நம் நாட்டை 200 ஆண்டு காலம் ஆண்டு அடிமைபடுத்திய பிரிட்டீஷ்காரர்களை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஒப்பற்ற இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
அடிமைதனத்தை ஒழிப்பதற்கு அஹிம்சை போராட்டம் எவ்வளவு தூரம் உதவியதோ அதேபோல் நம் நாட்டில் நேதாஜி அவர்களின் ஆயுதம் ஏந்திய ராணுவம் அமைத்து போராடியதும் நமக்கு உதவியது. இந்திய விடுதலைக்கு போரடிய மாபெரும் தலைவரின் பிறந்த நாளில் அவரின் நினைவுகளில் அவர் ஆற்றிய எழுச்சி உரைகள் சில…..
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை:
அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளு க்கும் பின்னால், நம் கண்களில் படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது-எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ – அந்த பூமியை நோக்கி நாம் திரும்பு கிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது… ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந் தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமை க்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம்வேறானால் வீரர்களுக் குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டு விட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை…. சலோ டெல்லி :”
மற்றொரு எழுச்சி உரை:”நமது சரித்திரத்தில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத சிக்கலான வேளையில் உங்களுக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் துவண்டுவிடாதீர்கள். உங்கள் உணர்வுகளை தளரவிடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் விதியில் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்காதீர்கள். இந்தியாவை அடிமைத் தளை யிலேயே வைத்திருக்கும் சக்தி இந்த உலகில் எதற்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல… விரைவில் இந்தியா விடுதலை பெறும். ஜெய்ஹிந்த்.”
ஈடுஇணையற்ற மாபெரும் தலைவரின் இந்த பிறந்த நாளில் புது சபதம் ஏற்போம்.நாட்டை நல்வழிபடுத்த உறுதுணையாக இருப்போம் என்று……
No comments:
Post a Comment