வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் சிறப்பானவராகத் திகழவேண்டுமா?
வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் சிறப்பானவராகத் திகழ வேண்டுமா னால் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல் தானே தவிக்கிறோம்; தெரிந்தால் ஜமாய்த்து விடுவோமே என்றுதானே நினைக்கிறீ ர்கள்! கேரியர் வார்ஃபேர் என்கிற இப் பு த்தகத்தைப் படித்தால், உங்கள் பாஸை உங்களை நோக்கி நிச்சயம் திரும்பிப் பார்க்க வைப்பீர்கள்.
வெற்றிச் செருக்கு எதுவுமில்லாமல், அலங்காரமற்ற, அனுபவப்பூர்வ மான யோசனைகளுடன் பிராக்டிக்கலா க எழுதப்பட்ட இந்தப் புத்தகம் உங்களு க்கு சொல்லும் முதல் விஷயம், நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் உங்களை மதிப்பீடு செய்பவர்களின் பார்வையிலேயே நீங்கள் பார்த்துச் செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் பிராண்டை நீங்கள் வளர்த்துக் கொள்வ தன் மூலம் ஆபீஸ் வேலையில் ஜெயி க்க, நீங்கள் என்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்பதை ஆசிரியர் இந்தப் புத்தகத்தில் விலாவாரியாக ப் பட்டியல்போட்டுச் சொல்லி இருக்கிறார்.
‘ஸாரி’ சொல்லாதீர்கள்!
அலுவலகப் பணியில் வெற்றி பெற ‘ஸாரி’ சொல்வதை முடிந்தவரை குறைத்துக் கொள் ளுங்கள். ‘ஸாரி சார், நாளைக்குத் தருகிறேன்’, ‘ஸாரி சார், இன்றைக்கும் முடியவில்லை’, ‘ஸாரி சார், அடுத்தமுறை சரி பண் றேன்’ என்று நீங்கள் சொல்லும் ஒவ் வொரு ‘ஸாரி’யும் நீங் கள் என்ன மாதிரியான நபர் என்பதை உங்கள் அலுவலகம் முடிவு செய்ய தோது வானதாக இருக்கிறது. அதனால் குறைந்த அளவு ‘ஸாரி’ சொல்லுங்கள்.
மாத்தி யோசியுங்க!
நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் பணிகள் சிறப்பாக நடக்க ஏதாவது ஒன்று குறையும். அது என்ன என்று ஆரா ய்ந்து கண்டுபிடித்து அதை நீங்கள் செய்யு ங்கள் என்று சொல்லும் ஆசிரியர், அது மே லிடம் மதிக்கக் கூடிய விஷயமாகவும் இருக்கவேண்டும் என்கிறார். அப்படி ஒரு விஷயம் ரொம்ப கஷ்டமான செயலாக வ ல்லவா இருக்கும் என்பீர்கள். அது இல்ல வேயில்லை என்று சொல்லும் ஆசிரியர், அலுவலகத்தில் பெய ரெடுக்க மிகவும் சவாலான மற்றும் பாப்புலரான வேலைக ளைச் செய்ய நிறையபேர் போட்டி போடு வார்கள். நீங்கள் இதற்கு மாற்று யோச னையாக யாருமே சிந்திக்காத, ஆனால் மிகவும் எளிமையான கட்டாயம் தேவை யானது எது என்று பாருங்கள். பல விஷயங்கள் உங்கள் கண்ணுக்கு முன்னால் வரும். அவற்றை வரிந்துகட்டிக்கொண்டு எடுத்துப்போட்டு சிரத்தையுடன் செய்யுங்கள். வளர்ச்சி எப்படி வருகிறது என்று பாருங் கள்.
மாங்குமாங்கென்று உழையுங்கள்!
சிறுவயதில் வேலைக்குச் சேர்ந்தவுட ன் உங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கப்போவது அலுவலகத்தில் பவ ர்ஃபுல்லான மனிதர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதுதான் என்று சொ ல்லும் ஆசிரியர், அதற்கான வழிகளை யும் சொல்லியுள்ளார். பவர்ஃபுல்லான மனிதர்கள் கண்ணில் படுவதற்கு நி றைய பணம் சம்பாதித்துத் தரும் ஏரியாவிற்கு வேலையை மாற்றிக் கொண்டு (சேலஞ்ச் தான்!) மாங்குமாங்கென்று உழைப்பதும் ஓர் உத்தி தான் என்கிறார் ஆசிரியர். இதுபோன்ற வாய்ப்பு கள் கிடைத்தால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி துணிச்சலான வாக்குறுதிகளைச் செய்து அவற் றை நிறைவேற்றியும் காண்பி யுங்கள். உங்கள் பிராண்ட் வேல்யூ எப்படி எகிறுகிறதென்று பாரு ங்கள் என்கிறார்.
