திருப்தி எனவே திருப்தியும் சந்தோசமும் வேண்டு மென்றால் உழைக்க வேண்டும் உழைக்காமல் கிடை க்கின்ற எந்த பொருளும் திருப் தியை தருவதில்லை உழைக் காமல் கிடைக்கும் தங்க காசு பாரமானது உழைத்து கிடைக் கும் மண் ஓடுகூட பவித்திரமானது அதில்தான் திருப்தி இருக்கும் போதும் என்ற நிறைவு இருக்கிறது நிம்மதியான அமைதி இருக் கிறது எனவே திருப்தி யின் இரகசியம் பொருள்களில் அல்ல உழைப்பில் என்ப தை எப்போது புரிந்துகொள்கிறோமோ அப் போதே நமது வாழ்க்கையும் பூரணத்துவம் அடைகிறது அதுவரை அரை குறை வாழ் வில் தத்தளிக்கும் துரும்பாகவே இருப் போம்.
No comments:
Post a Comment