Wednesday, October 9, 2013

மூன்று யுகங்களோடு தொடர்புடைய ஸ்ரீ வேணு கோபால சுவாமி ஆலயம்.

ரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு. இவற்றில் மூன்று யுகங்களோடு தொடர்பு டையதாக விளங்குகிறது வெங்கட்டாம் பேட்டை வேணு கோபால சுவாமி  ஆலயம்.

இவ்வாலயத்தில் திரேதா யுகத் தை நினைவுபடுத்தும் வகையி ல் அனந்த சயன ராமர் உள்ளார்.

துவாபர யுகத்தின் அடிப்படையி ல் வேணுகோபால சுவாமி பிரதி ஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

கலியுகத்தின் அடிப்படையில் மோகினி அவதார சிலை அமைந்து ள்ளது.

திரேதா யுகத்தில்தான் ராமபிரான் இலங்கை சென்று சீதாதேவி யை மீட்டு வந்தார். அவ்வாறு தி ரும்பும்போது ராமேஸ்வரத்ல் சிவ பூஜை முடித்துவிட்டு சித்ர கூடம் (சிதம்பரம்) வழியாக வந் துகொண் டிருந்தார். சீதாதேவி யை இராவணன் கடத்திச் சென்ற து முதலே ராம பிரானுக்கு ஓய்வு உறக்கமில்லை. அதன் முடிவில் இராவணனுடன் கடும் போரும் செய்தார். இவையெல்லாம் அவ ரிடம் களைப்பை ஏற்படுத்தியிரு ந்த காரணத்தால் சற்று இளைப்பாற எண்ணி தரையில் படுக்கச்  சென்றார். இதைக் கண்டு மனம் பதைத்த லட்சுமணன் தன் முந்தை ய வடிவான ஆதிசேஷன் உருவமெடுத்து, உடலை மெத்தையாக வும் சிரசை குடையாகவும் விரித்துப்படுக்க, அதன்மீது ராமபிரான் மேற்கு- கிழக்காக பள்ளி கொண்டார். சீதா தேவி அருகே இருந்து அவர் கால்களைப் பிடித்துவிட்டாள்.

அதே நேரத்தில் அயோத்தியிலிருந்த பர தன், குறித்த நேரத்தில் அண்ணன் வந்து சேரவில்லையே என மனம் வெதும்பி, தீ வளர்த்து அதற்குள் இறங்கி உயிர்விட ஆயத்தமானான். களைப்பால் சற்று கண் ணயர்ந்தபோதும் தன் உள்ளுணர்வால் இதையறிந்த ராமபிரான் உடனே கண் விழித்து, தான் சீதையுடன் வந்து கொண் டிருக்கும் செய்தியை பரதனிடம் காற்றினும் கடிது சென்று தெரிவி க்குமாறு அனுமனிடம் ஆணையிட்டார். அவ்வாறே சென்று அனு மனும் பரதனின் உயிரைக் காத்தான்.

இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் அமைந்துள்ளதே இங்குள்ள ஸ்ரீ ராமனின் சயனக் கோலம். ஆதிசேஷன்மீது ஸ்ரீராமன் படுத்திருக்க, கால்பகுதியில் சீதை இருக்க, புற ப்பட யத்தனிக்கு ம் தோரணையில் அனுமனும் உள்ளது அற்புத மான காட்சி. இந்த சந்நிதி வேணு கோபால சுவாமி சந்நிதிக் கு வடக்கே அமைந்துள்ளது.

கிருஷ்ணதேவராயர் காலத்தில் இவ்வாலயம் அமைக்க திருப்ப ணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவிலுக்கு மேற்கேயுள்ள ஒரு பகுதியில் அனந்தசயன ராமர் உள்ளிட்ட சிற்பங்கள் செய்யப்ப ட்டன. செய்து முடித்து அவற்றை ஆலயத்துக்குக் கொண்டுவரும் வழியில் ராமரின் விக்ரகம் மட்டு ம் பூமியில் புதைந்துவிட்டதாம். எனவே திருப்பணிகள் அப்படியே நின்று விட்டன.

