ஓம் என்னும் பிரணவம்:-எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்ப தற்கு மூல காரணமாக இருப்பது ஒலி யே. அந்தஒலியே பிரணவம் எனப் படும். வாயைத் திறந்து உள்ளிருக் கும் மூச்சுக் காற்றை வெளியிடும் போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிற க்கின்றது. அவ்வொலியின் கடைசியி ல் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்று கிறது. இந்த ”ஓம் – ஓம்” என்ற ஒலியையே பிரவணம் என்று கூறு வர். உலகம் தோன்றுவதற்கு
முன்பு பிரவண ஒலியே நிலவி இரு ந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர் களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன. ஓம் என்பது பிரணவ மந்திரமாகும் இது அ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’.
மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம் தா ன். ஓம் என்ற பிரவணன்”அ” என்பது எட்டும்”உ”என்பது இரண் டும் என்ற எண்களின் தமிழ் வடிவம். உயிர் எழு த்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர் மெய்த்தாவது போல் உயிரும் உடலு ம் சேர்ந்ததுதான் மனித வாழ்வு. அவ ரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். [உள் மூச்சு வெளி மூச்சு ]” உ ‘ எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு.” ம் ‘ ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்அத்துடன் ” ஓம் ” என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விள ங்கும்.அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.இதனை சிலர் இப்படியும் கூறு வார்கள்: அ என்பது முதல்வனான சிவனையும்உ என்பது உமை யவள் எனப்படும்
சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்தசிவசக்தியினையும் குறிக் கும். இச்சிவசக்திவடிவமே, சொரூப மே வரி வடிவில் ” ஓ ” என பிள் ளையார்சுழியாகவும் , “உ” எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக ‘சிவ லிங்கமும்’ ,ஒலி எழுத்தாக சொல் லும் போது ஓங் காரம், பிரணவம் என்று ஆன்றோர்களும், சான்றோர்க ளும் சொல் கிறார்கள்.இதனை திரு மூலர், திருமந்திரத்தில் :” ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி ஓமெ னு ஓங்காரத் துள்ளே உருவம் ஓமெ னு ஓங்காரத் துள்ளே பல பேதம்ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தி யே “முதல் வரிக்கு ஓம் என்பதை உச்சரிக்கும் பொழுது ஒரே சொல் லாகவும்,இரண்டாம் வரிக்கு அன்னையின் கருவில் பிண் டம் தரிக்கும் பொழுதும்அது தாயின் வயிற்றிற்குள் காணும் காட்சி ஓம் என்றே தோன்றும் ,மூன்றாம் வரி க்கு ஒரே உச்சரிப்பாயினும், மூன்றெ ழுத்தையும் அதன்விளக்கத்தையும், பேதங்கள் பலவாறாகவும், நான்காவ து வரிக்கு இதைசதா உச்சரித்து தியா னிப்பதால் முக்தி – உயர்ந்த சித் தியும் கிட்டும் என்பதை பாடல் நமக்கு உணர்த்துகிறது. முதல் எழுத்து:” ஆதி யிலே பராபரத்திற் பிறந்த சத்தம் அரு வுருவாய் நின்ற பாசிவமுமாகி தோதி யென்ற சிவனி டமாய்ச் சத்தியா கித் தொல்லுலகில் எழுவகையாந் தோற்ற மாகி “என்னும் சுப்பிரமணிய ஞானத் திலிருந்து அறியலாம்.சட்டை முனியும் தனதுசூத்திரத்தில் :” ஒடுக் கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந் ததாச்சு “- என்றும் குறிப்பிட் டுள்ளார்.சிவன், சக்தி , சிவசக்தி மூலத் தைக் குறி க்கும் ஓங்கார மந்தி ரத்திற்க்கும்முதல் எழுத்தாகவும் இது வே ” அ ” உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால் , தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் , சமஸ்கிருதம்முதலிய மொழியிலு ம் இதுவே முதல் எழுத்து.” அகர முதல எழுத்தெல் லாம் ஆதிபகவன் முதற்றே உலகு “என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும் ,அகஸ் த்திய பெருமான் தனது மெய்ஞான சுத்தி ரத்தில்,” அவ்வாகி உவ்வாகி மவ்வு மாகி ,- ஐம்ப த்தோ ரெழுத்துக்கு தியாகி “”அகர முதல் அவ்வை முத்தும் தியாகும் அறிந்தோர்க்கு இதிலேதான் வெளி யதாகும் “என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.
உருவமும்- உடலும்.உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்க னவே குறித்தப்பிட்டபடிஇதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவ மாய் உடம்பினுள் அமைந்துள்ளார்என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்.”கண்டது அவ்வெ ன்னுங்கடைய தோரட்சாம், பி ண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே”- மச்சைமுனி தீட்சை ஞானம் “உந்தியினுள்ளெ அவ் வும் உவ்வுமாய் மவ்வுமாகி விந்துவாய் நாதமாகி விளங் கிய சோதிதன்னை”- அகஸ்திய ர் முதுமொழி ஞானம். மேலும் இது வாயைத் திறந்தவுடன் நா க்கு, அல்லது மேல் வாயைத்தீண்டாமலேயே தொண்டையின் மூல மாய் பிறக்கும் ஓசை பேசும் போதுஉண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.இது பற்றி யூகி முனி தனது வைத் திய சிந்தாமணி 800 – ல்”அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோ ன்றும்அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும் எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்ஈ லிட்டு பழுவோடிரண்டு கொங்கையு மாம் முவ் வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம் முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி “என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம் பிற்கும் இதுவே முதல்காரணமென நன்கு தெளிந்துணரலாம். ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கிநிற்கும்.
