யோகி என்பதற்குரிய அர்த்தம் என்ன? Print E-mail
‘’யோகி’’ என்று சிலர் அழைக்கப்படுகிறார்கள். யோகி என்பதற்குரிய அர்த்தம் என்ன?
வடமொழி இலக்கணத்தில் "யுஜ்' என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததே யோகம், யோகி என்ற சொற்கள். "ஒன்றோடு ஒன்றைச் சேர்த்தல்' என்பது இதன் பொருள். நமக்குப் பணம் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். திடீரென அந்த சமயத்தில் அது யாரிடமிருந்தாவது வந்து சேர்ந்தால், "யோகம் அடித்தது' என்று சொல்வது இதனால் தான். மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனோடு தன்னை ஒன்று சேர்த்து (ஐக்கியப்படுத்தி) கொண்டவர்களுக்கு "யோகி' என்று பெயர். பிராணாயாமம் முதலிய பயிற்சிகளைக் கூட யோகா என்ற பெயரில் அழைப்பதற்கும் இதுவே காரணம்
No comments:
Post a Comment