தலைவனாகுங்கள்!
ஒத்தை ஆளாக என்னதான் தலைகீழாக நின்றா லும் ஓர் அளவுக்கு மேல் சாதனை ஏதும் செய்ய முடியாது. அதனால் நல்லதொரு லீடராக மாறு வதற்கான முயற்சிகளை ஆரம்பத்திலிருந்தே எடுங்கள். அப்போதுதா ன், நீங்கள் நாளடைவில் மற்றவ ர்களிடமிருந்து வெற்றிகரமாக வேலை வாங்கி உங்கள் புகழை நிலை நாட்ட முடியும் என்கிறார் ஆசிரியர்.
அது எப்படிங்க லீடராகிறது என்கி ன்றீர்களா? மூன்றே விஷயம்தா ன் முக்கியம் என்கி றார் ஆசிரியர். தியரியை விட்டுவிட்டு பிராக்டிக் கலாக நடந்து கொள்ளுங்கள் (ஆபீ ஸ் பத்து மணி க்கு என்றால், முதல் நாள் இரவு 11 மணிக்கு வீட்டுக்குச் சென்றவரை அடுத் தநாள் காலை 9.59-க்கே சீட்டில் இருக்கவேண்டும் என்று கட்டாயம் செய்யாதீர்கள்). உங்களு க்கு எது தெரியாது என்று தெரிந்து கொள் ளுங்கள். சுற்றி இருப்பவர்களிடம் நியாய மாக நடந்து கொள்ளுங்கள். இந்த மூன்று ம் உங்களை நிச்சயமாக லீட ராக்கும் என் கிறார்.
பாஸைப் புரிந்துகொள்ளுங்கள்!
அடுத்தபடியாக, இளம்வயதில் நீங்கள் கம்பெனிக்காக உழைத்துக் கொ ட்டுவீர்கள். உங்கள் உயரதிகாரி ஏசி-ரூமில் உட்கார்ந்துகொண்டு இன்செ ன்டிவ் வாங்குவார். அவரும் உங்களை ப் போல் எங்காவது உழைத்துக் கொட்டி விட்டுதான் இப்போது மேலே உட்கார்ந் திருக்கிறார் என்ற நிதர்சன உண்மை யைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். இந்த நிலை குறித்து புலம்பாதீர்கள் என்று சொல்லும் ஆசிரியர், உங்களு டைய பாஸ் ஒரு முட்டாளாக இருந்தா லும் உங்கள் வேலை எப்படி சிறப்பாக இருக்கிறது என்பதை டாப்-மேனேஜ்மெ ன்ட் பார்க்க அவரைத்தான் உபயோகி க்கும். அவர் முட்டாளாக இருந்தாலும் அவரிடத்தில் இருக்கும் பவர் நிஜமான து. எனவே, அவரை கவனமாகக் கையாளுங்கள் என்கிறார் ஆசிரியர்.
பாஸுக்கு வேண்டிய மூன்று!
பாஸின் அன்பைப் பெற என்ன செய் ய வேண்டும் என்று கேட்டீர்கள் என் றால், ஓர் அலுவலகத்தில் வேலை ரீதியாக உங்களிடமிருந்து பாஸிற்கு என்னென்ன விஷயங்கள் வேண்டும் என்று மூன்று விஷயங்களைப் பட்டி யலிடுகிறார். ஒன்று, உங்களுடைய நன்றி விசுவாசம். இரண்டு, நீங்கள் தரும் உருப்படியான அட்வைஸ். மூன்று, அவரு டைய மதிப்பை நீங்கள் கூட்டும் வகையில் நட ப்பது. இந்த மூன்றையும் சரிவரச் செய்யத் தவறினால் தேறுவது கடினம் என்று சொல்லும் ஆசிரியர், இந்த மூன் றாவது காரணத்தால்தான் ஒரு முட்டாள் பாஸைக்கூட நீங்கள் மற்றவரிட த்தில் முட்டாள் என்று விமர்சிக்கக்கூடாது என் கிறார்.
பாஸ் பற்றி புகார் வேண்டாமே!
முட்டாள்களிடம் நிஜமான அதிகார ஆயு தம் இருக்கிறதே! எனவே பாஸைப் பற்றி அவரின் பாஸிடம் புகார் சொல்லாதீர் கள் (அவராகக் கேட்டால் தவிர – அப்போதும் ரொம்பவும் யோசனைக்கப்புறம் சொல்வ தைப்போல் சொல்லவேண்டும்) என்று சொல்லும் ஆசிரியர், அது நீங்கள் நன்றி விசுவாசம் இல்லாத ஆளென்ற தோற்ற த்தைக் கொண்டு வந் துவிடும் என்று சொல்கிறார். மிக மிக முக்கியமாக பாஸின் திறமைக்கு மெருகேற்றுவது உங்களுடைய கடமை என்பதை மனதில் வையுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், பாஸை மட்டம் தட்டி உங்க ள் திறமையை வெளிக் காண்பிக்கும் நிகழ்வுகள் எதையுமே தப்பித் தவறிக் கூட நடத்தி விடாதீர்கள் என்கிறார்.
