இராவண வதம் முடிந்ததும், விபீஷணன் இலங்கைக்கு அரசன் ஆனா ன். குபேரனிடமிருந்து இராவ ணன் கைப்பற்றிய விமானத்தை விபீஷ ணன் இராமனுக்குத் தந்தா ன்.
“வங்க நீள்நெடு வடதிசை வான வன் விமானம்
துங்க மாகவி எழுபது வெள்ளமு ம் சூழ்ந்தால்
எங்குளார் எனும் இடம் உளது அதன் மிசை ஏறிப்
பொங்கு மாநகர் புகுதிஇப் பொழுதினில்’
என்றான் விபீஷணன்.
அந்த விமானத்தில் இராமன், லட்சுமணன், சீதை, விபீஷணன், அனுமன், சாம்பன், குமரன், மற்றுமு ள்ள அனைத்து வானர சேனையும் ஏறினர். ஆனால் குரங்கினத்தில் ஒரு பகுதியினர் மட்டும் விமானத் தில் ஏறா மல் தனித்து நின்றனர்.
அவர்களைக் கண்ட இராமன், “நீங்களும் விமானத்தில் ஏறுங்கள்” என் றான்.
“ஐயா, எங்கள் சேனைத் தலைவன் வசந்தன், கும்பகர்ணனோடு போரிடு கையில், கும்பகர்ணன் அவனைப் பிடி த்து, நீறு எழுமாறு பிசைந்து நெற்றியி ல் திலகமாக இட்டுக் கொண்டான். எங் கள் தலைவனைப் பிரிந்து நாங்கள் மட்டும் எப்படி வர இயலும்?” என்றன ர்.
தனக்காகப்போரிட்ட வீரனைப்பிரிந்து செல்ல இராமன் இசைவானோ? உட னே லட்சுமணனை அழைத்து யமனுக் கு ஓர் ஓலை எழுத ப் பணி த்தான்.
“வரிசிலை இராமன் ஓலை
மறம்புரி மறலி காண்க
எரிகொளும் இலங்கைப் போரில்
இன்னுயிர் துறந்து போந்த
குரிசிலை- வசந்தன் தன்னைத்
தேடியே கொணர்க! அன்றேல்
உரியநின் பதமும் வாழ்வும்
ஒழிப்பேன்!’
-என்று எழுதி அனுப்பினான்.
அந்த ஓலையை அனுமன் பெற்று, உடனே யமபுரம் சென்று யமனி டம் நீட்டினான்.
அந்த ஓலையைப் படித்த யமன், “ஐயா ஆஞ்சனேயப் பெருமானே! உன் நாயகன் இராமனின் அடியார்கள் நரகத்தை அடை யார். அவர்கள் வானவர் உலகிலேயே இருப்பர். அங்குசென்று தேடுக!” என்றான்.
உடனே அனுமன் யமனைத் தன் வாலி னால் பற்றிக் கொண்டு இந்திரனி டம் சென்றான்.
அனுமனைக் கண்ட இந்திரன் பதறிப்போ ய், “ஆஞ்சனேயா! உன் கோபத்திற்குக் காரணம் என்ன?” என்றான்.
“எங்கள் படைத்தலைவன் வசந்தனைத்தேடி வந்தேன். அவனை உட னே கொணர்க” என்றான்.
“உன் நாயகனின் அடியார் என் உலகுக்கு வாரார். ஒருக்கால் பிரம் மன் உலகில் இருப் பார்” என்றான் இந்திரன்.
அனுமன் இந்திரனையும் வாலில் பற்றிக் கொண்டு பிரம்ம லோகம் சென்று, “பிரம்ம னே! வசந்தனைத் தருவீர்” என்றான்.
அதற்கு பிரம்மன், “இராமனின் அடியார் என் உலகிற்கு ஒருபோதும் வரார். அவர்கள் விஷ்ணுவின் பரமபதத்தில்தான் இருப்பர்” என்றா ன்.
உடனே அனுமன் பிரம்மனையும் வாலில் பற்றிக்கொண்டு பரமபதத்தை அடைந்தான். அங்கு வசந்தன் சூட்சுமமான ஒளியுருக் கொண்டு கைங் கரியச் செல்வனாக இருந்தான். பிரம்மன் அவனுக்கு முந்தைய (வசந்தன்) உருவம் கொடுத்தான்.
யமன் முதலியோரை வாலிலிருந்து விடுவித்த அனுமன், வசந்தனுட ன் இராமனிடம் சேர்ந்தான். வசந்தனைக் கண்ட இராமன் மிக மகிழ்ந்தான். வசந்தனின் படையி னரும் ஆனந்தக் கூத்தாடினர். அவனைத் தங்க ள் தோளில் சுமந்து விமானத்தில் ஏற்றித் தாங்க ளும் ஏறிக்கொண்டனர். பின்னர் விமானம் அயோத்தி நோக்கிப் புறப்பட்டது.
இந்தக் காட்சியினை கம்பன் பாடவில்லை. நா டோடிக் கதையாக வழங்கிய இதனைப் பிற்கால த்தவர் பலவிதமாகப் பாடி கம்ப காவியத்தில் புகுத்தினர்.
தன் படைவீரரில் ஒருவர் குறைந்தாலும், இரா மனின் அருள் உள்ளம் படாத பாடுபடும் என்ப தையே இவ்வரலாறு குறிக்கின்றது. இராம கை ங்கரியம் மேற்கொண்டவர்கள் நரகமோ சொர்க் கமோ பிரம்ம லோகமோ அடையார். வானோர்க் கு உயர்ந்த உலகமாகிய வீட்டுல கையே அடை வர். அங்கே பகவத் கைங்கர்யமே அவர்கள் பெறும் பேறாக இருக்கும். ஏதாவது ஒரு காரணத்துக்காக பகவான் ஆணையிட்டால் மட்டுமே உலகுக்குத் திரும்பி வருவர். வந்த காரியம் முடிந்தவுடன் வீட்டுலகுக் கே திரும்புவர் என்ற வைணவக் கொள்கைக்கு எடுத்துக் காட்டாக வசந்தன் வரலாறு உள்ளது.