பல ஆண்டுகள் கடந்தன. சிற்றரசன் ஒரு வன் தன் ஆட்சிக்குட்பட்ட இந்தப் பகுதி யை தன் மகள் வேங்கடம்மாவுக்கு சீதன மாக வழங் கினான்.
அந்த இளவரசி நின்றுபோன கோவில் திருப்பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்றி முடித்தாள். மூலவராக வேணு கோபால சுவாமி, தாயார், ஆண் டாள், ஆழ்வார்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டனர்.

இதே காலகட்டத்தில் ஊருக்கு மேற்கே விவசாயி ஒருவர் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போ து கலப்பை எதிலோ சிக்க, காளைகள் அப்படியே  நின்றுவிட்டன. உடனே அந்த விவசாயி மண்ணை அக ழ்ந்து பார்க்க, அங்கே சயன ராமர் விக்ரகம் இருப்பதைக்கண்டார். பின்னர் ஊர் மக்கள் ஒத்து ழைப்யோடு சயன ராமர் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டு பிரதி ஷ்டை  செய்யப் பட்டார்.

கலியுக வரலாற்றின்படி, ஐயப் பன் அவதாரத்தின் பொருட்டு மோகினி வடிவம் எடுத்தார் மகா விஷ்ணு. அதைக் குறிக்கும் வண்ணம் இவ்வாலய த்துக்கு அருகே, பாச்சாபாளையம் பெருமாள் கோவிலில் மோகி னி அவதார விக்ரகம் உள்ளது.

முற்காலத்தில் இவ்வூர் திருவேங்கடத்தின் நினைவாக வேங்கட புரி என்னும் பெயரில் விளங்கியது. பின்னர் இவ்வாலயத் திருப் பணி செய்த வேங்கடம்மாளின் நினைவாக வேங்கடம்மாள் பேட் டை என்று அழைக்கப்பட்டு, தற்போது வெங்கட்டாம் பேட்டை என மருவி வழங் குகிறது.
“”இங்குள்ள ராமபிரான் சய னக் கோலத் திருவடிவத் தை வேறெங் கும் காண்பது அரிது. இவரை தரிசிக்கும் போது மன நிம்மதி உண்டா வதை நாம் அனுபவப்பூர்வமாக உணரலாம். பிரச்சினைகளில் சிக் கித் தவிப்போர், மன சஞ்சலத்தில் உள்ளோர் இவரை தரிசித்தால், மனதில் ஒரு தெளிவு தோன்றி புத்துணர்ச்சி உண்டாகும். காரணம், இலங்கைப் போரை வெற்றிகரமாக முடி த்துக்கொண்டு வந்து ராம பிரான் ஓய்வெ டுத்த இடம் இது. “சீதையை மீட்டு விட் டோம்; இராவணன் என்ற அரக்கனை அழித்துவிட்டோம்; இனி அனைவருக்கு ம் நிம்மதி’ என்ற எண்ணத்தோடு  ராம பிரான் துயில் மேற்கொண்டதால்,  ராம பிரானுக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சி யும்  மனநிறைவும் அவரை தரிசிப்போருக்கு ம் கிட்டுகிறது” என்கிறார் தம்பிப் பேட் டையைச்சேர்ந்த விஜயகுமார சுவாமி.

“”பெருமாளைத்தான் நின்றகோலம், அம ர்ந்த கோலம், கிடந்த கோலம் என்று கண் டுள்ளோம். ராமபிரானின் சயன கோலத் தை மிக அரிதாகவே தரி சிக்கலாம். அந்த அற்புத தரிசனம் இங்கே கிடைப்பது நாம் பெற்ற பேறு. இங்கு வந்து வழிபடுவோருக்கு எல் லா பாக்கியங்களும் கிட் டும்.

மன நிம்மதி, வழக்குகளில் வெற்றி, திருமணப்பேறு, பிள்ளைப்பேறு போன்ற எல்லாமே சித்திக்கும்” என் கிறார் ஆலய பட்டாச்சாரி யார் சுந்தரராஜன்.
தற்போது இவ்வாலயத் தைப் புதுப்பிக்கும் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாலய ம் கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி ப் பாடிக்கு வடக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பஸ் , ஆட்டோ வசதிகள் உள் ளன.

No comments:

Post a Comment