Sunday, September 22, 2013

தியானம்

தியானம் என்பது மன அமைதி பெற மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் ஒரு பயிற்சி ஆகும். இது இந்தியாவில் தோன்றிய யோகக்கலையை போன்ற பயிற்சி ஆகும். பெரும்பாலும் கடவுளை நினைத்தே தியானம் செய்யப்படுகிறது. இக்கலையை அக்காலத்தில் முனிவர்களும் யோகிகளும் அமைதியான இடங்களில் மேற்கொண்டனர். மிக உன்னத மனிதவளக் கலைகளில் தியானமும் ஒன்று.பொதுவாக ஒவ்வொரு மனிதரும் விரும்புவது ஆரோக்கியத்தையும் அமைதியையும் சந்தோஷத்தையும்தான். ஆரோக்கியம் என்பதை நிச்சயமாக உருவாக்கிக் கொள்ளமுடியும். தியானம் என்ற தன்மை நமக்குள் வந்துவிட்டால், அமைதியும் சந்தோஷமும் இயல்பானவை ஆகிவிடும்.

தியானம் என்பது செயல் அல்ல, அது ஒரு நிலை. வாழ்க்கையே தியானநிலையில் இருக்கவேண்டும் என்பது தான் நம் நோக்கம். ஏதோ பத்து நிமிடங்களுக்கு கண்ணை மூடி அமர்வதைப் பற்றி நாம் பேசவில்லை. எதைச் செய்தாலும் தியான நிலையில் செய்வதைப் பற்றி பேசுகிறோம். இந்தத் தன்மையையே நமது வாழ்வில் கொண்டுவர விரும்புகிறோம். அப்படி நடந்தால் ஆரோக்கியமாக இருப்பது, அமைதியாக இருப்பது, ஆந்தமாய் இருப்பது என்பதெல்லாம் முயற்சியின்றி நடக்கு...ம். 

தியானத்தின் தன்மை அப்படிப்பட்டது. ஒரு மனிதன் இப்படி இருந்தால் அவனது உடல், மன செயல்பாடுகள் ஒருமுகப்பட்டும் கூர்மையுடனும் இருக்கும். ஒரு மனிதர் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும் போது மட்டுமே அவரது புத்திசாலித்தனம் சிறந்த முறையில் செயல்படும்.

தியானத்தால் ஏற்படும் நன்மைகள்:

1) அறிவுக் கூர்மை ஏற்படும்.

2) மன உறுதி உண்டாகும்.

3) மனம் ஆனந்த அமைதியில் திளைக்கும்.

4) பிரச்சனைகளை எளிதாக தீர்க்க கூடிய மன வலிமை ஏற்படும்.

5) ஞாபக சக்தி அதிகரிக்கும்.

6) நம்மை சுற்றி நல்ல அதிர்வு அலை ஏற்படும்.

7) நல்ல நண்பர்களும், நல்ல சூழ்நிலைகளும் சூழும்.
முகம் பிரகாசமடையும்.

9) மனதிற்கு எஜமானனாகலாம். நாம் சொல்வதை மனம் கேட்கும்.

10) பழக்கத்திலிருந்து விடு படக் கூடிய மன சக்தி கிட்டும்.

11) மனம் அமைதி அடைவதால் பரபரப்பு குறைந்து உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும்.

12) தேவையற்ற கோபம் போகும்.

13) மாணவர்களுக்கு படிப்பில் விருப்பம் ஏற்படும். நல்ல பழக்கங்கள் உண்டாகும்.

14) மன ஒருமைப்பாடு உண்டாகும்.

15) மனம் கட்டுப் பாட்டில் இருப்பதால் தேவையற்ற எண்ணங்கள் குறையும்.

ஆதலினால் தியானிப்பீர்…!

No comments:

Post a Comment