01. மெய் வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்
எவ்வௌர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பம் கொள்ளார்
கருமமே கண்ணாயினர் – குமரகுருபரர்.
02. நேசம் இருந்தால் விடுதியும் வீடு..!
பாசம் இருந்தால் வெட்ட வெளியும் அரண்மனை..!
இதயம் இருந்தால் இடுகாடும் சுவர்க்கம்..!
மனம் இருந்தால் மாட்டுக் கொட்டிலும் மாளிகை…!
03. எல்லா நலன்களின் இருப்பிடமும் வீடுதான்.. அதிலிருந்து பெற முடியாத நற்குணங்கள் இல்லை.. அதில் பெற முடியாத ஜீவ சக்தியும் இல்லை.
04. முதலில் வீட்டை வாழ்த்துவோம் அதுவே சுவர்க்கம்.. வீட்டில் அமைதி இல்லாதவன் வெளியில் எங்கு தேடினாலும் அதை அடைய முடியாது.
05. வீட்டை வாழ்த்தினால் வேதனைகள் தீரும்.. அருள் தன்மை கூடும்.. வளமை சேரும்.. அருளாற்றலின் பாதுகாப்பு கிடைக்கும்.
06. பூமியில் வளமை மிகுந்த இடம் வீடு அதைக் கோயிலாக வைத்திருப்போம்.. அமைதிக் கூடமாக வைத்திருப்போம்.. செழிப்பின் விளை நிலமாக வைத்திருப்போம்.
07. வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் அதனதன் இடத்தில் இருக்கட்டும், உடைந்து போன சீராக்க முடியாத பொருட்களை எறிந்துவிடுங்கள், அவை ஜீவகாந்தத்தை இழக்கச் செய்துவிடும்.
08. வீட்டை சுத்தமாக வைத்திருங்கள் வாரம் ஒரு முறையாவது அதைச் சுத்தம் செய்தால் மாதம் ஒரு முறை எல்லா அறைகளும் சுத்தமாகும்.
09. சுத்தம் வளத்தைக் கூட்டும் ஜீவ காந்தத்தைப் பெருக்கும்.
10. எமது இல்லம் மேன்மையின் ஊற்றுக்கண்.. பண்படுத்தப்பட்ட வாழ்க்கையையும், நிறைவான பழக்கங்களையும் அக்கறையுடன் பேணுகின்ற பண்பையும் இங்கே பெற்றுக் கொள்கிறோம்.
11. எமது இல்லம் இறைவனின் இருப்பிடம்.. இறைவனுடன் இங்கே வாழ்கிறோம்.
12. நாங்கள் வாழும் இடமெல்லாம் இறைவன் இருப்பதால் எல்லாமே மன நிறைவளிக்கக் கூடியதாக உள்ளது.
13. எங்கள் இல்லத்தில் எங்களது மனம், வாக்கு, காயம் ஆகியவற்றின் இயல்புகளை தூய்மையாக்கி சக்தியுள்ளதாக ஆக்குகிறோம்.
14. எங்கள் இல்லத்தில் தெய்வீகம் நிறைந்திருக்கிறது, அருள் ஒளி இங்கே நிறைந்திருக்கிறது. தெய்வீகமும் அருள் ஒளியும் இந்த வீட்டை சூழ்ந்திருக்கிறது.
15. வீட்டில் ஒவ்வொரு அறையும் தெய்வீக ஒளி நிரம்புவதாகவும், வீட்டில் உள்ளோர் அனைவரும் தெய்வீக ஒளியால் சூழப்பட்டிருப்பதாகவும் மனக்காட்சியாகக் காண்க. பிறகு வீட்டைச் சுற்றிலும், கூரைப்பகுதியிலும் தெய்வீக ஒளி சூழ்ந்திருப்பதாகக் காண்க.
16. இறைவனின் தெய்வீக ஒளி இவ்வீட்டிற்கு எல்லா நலன்களையும் கொண்டு வருகிறது, பாதுகாப்பாக இருக்கிறது என்று ஆழ்ந்து உணர்க.
17. மேலே சொல்லப்பட்வை அனைத்தும் ஒளித்தியானம் என்று சொல்லப்படும், இதையே தினசரி எண்ணி வரும்போது எதிர்மறை விளைவுகள் எல்லாம் மறைந்துவிடும்.
18. இவற்றை காலையும் மாலையும் சொன்னால் இல்லத்தில் காந்த அலைகள் பெருகும், ஒருவரோ இருவரோ வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து கொள்ளலாம்.
19. வீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்தால் நன்மை பெருகும், வீடு கோயிலாகும் வீட்டில் உள்ளோர் தெய்வ மக்களாவர்.
20. ஒரு மனிதன் தனக்கு வேண்டியதெல்லாம் தேடி உலகம் முழுவதும் பயணிப்பான் ஆனால் திரும்பி வந்தால் இல்லத்திலேயே அவையெல்லாம் இருக்கக் காண்பான் – ஜார்ஜ் மூர்
21. இல்லம் என்பது இனிமை… இனிமை… இனிமை மட்டுமே – சாள்ஸ் சுவைன்.
22. கடப்பதற்கு தடைகளும், வெல்வதற்கு போர்களும் இல்லாவிட்டால் வாழ்க்கை ஒன்றுமில்லாததாகிவிடும்.
23. உங்களுடைய பயங்களை உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் தைரியத்தை மக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ராபட் லூயிஸ் ஸ்டீவன்சன்
24. நண்பருக்கோ உறவினருக்கோ தனது கஷ்டங்களை சொன்னால் மனப்பாரம் குறையும், நல்லது ஆனால் கேட்பவர் மனப்பாரம் பற்றி யார் அறிவார்.
25. ஆறுதலளிப்பதும் கேட்பதும் சரி. ஆனால் எல்லோருடைய துன்பச் சுமைகளையும் சுமப்பதென்பது முட்டாளுடைய வேலை, சொல்பவனும் முட்டாள்.
No comments:
Post a Comment