Monday, October 14, 2013

பாவம் மற்றும் புண்ணியம் பற்றி வள்ளலார் அருளிய விளக்கம்

பாவம் மற்றும் புண்ணியம் பற்றி வள்ளலார் அருளிய விளக்கம்

புண்ணிய பாவங்கள் நம்மை எவ்வாறு அடைகின்றன?

மனம்
வாக்கு...
காயம்
என்னும் மூன்றினாலும் அடையும்.

மேலும்,
மனத்தினிடத்தில் நால்வகையும்,
வாக்கினிடத்தில் நால்வகையும்,
சரீரத்தினிடத்தில் நால்வகையும்,
ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மை யடையும். 

அவையாவன:-

மனத்தினால் :
பரதாரகமனம் பண்ண நினைத்தல்,
அன்னியருடைய சொத்தைக் கிரகிக்க நினைத்தல்,
அன்னியருக்குத் தீங்குசெய்ய நினைத்தல்,
முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமையடைதல் ,
இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள்.

வாக்கினால் :
பொய்சொல்லல்,
கோட்சொல்லல்,
புறங்கூறல்,
வீணுக்கழுதல் –
இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவங்கள்.

தேகத்தினால் :
பிறர் மனைவியைத் தழுவுதல்,
புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல்,
அன்னியர்களை இம்சை செய்தல்,
தீங்குசெய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரஞ் செய்தல்
இந்நான்கும் தேகத்தா லுண்டாகும் பாவங்கள்.

பாவங்களாலடையுங் கதி யென்ன?
மனத்தால் செய்யும் பாவங்கட்குச் சண்டாளாதி சரீரமுண்டாகும்.
வாக்காற் செய்த பாவங்கட்கு மிருகம் முதலான சரீரமுண்டாகும்.
தேகத்தால் செய்யும் பாவங்கட்கு மரம் முதலான சரீரமுண்டாகும்.
இவை போன்றவைகளைத் தவிர்த்து :

இவை மனத்தால் வரும் புண்ணியங்கள்.
அன்னியர்களுக்கு நன்மை யுண்டாக நினைத்தல்,
பொறாமை யடையாதிருத்தல்,
அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல்,
தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல் .

இவை நான்கும் வாக்கினா லுண்டாகும் புண்ணியங்கள்.
பொய் சொல்லாமை,
கோட்சொல்லாமை,
இன்சொல்லாடல்,
தோத்திரம் செய்தல் –

அன்னியர்களுக்குத் தீங்குண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான கிருத்தியங்க ளெல்லாம் தேகத்தாலுண்டாகும் புண்ணியங்கள்.Mehr anzeigen

No comments:

Post a Comment