மூன்றுவிதமான மனிதர்கள்!
அண்டிப்பிழைப்பவர்கள், எப்போதும் எதிர்க்கருத்து சொல்பவர்கள், நடு நிலையாளர்கள் என்ற மூன்றே விதமான மனிதர்களே அலுவலகத்தில் இருப்பார்கள் என்று சொல்லும் ஆசிரியர், அண்டிப் பிழைக்கின்றவனை ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் பாஸிற்கு பிடிக்காமல் போகும் என்று சொல்கிறார். எதிர்க்கருத்து பாஸிற்கு அவ்வப்போ து தேவைப்பட்டாலும் அவரால் பெரிதும் ரசிக்கப்ப ட்டாலும்கூட எதிர்க்கருத்து நபர் என்ற கவர்ச்சிகர மான பாதாளத்தில் விழுந் து விடாதீர்கள் என்று எச்ச ரிக்கிறார். நல்ல சமயோசிதமான யோசனைக ளைச் சொல்லும் நடுநிலையாளர் என்ற நிலை ப்பாட்டை நீங்கள் எடுப்பது மட்டுமே உங்களை எப் போதும் சமமான மற்றும் சரியான பாதை யில் எடுத்துச்செல்லும் என்கிறார் ஆசிரியர்.
பலனை எதிர்பாருங்கள்!
எல்லா பாஸும் உங்களை உபயோகித்து ஆதாயம் தேடவே முயல்வா ர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனாலும், வெளிப்ப டையா கத் தெரியாமல் உங்கள் பாஸை உப யோகித்து நீங்கள் முன்னேறிக்கொள் வதில்தான் உங்களுடைய திறமையே இருக்கிறது என்கிறார் ஆசிரியர். உங்க ள் பாஸிடம் நீங்கள் இரண்டே விஷய ங்களை எதிர்பார்க்க வேண்டும். ஒன்று, உங்கள்மீது அவர் வைக்கும் நம் பிக்கை. இரண்டு, உங்கள் வேலைக்கு அவ ர் தரும் மரியாதை மற்றும் பலன் இந்த இரண்டையும் தாண்டி அவருக்கும் உங்க ளுக்கும் வேறு எந்த இணைப்புப் பாலமும் இருக்க வாய்ப்பே இல்லை என்று அட்வை ஸ் செய்கிறார்.
பாஸை மட்டும் நம்பாதீர்கள்!
பாஸ் உங்கள் மீது வைக்கும் நம்பிக்கையே உங்களை அட, இவன் கொ ஞ்சம் வேலை பார்ப்பான்போல என டாப்-மேனேஜ்மென்ட் கண்ணில் படவைக்கும் என்று சொல்லும் ஆசிரியர், ஆரம்ப கால வேலையில் பணத்தை விட அனுபவம் பெ றுவதே முக்கியம் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள் என நறுக்கென்ற உண்மையைச் சொல்கிறார். ‘பாஸ், எனக்கு தகப்பன் மாதிரி’ என் கிற உடான்ஸெல்லாம் வேண்டாம். ஏனென்றால் உங்கள் பெற்றோர்கள் உங்கள் வளர்ச்சிக்காக தியாகம் பலவற்றைச் செய்வார்கள். உங்கள் பாஸ் நிச்சயம் அதில் ஒரு துளி கூடச் செய்ய மாட்டார் என்கிறார். உங்கள் பாஸ் உங்க ளுக்குச் செய்யும் நல்லது எல் லாமே அவருடைய பிராண் டை வளர்க்கக் கொஞ்ச மாவது உதவுவதாக இருக்குமே தவிர, தன்னலமற்ற தியாகமாக இருக் க வாய்ப்பேயில்லை என்பதை ப் புரிந்துகொள்ளுங்கள் என்று சொல்கிறார் ஆசிரியர்.
கடைசியாக..!
இருக்கும் வேலையில் உங்களால் புதிதாய் ஒன்றும் கற்றுக்கொள்ள வும் முடியவில்லை, அலுவலகத்தில் உங்க ள் பிராண்டை பில்ட் செய்யவும் முடியவி ல்லை என்றால் உடனடியாக அந்த வேலை யிலிருந்து கிளம்பவும் என்று அலாரம் அடிக் கின்றார் ஆசிரியர்.
நம்மில் பெரும்பாலானோருக்கு வேலையி ல் வெற்றியே வாழ்வின் வெற்றி. அதனால் அனைவருமே படிக்கவேண்டிய சரியான புத்தகம் இது.
No comments:
Post a Comment