இவ்வரலாறு குறித்து பதினாறாவது நூற்றாண்டு வரை எந்த நூலி லும் கூறப்படவில்லை. 17-ஆம் நூற்றாண்டில் தோன்றிய “மாறன் பாவினம்’ என்னும் இலக்கண நூலில் மட்டும் சிறு குறிப்பு உள்ளது.
பாரதம்ஐம்பத்தாறு நாடுகளாகப் பிரிந்தி ருந்தது. அவற்றுள் ஒன்று சிந்து .
அந்நாட்டு மன்னனுக்கு ஒரே மகன். பெயர் ஜயத்ரதன். அவன் வளர வளர, தீய குணங் களும் அவனிடம் வளர்ந்தன. பிறருக்குத் துன்பம் இழைப்பதைப் பெரும் மகிழ்ச்சி யாகக் கருதினான்.
சிந்து மன்னன் விருத்த க்ஷத்திரன் தன் மகன் செய்யும் கொடுமை களை அறிவா ன். ஆயினும் ஒரே மகன் என்ற பாசத்தால் அவனைக் கண்டிக்க வில்லை.
திருமணம்செய்து வைத்தால் அவன்கொடுங்குணம் மாறலாம் என் று எண்ணிய தந்தை, அவனுக்கு துரி யோதனன் தங்கை துச்செள்ளை யைத் திருமணம் செய்து வைத்தான்.
தந்தையின் எதிர்பார்ப்பு வீணானது. திருமணத்துக்குப்பின் ஜயத்ரதன் கொடுமை எல்லை கடந்து போயி ற்று.
“இத்தகைய கொடியவனுக்குக்கேடு நேருமே! யாரிடமாவது சிக்கித் தலை அறுப்புண்டு சாகக்கூடுமே! இனி இவனைத் திருத்தவும் இயலாது. இவன் சாகாமல் காக்கவும் வேண்டும். இதற்கு என்ன வழி?’ என்று ஆய்ந்தான். “தவம் செய்து இறைவனிடம் வரம் பெற்று ஒரே மகனைக் காப்போம்’ என முடிவு செய்தான்.
காட்டின் நடுவே “சியமந்தம்’ என்ற குளம் இருந்தது. அதன் கரையெங் கும் மரங்கள் வானூற ஓங்கி வளர்ந்திருந்தன. வெயில் நுழைய முடி யாத சோலையாக அது இருந்தது. தவம் செய்வதற்கு ஏற்ற இடம் இது தான் என்று அதனைத் தேர்ந்தெடுத்தான்.
“என் மகனைக் கொன்று அவன் தலையை நிலத்தில் இடுபவனின் தலை நொறுங்க வேண்டும்’ என்று இறைவனிடம் கேட்க வேண்டிய வரத்தை யும் தீர்மானித்துக் கொண்டான்.
பல ஆண்டுகள் தவம் செய்தா ன்; வரமும் பெற்றுவிட்டான். தவத்தை முடிக்க வேண்டிய தருணம். அந்த சமயத்தில் எதிர்பாராத நிகழ்ச்சி நட ந்தது. பாரதப்போரில் அபிமன்யு வை ஜயத்ரதன் வஞ்சனை செய்து கொ ன்று விட்டான்.
இதை அறிந்த அபிமன்யுவின் தந்தை அர்ஜுனன், “ஜயத்ரதனைக் கொ ன்றே தீருவேன்’ என்று சபதம் பூண்டான். கண்ணன் உதவியால் மறு நாள் மாலை அர்ஜுனன் ஓர் அம்பால் ஜயத்ரதனின் தலையை வெட்டிக் கொன்றான்.
உடனே கண்ணன், “அர்ஜுனா! அந்தத் தலையை நிலத்தில் பட விடா தே! மேலும் மேலும் அம்பு தொடுத்து சியமந்தகத் தடாகத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் இவன் தந்தையின் கையில் விழச்செய்” என் றான்.
கண்ணன் சொன்னபடியே அர்ஜு னன் செய்தான். ஜயத்ரதனின் தலை , தவம் செய்து கொண்டி ருந்த அவன் தந்தையின் கை யில் விழுந்தது. எதிர்பாராது விழுந்த மையால் துணுக்குற்ற தந்தை, தன் மகன் தலை யைக் கீழே போட்டான்.
அவன் பெற்ற வரம் பலித்து விட்டது. “என் மகன் தலையை நிலத் தில் இட்டவன் தலை நொறுங்க வேண்டும்’ என்பது தானே அவன் பெற்ற வரம்!
இப்போது நிலத்தில் இட்டவன் அவன் தானே! அக்கணமே அவன் தலை நொறுங்கி உயிரிழந் தான். திருந்தாத தீயவனைக் காக்க எண்ணியவன் அத்தீயவனோடு தானும் மாண்டான்.
தீயவர் யாராயினும் திருந்த முயலுதல் வேண்டு ம். திருந்த இயலா தவ ன் தீமைக்குத் தக்க தண் டனை தரவேண்டும். அந்தத் தண்டனை பிறர் தந்தால், “தன் வினை தன்னை சுடாது விடுமோ?’ என்று ஆறுதல் பெற வேண்டும்.
No comments:
Post a Comment