இதை விளக்கும்படி திருமூலர்,” ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் ” என்று கூறியுள் ளார்.ஓங்காரத்தி தத்துவம் , அ , உ , ம் எனமித்து ஒலி எழுப்புவது. அகரவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின்தோன்றிக் காத்தல் தொழிலை யும், மகாரவொலி முடிவா தலின் அழித்தற்தொழிலையும் ஆக முத் தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.
“ஓம்” எனும் தாரக மந்திரத்தை தனி மையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம் புலன்களின் தொழில் கள் இயக்கம் அடைந்து மனது நிலை பெறும். ஐம் புலக் கதவு அடை படும். தன்னை யும், உலகையும் மறந்து நிற்க , சாபா சங்கள் மறந்து மனம் நிலைப்படும்.குறுகிக் கிடந்த மனம் விசால மடையும். மெய் ஞான விசாரணை விளைந்து,அதனால் வாழ்க்கையும் வேதனை களும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டா கும்” ஓம்” என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும்.இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி, மெய், முகம், ஆகி யவற்றில்ஒரு தெளிந்த பிர காசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோ ருக்கு வழி காட்டும்தன்மை நீங்களும் கா ணலாம். You see, there is no gain without pain. ஆனால் முயன்றால் நிச்சயம் சாதி த்து விடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பி ய பாதைகளில் செல்லுமாறு செய்வது தான் அடிப்படையானது. அப்படியரு சாத னையைப் பழக்கப்படுத்திக் கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்க ளிலாவது மனதை, கவனத்தைச் செலுத்த லாம். வேகமாக சிந்தி க்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரை வாக அடையலாம்.Lateral Thinking போன்றவை எளிதானவை தானே! பலர் காயகல்பம் பற்றி கேள்வி ப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர் கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளி ர்ந்து – சாவில்லாது என்றும் இளமை யுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காய கல்பம் கிடைப்பது அரிது.
இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.அதிகாலை எழுந்ததும் , இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாதுபத்து நிமிட மணித்துளி கள் ‘ ஓம் ‘ என்னும் மந்திரத்தை மன தால் உச் சரிக்க வேண்டும். உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி து வார வழியாககாற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழி யாக காற்றை வெளியிடவேண்டும். இப்படி சூரிய பகுதியில் உஷ் ணமாக உள்ள காற்றை சந்திரப்பகுதியில்குளிர்ச்சிப்படுத்தி வெளி யேற்றும் பொழுது ‘ ஓம் ‘ என்ற மந்திர த்தை மனதால் நினைந்தவாறு தொ டர்ந்து செய்து வரவேண்டும். இங்ஙனம் வெளிச் செல்லும் பிராணன்குறைந்து குறைந்து இறுதியில் உள்ளேயே சுழலத் தொடங்கும். உள் சுழற்சியால் மூலா தார த்தில் பாம்பு வடிவில் உறங்கிக் கொண் டிருப்பதாக சொல்லப்படும் குண்டலி அல் லது குண்டலினி என்னும் சக்தி எழுப்பும். குண்டலியும் அடியுண்ட நாகம் போல் ஓசையுடன் எழும். இவ்வாறு எழும்பும் குண்டலினி ஆறு தரங்களில் பொருந்தி சகஸ்ராரத்தில் சென்று அமுதமாக மாறி க் கீழ்வரும்.[ சித்தர்கள் 'விந்து விட்ட வன் நெந்து கெடுவான்] என்பார்கள். காரணம் இந்த விந்துதான் பிர ணாயத்தின் மூலம் குண்டலி வழி சகஸ்ராரத்தில் அடைகிறது. மேல் ஏறினால் பேரின்பம். கீழ் இறங்கினால் சிற்றின்பம்.]யோகியர் நாவை மடித்து இதனை உண்ணுவார். இந்த ஒரு சொட்டு அமுதம் சுவைத்தால் பசி, தாகம், தூக்கம் இல்லாது பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருக்கலாம். அதுவே சிவநீர் என்பார்கள். இதனை விழுங்கி னால் நாமும் காய சித்தி பலனை அடைய லாம். இதனை திரு மூலர் :”ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்கும்
கணக்கறி வாள்ர்க்குக்கூற்றை உதைக்கும் குறியது வாமே ” – என்கிறார்.இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங் கலை. அவ்வாறு இரண்டாகப்பிரிக்காது இரு வழியாகவும் மூச்சு க்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவம த்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வா று அறிந்த வர்கள் எமனைஎதிர்த்து உதைக்கும் ஆற்றல் அறிந்தவர் கள். வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலை யினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் ‘தாம் பெற்ற இன்பம் இவ்வையகம்பெறுக’ என்ற நோக்கில் தெளி வாக சொல்லியுள்ளார்கள்.
காயசித்தியின் பெருமையினை ‘காக புசண்டர்’ பாடலைக் காண் போம் :பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்பாலகன் போ லொரு வயது தானுமாச்சுநேரப்பா இரு பத்தி நான்கு சென்றால் நேர்மையு ள்ள வயது மீரண்டாகும்சீரப்பா முப்பத்தி ஆறு மானால்சிறப்பாக மூன்று வயதாச்சுதப் போதாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதா ய்த் தான் பெருக்கி வயததுவை எண்ணிக் கொள்ளே ….ஒன்றில்லாமல் ஒன்றிலில் லை. இதனை மெய்பிக்கவே சிவனும் – சக்தியும்.உலக மாந்தர் களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் – பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு.
வாழ்வில் இன்ப – துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சமபங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே , விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.
No comments:
Post a Comment