நமக்கென்று சொந்தமான கொஞ்சம் நிலம், அதில் ஒரு சின்ன வீடு, அந்த சின்ன வீட்டில், அப்பா, அம்மா, மகள் மற்றும் மகன் என் றொரு சின்னதொரு குடும்பமாக இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றே நினைத்து, இன்று வாடகை வீட்டில் வசிப்ப வர்கள், சொந்தமாக நிலம் வாங் கி, வீடு கட்ட முயற்சிக்கிறார்க ள். அப்படி நிலத்தை வாங்கும் போது, இடத்திற்கு ஏற்றாற்போல் அளவீடுகள் மாறு படும், உதார ணமாக கிராமமாக இருந்தால், 1 சென்ட் 1 ஏக்கர் என்று கணக்கிடு வார்கள். ஆனால் இதே நகரமாக இருந்தால் ஒரு சதுர அடி, 1 கிரவு ண்டு என்ற அளவீட்டை பயன்படுத்துவார்கள். அந்த அள வீடுகளை நாம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது தானே! இதோ அந்த நில அளவீடுகள்.
100 ஏர்ஸ் – 1 ஹெக்டேர்
1 ச.மீ – 10 .764 ச அடி
2400 ச.அடி – 1 மனை
24 மனை – 1 காணி
1 காணி – 1 .32 ஏக்கர்
144 ச.அங்குலம் – 1 சதுர அடி
435 . 6 சதுர அடி – 1 சென்ட்
1000 ச லிங்க்ஸ் – 1 சென்ட்
100 சென்ட் – 1 ஏக்கர்
1லட்சம்ச.லிங்க்ஸ் – 1 ஏக்கர்
2 .47 ஏக்கர் – 1 ஹெக்டேர்
1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )
1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)
100 சென்ட் = 4840 சதுர குழிகள்
1 சென்ட் = 48.4 சதுர குழிகள்
1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )
1 ஏக்கர் = 43560 சதுர அடி
1 குழி (Square Yard) = 0.8361 ச.மீ. (Sq. Mr.)
1 ச.மீ(Square Meter) = 1.190 குழி
1 குழி = 9 சதுர அடி
1 ச.மீ(Square Meter) = 10.76 சதுர அடி
1 குந்தா (Guntha) = 121 குழி = 101.17 சதுர மீட்டர்
1 குந்தா (Guntha) = 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி
100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி
16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
240 குழி = 1 பாடகம்
20 மா = 1 வேலி
18 மனை(கிர) – 1 ஏக்கர்
No comments:
Post a Comment