* பெற்றுக் கொள்பவன் அல்ல. தன்னிடம் உள்ளதை பிறருக்குக் கொடுத்து மகிழ்பவனே பேறு பெற்றவன் ஆவான்.
* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
* உங்கள் தவறுகளை பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலேயே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள்.
* துயரத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி மகிழ்ச்சி என்னும் நினைப்பையே விட்டு விடுவது மட்டும் தான்.
* மிகப்பெரிய பலவீனங்கள் சில நேரங்களில் மிகப் பெரிய நன்மையாகவும், வலிமையாகவும் மாறி விடுகின்றன.
* தன்னையே மறந்து மன ஒருமைப்பாட்டுடன் ஒருவன் வேலை செய்யும்போது, அந்த வேலை அழியாச் சிறப்புடன் விளங்கும்.
* போராட்டமே சொர்க்கத்திற்கு இருக்கும் ஒரே வழி. சொர்க்கத்திற்கு ஒரு பாதை இருக்கின்றது என்றால் அது நரகத்தின் வழியாகச் செல்வது தான்.
* அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி என்பதை மறக்காதீர்கள்.
* பெற்றுக் கொள்பவன் அல்ல. தன்னிடம் உள்ளதை பிறருக்குக் கொடுத்து மகிழ்பவனே பேறு பெற்றவன் ஆவான்.
– விவேகானந்தர்.
No comments:
Post a Comment