Tuesday, October 1, 2013

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!!!

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!!!
ஒரு புகழ் பெற்ற வாக்கியத்தை கூற விரும்புகிறேன்...

"Never hold yourself solely responsible for any misfortune in life, 
because no single raindrop is ever alone responsible for any flood.......!!"

வாழ்வில் சில சமயம் நாம் தோல்வியை சந்திக்க நேரிடும்... 
"வெற்றி" எப்படி நமக்கு நண்பனோ,
அதுபோல "தோல்வி"யும் நமக்கு நண்பன்..

ஆனால் தோல்வி நண்பன் நமக்கு பாடம் சொல்லித்தருவான்..

முக்கிய பாடம் என்னவெனில், தோல்விக்கான காரணம் அறிதல்!!
நமக்கு ஏற்பட்ட தோல்வி உண்மையிலேயே நம்மால் தான் ஏற்பட்டதா?
(அதாவது கவனக்குறை, பயிற்சி இன்மை, தெளிவில்லா நிலை, உடல்நல குறைவு போன்ற இன்னும் பல...)

தோற்றதற்கு வேறு காரணம் உள்ளதா?? என்றும் ஆராய வேண்டும்.

பொதுவான ஒரு பழக்கம், தோற்ற பின் தன்னை குறை கூறி கொண்டு மனதின் வேகத்தை நாமே குறைத்து கொள்வோம்..
அதுவரை மனதை ஒருமுகப்படுத்தி வெற்றியை நோக்கி பயணித்த நாம் தோல்வி என்றவுடன் 'என்னவோ மலை இடிந்து விழுந்ததை போல' வருந்திகொண்டிருப்போம்..

"யோவ் கஷ்டம் வந்தா பீல் பண்ண வேணாமா??" என நீங்கள் கேட்ப்பது புரிகிறது..

பீல் பண்ண வேணாம்...
எப்படி??

வெற்றி வந்தால் தன்னால் தான் எல்லாம் நடந்தது என்று நினைக்கும் பழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும்..
என்ன புரியவில்லையா ??

எப்போது நாம் வெற்றி பெரும் போது வெற்றி நம் மன நிலையை பாதிக்காது இருக்கிறதோ? அப்போதுதான் தோல்விக்கான காரணமும் நம்மை பாதிக்காது, ஆக வேண்டியதை மனம் கவனிக்க தொடங்கும்..

இன்னும் விளங்கவில்லை எனில்,
தோனியை உதாரணமாக எடுத்து கொள்ளவும்.. 
"கேப்டன் கூல்" என செல்லமாக அழைக்கிறோம்!
அவரால் தொடர் வெற்றி அடைய முடிகிறதே எப்படி???
எந்நேரமும் தோல்வி குறித்த பயமோ, அடுத்தவர் பற்றி குறை கூறியோ (மைதானத்தில் யாரையும் கடிந்து பேசாமல்) அவர் இந்த வெற்றியை, இந்த புகழை அடையவில்லை.. 

மனதை வெற்றியை நோக்கி மட்டும் சிந்திக்க வைத்து, 
தோல்வி வந்தாலும் அடுத்த வெற்றியை பற்றி மட்டுமே சிந்தித்ததனால்,
தோனி வெற்றி மட்டுமே பெற முடிந்தது!!!

"சிறு மழைத்துளி மட்டுமே பெருவெள்ளத்திற்கு காரணம் அல்ல, அதனால் உன் வாழ்வின் துன்பத்திற்கு நீ மட்டுமே காரணமும் இல்ல"

அதனால கவலபடுரத விட்டுட்டு, கஷ்டபட்டா, இஷ்ட்டபடுறது எல்லாம் கிடைக்கும்!

No comments:

Post a Comment